தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர।
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ:॥ 3.19 ॥
ஆதலினாற் பற்றற் றமரியற்பாய் நின்கரும
நீதகவு தன்னுடனே நின்றியல்வாய்- மீததனைப்
பற்றற் றியன்றாற் பரமா முயிரினையே
பெற்றத்தை நின்றுய்யும் பின்.
ஆதலினால் பற்றற்று அமர்(ரும்) இயல்பாய் நின் கருமம் நீ தகவு தன்னுடனே நின்று இயல்வாய். மீது அதனை பற்றற்று இயன்றால் பரமாம். உயிரினையே பெற்றத்தை நின்று உய்யும் பின்.
(ஆகவே பற்றின்றி எப்பொழும் ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிரு. ஏனெனில் பற்றின்றிக் கர்மங்களைச் செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.)
யாருக்கு அப்படி ஆத்ம தரிசனம் இன்னும் கிடைக்கலையோ அவங்க கர்ம யோகத்தை செய்ய வேண்டியதுதான். அதாவது தனக்கு விதிச்ச கர்மாவை பற்று இல்லாம செய்ய வேண்டியது.
இந்த விருப்பு வெறுப்பு இல்லாம செய்கிறது என்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். அது என்ன ஒரு தொப்பியா சட்டையா கழட்டி வைக்கிறத்துக்கு? ஏதோ ஒரு விஷயம் வேணும்ன்னுதான் நாம் வேலையே செய்யறோம். எடுத்த எடுப்பிலேயே இப்படி விருப்பு வெறுப்பு இல்லாம செய்ய முடியாது. விருப்பு வெறுப்புதான் நம்மளோட தனித்தன்மை- இன்டிவிஜுவாலிடி. அதை இழக்க யாரும் தயார் இல்லை. இந்த கருத்த கேட்கிற மேல் நாட்டு மக்களுக்கு இந்த விஷயம்தான் அதிர்ச்சியா இருக்கும், ஏன் என்னோட தனித்தன்மையை இழக்கணும்?
அதுக்குத்தான் கண்ணன் முன்னேயே சுலபமான வழியச் சொன்னான். பலன்ல ஆசை வைக்காதே. அதில் உனக்கு அதிகாரம் இல்லை.
சரி எதை செய்யணும் என்கிறதுல உன் தனித்தன்மைய காட்டு. ஆனா பலன்ல பற்று வைக்காதே. இப்படிதான் நடக்கணும்ன்னு எதிர்பாக்காதே. நினைச்ச மாதிரி நடந்தா துள்ளி குதிச்சுண்டும் இல்லைனா மூஞ்சிய தூக்கி வெச்சிகிறதும் - இப்படி பலன் நம்ம இமேஜ பாதிக்க விடக்கூடாது. நினைச்சப்படி நடக்கிறதால நாம பெரிய ஆளும் இல்ல, நடக்காததால சின்ன ஆளும் இல்லை. எது கிடைக்கிறதோ அத எதிர்க்காம ஏத்துக்க. இப்படி செய்து கொண்டே வந்தா நாளடைவில கொஞ்சம் கொஞ்சமா விருப்பு வெறுப்பு தானா அடங்கிடும். இப்படி விருப்பு வெறுப்பு அடங்கினாதான் நாம இந்த உலகத்த உள்ள படியே பாக்க ஆரம்பிப்போம். இல்லைனா ஒரு கலர் கண்ணாடி வழியாதான் பாப்போம். அப்படி பாக்கிற வரை நமக்கு துன்பம்தான்.
6 comments:
உள்ளேன் ஐயா! :)))))
மார்க்ட் ப்ரெசென்ட்!
போன பதிவுல பதிலுக்கு நன்றி.
//நினைச்ச மாதிரி நடந்தா துள்ளி குதிச்சுண்டும் இல்லைனா மூஞ்சிய தூக்கி வெச்சிகிறதும் - இப்படி பலன் நம்ம இமேஜ பாதிக்க விடக்கூடாது. நினைச்சப்படி நடக்கிறதால நாம பெரிய ஆளும் இல்ல, நடக்காததால சின்ன ஆளும் இல்லை. எது கிடைக்கிறதோ அத எதிர்க்காம ஏத்துக்க. //
ஏதாகிலும் எதிர்க்காம ஏத்துக்கறது :-).
@கவி நயா
வெல்கம்!
@ மௌலி
கரெக்ட்!
நல்ல விளக்கம் ஐயா.
Post a Comment