Pages

Wednesday, November 12, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 14



தத்வவித்து மஹாபாஹோ குணகர்மவிபாகயோ:।
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே॥ 3.28 ॥


சொற்ற குணத்தின் தொழிலின் பிரிவதனைப்
பற்றியநல் உண்மையினைப் பாங்கறிவான் - மற்றவைதாம்
இந்தியங்கள் தம்விடயத் தேயியங்கல் என்றுணர்ந்து
மைந்துதரும் பற்றடையான் மற்று.

சொற்ற குணத்தின் தொழிலின் பிரிவு அதனைப் பற்றிய நல் உண்மையினைப் பாங்கு (நன்கு) அறிவான் - மற்றவை தாம் இந்தியங்கள் தம் விடயத்தே இயங்கல் என்று உணர்ந்து மைந்து (மயக்கம்) தரும் பற்றடையான் மற்று.

(ஆனால் நீண்ட புஜங்கள் உடையவனே! குணங்களின் பிரிவு, கர்மங்களின் பிரிவு - இவற்றின் தத்வம் அறிந்த ஞானி -யோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்றுக் கொள்ளாதிருக்கிறான்.)

நல்ல விஷயங்களை படிக்கிறது, பளிச்சுன்னு புரிஞ்சுகிறது, மேலே மேலே சாஸ்திரங்கள் சொன்ன நல்ல காரியங்கள்ள ஈடுபடறது, மற்றவங்களுக்கு உதவறது, அமைதியா இருக்கிறது. இப்படிப்பட்டது எல்லாம் சத்வ குணத்தால வருது. இதில வர தெளிவு, ஊக்கம், முயற்சி, அமைதி எல்லாம்தான் அந்த குணத்தோட கர்ம வெளிப்பாடு.

ரஜோ குணம் கோபம், ஆசை, மேலே மேலே தேவைகளை பெருக்கிவிடறது. இந்த கோப தாப உணர்ச்சிகள் கொப்பளிப்பு உள்ள காரியங்கள் ரஜோ குண கர்ம வெளிப்பாடு.

தமோ குணம் ஊக்கமில்லாம இருக்கிறது, தூக்கம், சோம்பல், மயக்கம், குழப்பம் இதெல்லாம் தருது. இந்த குணத்தோட வெளிப்பாடு எப்படி இருக்கும்ன்னு ஊகிக்கமுடியுது இல்ல?

இதில மூன்று வித மனிதர்கள், மூணு குணங்கள்ன்னு கிடையாது. ஒத்தருக்கே இந்த மூணும் இருக்கும். ஏன் நாம எல்லாருமே இந்த மூணு குணங்களும் இருக்கிறவங்கதான். என்ன ஒவ்வொத்தருக்கு ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைச்சலா இருக்கும். இன்னும் சொல்லப்போனா ஒத்தருக்கே எல்லா நேரமும் ஒரே மாதிரி குணம் இருக்கிறது இல்லை. அப்பப்ப கோபப்படுகிறோம்; அமைதியா இருக்கிறோம்; தூங்கி வழிகிறோம். "என்னடா ஆச்சு இவனுக்கு இன்னிக்கு ஒரேயடியா தூங்கி வழியறானே/ கோபப்படறானே!" இப்படி எல்லாம் நாமே சொல்கிறது உண்டு இல்லியா?

இந்த குணங்கள்தான் ஒரு குறிப்பிட்ட நேரத்திலே நாம எப்படி செயல்படுவோம் ன்னு நிர்ணயம் செய்யும். நமது வேலை அதன்படி அமையும். "அந்த நேரத்திலே நான் கோபப்பட்டு இருக்கக்கூடாது. நிதானமா பதில் சொல்லி இருக்கணும்; பயந்து இருக்ககூடாது, வீரத்தோட எதிர்த்து இருக்கணும்; ஏன் அப்படி செஞ்சேன்னு புரியலே” இப்படி எல்லாம் நாமே யோசிக்கிறது உண்டு இல்லையா?

ஆக குணங்களாலே தூண்டப்பட்டுதான் பல விஷயங்களை செய்யறோம். இதை புரிஞ்சு கொண்டே வேலைகளை செய்யணும். அப்படி செய்ய செய்ய கர்மத்திலே பற்று விட்டுப்போகும். பற்றில்லாத கர்மா நம்மை முன்னேற்றும்.

