Pages

Tuesday, November 4, 2008

கண்ணன் காட்டும் கர்ம வழி -- 8.


யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதாத்மத்ருப்தஷ்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸம்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்யதே॥
3.17

தன் விரும்பித் தன்னுகந்து தன்னமைந்த ஞானிக்குப்
பின்விரும்பிச் செய்கருமம் பெற்றில்லை- முன்விரும்பிச்
செய்தத்தா லொன்றில்லை செய்யாத்தா தாலில்லை
வையத்தா தும்பயனின் மற்று.

தன் விரும்பித் தன் உகந்து தன் அமைந்த ஞானிக்கு பின் விரும்பி செய் கருமம் பெற்றில்லை
. முன்விரும்பி செய்தத்தால் ஒன்றில்லை. செய்யாத்ததால் இல்லை. வையத்தால் ஏதும் பயன் இன் மற்று.

(ஆனால் எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் மேலும் ஆத்மாவிலேயே த்ருப்தி கொண்டவனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ, அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.)

நைவ தஸ்ய க்ருதேநார்தோ நாக்ருதேநேஹ கஷ்சந।
ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஷ்சிதர்தவ்யபாஷ்ரய:3.18

(அந்த மாமனிதன் இவ்வுலகில் கர்மங்களைச் செய்வதாலும் எந்தவிதமான பயனும் இல்ல. கர்மங்களைச் செய்யாவிட்டாலும் ஒரு பயனுமில்லை. அவ்வாறே உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டிய என்ற தொடர்பு சிறிது கூட இல்ல.)

கர்மாவை செய்யணும் என்பதிலே சிலருக்குதான் எக்சப்ஷன் சொல்லி இருக்கு. யாருக்கு ஆத்ம தரிசனம் கிடச்சாச்சோ அவன் ஒண்ணுமே செய்ய வேண்டியது இல்லை. ஏன்? இதால எல்லாம் என்ன கிடைக்கணுமோ அதுதான் ஏற்கெனவே கிடைச்சாச்சே? வழிலே போய்கிட்டு இருகிறவங்களைதான் இப்படி போ, அப்படி போன்னு சொல்லலாம். போக வேண்டிய இடத்துக்கு போய்விட்டவனுக்கு அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே?

ஆத்மாவையே கண்டு கேட்டு முகர்ந்து இருக்கிறவன் இவன். அவன் ஆத்மாவிலேயே ரமிக்கிறான்.

உதாரணமா சுக பிரம்ம ரிஷி இருந்தாரே. அவர் என்ன கர்மா செய்தார்? என்ன அனுஷ்டானம் செய்தார்? அவருக்கு அதெல்லாம் தேவை இல்லை.

அவர மாதிரி நானும் இருக்கேன்; ஒரு ஆசாரமும் அனுஷ்டானமும் வேண்டாம்ன்னு நாம் சொல்ல முடியாது. ஏன்?

கர்மா ஏதும் செய்யாத அதே சமயம் அவருக்கு சாப்பாடுன்னு ஒண்ணு கிடச்சாலும் சரி கிடைக்கலேனாலும் சரி, பிரச்சினை இல்லை. அப்படி ஒரு நிலைக்கு போய்விட்டவர். நாம் அப்படி இல்லையே? உலகத்திலே ஒண்ணு வேணும் என்கிற நிலை இருக்கிற வரை நமக்கான வேலையை செய்துதான் ஆகணும். இது நன்றி, தர்மம் என்கிறதுக்காக செய்யணும். பயனுக்காக இல்லை.



6 comments:

Geetha Sambasivam said...

சரியான உதாரணம் தான் சுகப்ரம்ம ரிஷி. அவர் பிரம்மமே என்று கூப்பிட்டுக் கொண்டு போகும்போது புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பூ, இலை, காய், நதி, மலைகள்னு எல்லாமே என்ன, என்ன என்று கேட்டதாமே?? அதைப் பத்தியும் கொஞ்சம் விபரம் கொடுக்கலாமோ?????

திவாண்ணா said...

இல்லியே? அவரோட அப்பா சுகா சுகான்னு கூப்பிட்டுக்கொண்டு போன போதுதான் மரம் செடி கொடி எல்லாம் ஏன்னு கேட்டுது. அப்படித்தான் நினைவு.

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம்ம்???? இல்லைனு தோணுது, பார்க்கணும், தெய்வத்தின் குரலில் இருக்குனு நினைக்கிறேன். பார்த்துடறேன்.

Kavinaya said...

//உலகத்திலே ஒண்ணு வேணும் என்கிற நிலை இருக்கிற வரை நமக்கான வேலையை செய்துதான் ஆகணும். இது நன்றி, தர்மம் என்கிறதுக்காக செய்யணும். பயனுக்காக இல்லை.//

ம்... சரி... கடமையும் கர்மாவும் ஒண்ணா, வேற வேறயா?

(முட்டாள் கேள்வியா இருந்தா மன்னிக்கவும்)

திவாண்ணா said...

//ம்... சரி... கடமையும் கர்மாவும் ஒண்ணா, வேற வேறயா?//

வேற வேறதான்.
கர்மா என்கிறது எந்த வேலையையும் குறிக்கிற பொதுவான சொல்.

நமக்குன்னு தர்ம சாஸ்திரங்கள் விதிச்ச வேலை நம்ம கடமை.
நம்ம கடமையா இல்லாம பல விஷயங்களை செய்யலாம், செய்யாமவிடலாம். அதெல்லாம் ஒருவேலையாக ஆகிட்டதாலே கர்மா ஆகிடும்.

//(முட்டாள் கேள்வியா இருந்தா மன்னிக்கவும்)//
:-))

என்னைப்பொறுத்த வரை முட்டாள்தன கேள்வி புத்திசாலிதனமான கேள்வின்னு இல்லை. ஒரு விஷயம் தெரியலை/ சந்தேகமா இருக்கு. கேட்டு தெரிஞ்சுக்கிறோம். இதுக்கு தயங்கினா தெரியாமலே போயிடும். யார் என்ன நினைப்பாங்கன்னு யொசிக்காம கேட்கிறது நல்லது.அவ்ளோதான்!

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா போட்டுக்கறேன்.. :)