Pages

Tuesday, November 25, 2008

பரிட்சை!



பயப்படதீங்க ! பரிட்சை எனக்குத்தான்! :-)

நாளைய பதிவோட கர்ம வழி ஒரு வழியா நிறைவுக்கு வரும். ஆரம்பிச்சப்ப இவ்வளவு விரிவா எழுத நினைக்கவே இல்லை. அது பாட்டுக்கு இழுத்து கொண்டு போய்விட்டது. ம்ம்ம்ம்.. சரி, இவ்வளோ நாள் எழுதினோமே புரிகிறா மாதிரி எழுதினோமா என்ன ன்னு ஒரு சின்ன சந்தேகம். அதனால ஒரு பரிட்சை.
இந்த கர்ம வழி பதிவுகளை படிச்சதிலேயும் முன்னமே தெரிந்ததிலேயும் சுருக்கமா (ஒரு 500 வார்த்தை?) அதைப்பத்தி உங்க வார்த்தைகளிலேயே எழுதுங்க.  what is your take on karma yoga?) அதை படிச்சா நான் ஒழுங்கா வேலை செஞ்சேன்னான்னு தெரிஞ்சுடும்.
பின்னூட்டமாவும் இடலாம். தனி அஞ்சலாவும் அனுப்பலாம். இல்லை உங்க ப்ளாக்லேயும் எழுதலாம். எப்படி வேண்ணா பண்ணலாம். நேரமில்லைன்னு கட் அடிக்கப்படாது அம்பி, சொல்லிட்டேன்!
அனுப்ப கடைசி நாள் வருகிற ஞாயிறு இரவு (இந்திய நேரப்படி).
மின்னஞ்சல் அனுப்பறவங்க  எழுதறதை வெளியிடலாமா கூடாதான்னும் அவங்க குறிப்பு எழுதணும். வேண்டாம்ன்னு எழுதாட்டா அதில இருக்கறது வெளீயிட்டாலும் வெளியிடுவேன்.
திங்கள் கர்ம யோகம் பத்தி என்னோட ஸம்மிங்க் அப் இருக்கும். செவ்வாய் பரிட்சை ரிசல்ட்! (பிள்ளையாரே, உனக்கு ஒரு தேங்காய் உடைக்கிறேன், நான் பரிட்சைலே பாசாகணும்!)
:-))

5 comments:

Geetha Sambasivam said...

//இந்த கர்ம வழி பதிவுகளை படிச்சதிலேயும் முன்னமே தெரிந்ததிலேயும் சுருக்கமா (ஒரு 500 வார்த்தை?) அதைப்பத்தி உங்க வார்த்தைகளிலேயே எழுதுங்க. what is your take on karma yoga?)//

பரிட்சை கொடுத்துட்டு இல்லைனு சொல்றது என்ன நியாயம்?? இதுபரிட்சை இல்லைனா என்னவாம்?? ரிவிஷன் பண்ணணும், பண்ணிட்டுத் தான் எழுதணும்.

திவாண்ணா said...

இது எனக்கான பரிட்சை!
எனக்கு பகவான் கொடுத்த வேலை மத்தவங்களுக்கு புரியறா மாதிரி ஆன்மீகம் பத்தி எழுதறது. அதில நான் பாசா பெயிலான்னு தெரிய உங்களை எழுத சொல்றேன். பெரும்பாலானவர்களுக்கு புரிஞ்சுதுன்னு தெரிஞ்சா நான் பாஸ்!
ஆக பாஸ் பெயில் எனக்குத்தான், உங்களுக்கு இல்லே!

மெளலி (மதுரையம்பதி) said...

எங்களுக்கு அஸெயின்மெண்ட் குடுத்து, அதையே உங்களுக்கு கல்-வச்ச வாரமாக்கிட்டீங்க... :)

[கல்வச்ச வாரம் அப்படிங்கறது சரிதானே?, ஏதோ அந்தமாதிரி தான் படித்த நினைவு]

jeevagv said...

ஆகா, அப்படியா சேதி, நல்லது!
இப்போதான், கடந்த நான்கைந்து பகுதிகளை படிச்சு முடிச்சேன்!
ஞாயிறுக்குள்ளே எழுதி அனுப்பறேன்!

திவாண்ணா said...

@ மௌலி, சரிதான்.
உங்களுக்கு வேலை வெச்சு எனக்கு பரிட்சைன்னு சொல்கிறதுல... நான் புத்திசாலிதான் போல இருக்கு!

@ ஜீவா, நல்லது. குறைஞ்சது ஒரு ஆன்சர் பேப்பர் ரெடி!