ப்ரக்ருதேர்குணஸம்மூடா: ஸஜ்ஜந்தே குணகர்மஸு।
தாநக்ருத்ஸ்நவிதோ மந்தாந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத்॥ 3.29 ॥


பகுதிக் குணத்தாலே பற்றிமயக் குற்றார்
புகலக் குணத்தொழிலில் புந்தி- மிகவுறுவர்
எல்லாம் உணர்ந்திடுவான் அவ்வுணர்ச்சி இல்லாரை
ஒல்லாது காண்கலக்கல் உற்று

பகுதிக் குணத்தாலே பற்றி மயக்குற்றார் புகலக் குணத்தொழிலில் புந்தி மிகவுறுவர் எல்லாம் உணர்ந்திடுவான் அவ்வுணர்ச்சி இல்லாரை ஒல்லாது காண் கலக்கல் உற்று.

(ப்ரக்ருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறைமதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.)

குணங்களாலே தூண்டப்பட்டுதான் வேலை செய்கிறேன்ன்னு புரிஞ்சுக்காதவங்களைதான் இங்கே அஞ்ஞானி என்கிறான் கண்ணன். இவர்களுக்கு அந்த வேலைகளால இன்ப துன்பங்கள் உண்டாகும். யார் அதை புரிஞ்சு கொண்டாங்களோ அவர்களுக்கு இன்ப துன்பங்கள் உண்டாகாது. அவர்கள் ஞான வழில முன்னேறுவாங்க.

அறிவு இருக்கிற ஞானி ஒவ்வொத்தருக்கும் தகுந்தபடி உபதேசம் செய்யணும்.

"இதெல்லாம் நல்ல காரியம் செய்யணும்பா" ன்னோ, "வேலை செய்கிறதுதான் செய்யறே, பற்றில்லாம பண்ணுப்பா" ன்னோ, புரிஞ்சுக்ககூடியவங்களுக்கு இதையும் சொல்லி ஏன் அப்படின்னும் சொல்லாம். எல்லாருக்கும் ஒரே விஷயத்தை சொல்லி அவங்களை குழப்பக்கூடாது. இல்லைனா "ஞான மார்க்கம் எவ்வளோ உசத்தி தெரியுமா?"ன்னு சொல்லி குழப்பக்கூடாது.

7 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா போட்டுக்கறேன். :)

jeevagv said...

இம்முக்குண்ங்களை மாற்றி அமைக்க இயலும் என்கிறபடி ஏதும் சொல்லவில்லையே - பின்னால் வருமா?

jeevagv said...

இன்னொரு முயற்சி:

முக்குணம் தான்மூலம் எனவறிவார்க் கில்லையே
எக்கணமும் எண்ணத்தில் சிலுகு.

(சிலுகு - கூச்சல், குழப்பம், துன்பம்)

Kavinaya said...

முக்குணங்கள் பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க. நன்றி.

Geetha Sambasivam said...

//இதில மூன்று வித மனிதர்கள், மூணு குணங்கள்ன்னு கிடையாது. ஒத்தருக்கே இந்த மூணும் இருக்கும். ஏன் நாம எல்லாருமே இந்த மூணு குணங்களும் இருக்கிறவங்கதான். என்ன ஒவ்வொத்தருக்கு ஒவ்வொண்ணு அதிகமா இருக்கும்; குறைச்சலா இருக்கும். இன்னும் சொல்லப்போனா ஒத்தருக்கே எல்லா நேரமும் ஒரே மாதிரி குணம் இருக்கிறது இல்லை. அப்பப்ப கோபப்படுகிறோம்; //

சரி, சரி, புரியுது நல்லாவே, :P ஜீவா கேட்டிருக்கிறதுக்குப் பதில் பதிவா வருமோ??

திவாண்ணா said...

எல்லாருக்கும்:
கொஞ்ச நாட்களாக வேலை கடுமையால / உடல் நிலை பாதிப்பால பின்னூட்டங்களுக்கு பதில்கள் சரியா போட முடியலை. பதிவுகளை முன்னாலேயே எழுதி ஷெட்யூல் பண்னதாலே அதுல பிரச்சினை இல்லை.

மன்னிக்கணும். இப்பதான் ஒவ்வொண்ணா பாத்து கொண்டு வரேன். இந்த பதிவில யாருக்குமே பதில் போடலைன்னு தெரியுது.

திவாண்ணா said...

@ மௌலி மார்க்ட் பெரெசன்ட்!
@ ஜீவா
முன்னாலேயே பக்தி யோகம் பத்தி பாத்தப்ப உணவு சம்பந்தமா எழுதி இருக்கேனே?
ஆனா இது கொஞ்சம் முக்கியமாக விஷயம்தான். கீதா அக்கா சொல்கிறாப்பல ஒரு பதிவே வேணும் போல இருக்கு. பாக்கலாம்.
@கவி அக்கா, நன்னி!
@ கீதா அக்கா பதிவாவே பாக்கலாம்.. விஷ் லிஸ்ட்.