Pages

Tuesday, November 11, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 13


ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஷ:।
அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥ 3.27 ॥


எண்ணும் பகுதிக் குணங்களினால் எவ்வகையும்
பண்ணும் கருமத்தைப் பாவிப்பன் -நண்ணும்
அகங்காரத் தால்மனதில் ஆர்மயக்கங் கொண்டோன்
மகிழ்ந்திதுநான் செய்வன் என மற்று.

எண்ணும் பகுதிக் குணங்களினால் எவ்வகையும் பண்ணும் கருமத்தைப் பாவிப்பன் -நண்ணும் அகங்காரத்தால் மனதில் ஆர்மயக்கங் கொண்டோன் மகிழ்ந்து இது நான் செய்வன் என மற்று.

(எல்லாச் செயல்களும் எல்லா விதங்களிலும் ப்ரக்ருதியின் குணங்களால் செய்யப்படுகின்றன. ஆயினும் அஹங்காரத்தால் மழுங்கிய அறிவை உடைய அஞ்ஞானி நான் கர்த்தா என்று நினத்துக் கொள்கிறான்.)

நம்ம வாழ்க்கையிலே இயற்கையா பல விஷயங்கள் நடக்குது.. கண் தானா பாக்கும், காது தானா கேட்கும். அரிச்சா தானா சொறிஞ்சுக்கிறோம். இதுல எல்லாம் செய்யணும்ன்னு ஒரு சங்கல்பம் -நினைப்பு- தேவை இல்லை. நாமோ ஓடுகிற ஒரு ரயில் வண்டிலே சும்மா உட்கார்ந்தபடி இருக்கலாம். போல இந்திரியங்கள் தானா அவற்றோட வேலைகளை செய்யும். அதுகளுக்கு என்ன செய்யணும்ன்னு அநாதிகாலமா வர வாசனைகளாலே - உணர்வுகளாலே தெரியும்.

நாலு குழந்தைகள் இருக்கும் குடும்பத்திலே எல்லாமே ஹைபர் ஆக்டிவா போயிட்டா நாலும் நாலு வேலைகளை செய்யும். சண்டை போட்டுக்கும். அடிச்சுக்கும், கடுச்சுக்கும், குலாவிக்கும். இன்னொண்ணு அது பாட்டுக்கு அதோட காரியத்தை கவனிச்சு கொண்டு இருக்கும். இதுகளை கட்டுப்படுத்தப்பாத்தா நாளுக்கு 48 மணி நேரம் போதாது! இப்படி பல விதமா குழந்தைகள் நடந்து கொண்டாலும் அவற்றோட அம்மா வெறும் சாட்சி மாத்திரமா இதுகள் இப்படித்தான் இருக்கும்ன்னு பார்க்கிறாப்போலே இந்திரியங்கள் பாட்டுக்கு அதததோட வேலையை செய்யும் போது விலகி பாக்கணும்.

நாம் செய்கிற எல்லா செயல்களையும் நானே செய்கிறேன் ன்னு நினைக்கக்கூடாது. அப்ப யார் செய்கிறாங்க? செய்கிறது நாம்தான்; ஆனாலும் தூண்டுகிறது முக்குணங்கள்தான். சத்வம், ரஜஸ், தமஸ் என்கிற இவை நம்மோட பிறந்தவை. இவற்றை கொஞ்சம் கொஞ்சம் மாத்த முடியும் ஆனாலும் அனேகமா அவை அப்படியேதான் இருக்கும்.

செய்தி பத்திரிகையிலே ஒரு விஷயம் படிக்கிறோம். இன்னார் இந்த போட்டியிலே இப்படி சாதனை செய்தார் ன்னு படிக்கிறோம். அட அப்படியான்னுட்டு அடுத்த செய்திக்கு போயிடுவோம். இதுவே நாம் லீக் கிரிக்கெட்டிலே பிசாத்து 25 ரன் அடிச்சு பேப்பர்லே செய்தி வந்தா அதை கட்டிங் எடுத்து ஆல்பத்திலே ஒட்டி வைப்போம். ஏன்? முன்னே படிச்ச சாதனை ரொம்பவே பெரிசானாலும் அதை நாம் செய்யலே.

நாமும் "நானா இதை செய்யலை, இந்த முக்குணங்களால தூண்டப்பட்டு செய்கிறேன்" என்கிற நினைப்போட செய்யணும். அப்ப கர்மாவிலே பலனை எதிர்பாக்கிறதிலே கொஞ்சம் கொஞ்சமா பற்றுவிட்டு போகும். கர்மா முக்குணங்களாலே செய்யப்பட்டதுன்னு தோணறப்ப அதை ஆல்பத்திலே ஒட்டி வைக்க மாட்டோம்.

அப்ப இப்படி செய்யலாமா? யாரையான நாலு சாத்து சாத்திட்டு அட! நானா அடிச்சேன்? உள்ளே இருக்கிற பகவான்தான் முக்குணங்களாலே தூண்டினான். அடிச்சது மட்டும்தான் இந்த உடம்பு என்கலாமா?

செய்யலாம். ஆனா ஒரு நிபந்தனை இருக்கு! இதை கேட்டுட்டு "நீ சொல்கிறது சரிதான். செஞ்சது மட்டும்தானே இந்த உடம்பு. அதனால இந்த உடம்பை மட்டுமே திருப்பி அடிக்கிறேன்" னு அடிச்சா அதை எதிர்ப்பில்லாம வாங்கிக்க முடியும்னா அப்படி செய்யலாம்!

ஒரு சாது மேல்நாட்டிலே வேதாந்த பாடம் எடுத்தார். கேட்டுகிட்டு இருந்த ஒத்தர் இப்படி கேள்வி கேட்டார்.
" அப்ப நீங்க இந்த உடம்பில்லையே?”
" இல்லை. “
"அப்ப இந்த உடம்பை நான் அடி அடின்னு அடிச்சா நீங்க வேடிக்கை பாத்துக்கொண்டு சும்மா இருப்பீங்களா? “
"இருப்பேன். அது மட்டுமில்லே அதை பாத்துட்டு இங்கே இருக்கிற மத்த உடம்புங்க உன் உடம்பை அடி அடின்னு அடிச்சாலும் வேடிக்கை பாத்துகொண்டு சும்மா இருப்பேன்.”


6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அப்படின்னா, "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்"னு சொல்றதெல்லாம் பற்றுன்னு எடுத்துக்கலாமா?.

திவாண்ணா said...

மௌலி,
எல்லாம் பற்றுல ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா எதுல பற்றுன்னு முன்னேறி அப்புறம் அதுவும் விடணும். நீங்க சொல்கிறது ஒரு இடைநிலைதானே!

Kavinaya said...

நல்ல நல்ல உதாரணமா சொல்றீங்களே. செய்தி பத்திரிகை உதாரணம் சூப்பர். "நாம் வெறும் இயந்திரம். இயக்குபவன் இறைவனே", என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொண்டே இருக்கணும்.

jeevagv said...

//அம்மா வெறும் சாட்சி மாத்திரமா //
சாட்சியும் அவனே சர்வமும் அவனே, காட்சியில்

திளைத்திடாமல் கர்மம் செய் மனமே!

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே

இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்

உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

திவாண்ணா said...

@ கவி அக்கா
/நல்ல நல்ல உதாரணமா சொல்றீங்களே.//

எதுவுமே புதுசு இல்லை. சொல்லுறவிதம்தான் வேறன்னு ஒரு கான்செப்ட்.
பெரியவங்க எல்லாமே சொல்லி வெச்சு இருக்காங்க. நான் அதை கொஞ்சம் தற்காலத்துக்கு மாத்தறேன். :-))

//நாம் வெறும் இயந்திரம். இயக்குபவன் இறைவனே", என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொண்டே இருக்கணும்.//

அதே அதே! சொல்ல வந்தது அதேதான்.

திவாண்ணா said...

ஜீவா நல்லா இருக்கே! சாகித்தியம் நீங்களா? வேற யாரும் ஏற்கெனவே பண்ணதா?