Pages

Wednesday, August 5, 2009

பிரம்ம ஆன்ம ஐக்கிய நிலையில்...




பிரம்ம ஆன்ம ஐக்கிய நிலையில் சீவன் என்ற தன்மை போய்விட்டது. அப்போது அடைந்து இருக்கும் நிலையே நிரந்தரமான தன் நிலை என்று புரிந்து போயிற்று. மாயை முதல் யாவும் கனவாக பறந்து விட்டன. பந்தம் முத்தி காலம் இடம் வஸ்து என ஒன்றுமே அங்கு இல்லை.

இது சகச நிஷ்டை. அதாவது சதா -எப்போதும்- நிஷ்டையில் இருப்பது.
நிஷ்டை 3 வகைப்படும்.

1. சவிகற்ப நிஷ்டை: ஆன்மாவை அணு அணுவாக தரிசித்தல் . இதில் அறிபவன், அறிவது, அறியப்படும் பொருள் என திரிபுடி உண்டு.

2. நிருவிகற்ப நிஷ்டை: ஆன்மாவை அகண்ட ரூபமாக தரிசித்தல். இது ஒரே பிரம்ம சொரூபமாக விளங்கும் அனுபவம்.

இவை சத்துவ குணத் தொழில்கள். இவற்றில் ஒருவன் எவ்வளவு காலம் இருந்தாலும் மீண்டும் வெளியாக வேண்டியதே. ஆகவே இதில் ஆரம்பமும் முடிவும் உண்டு.

3. சகச நிஷ்டை: காலம், தேசம், வஸ்து, தநு, கரணங்கள் முதலியன, தேகம், இந்திரியம் முதலிய ஒரு தோற்றமும் அரவும் இல்லாமல் மாயை இல்லாமல். இரண்டற்று எல்லாம் ஒரே அகண்டாகாரமாக முடிவில்லாமல் பிரகாசித்து ஒரே நிலையில் நிற்பது.

89.
மலடி மைந்தனுந் தாணுவிற் புருடனும் வான்மலர் முடிசூடி
இலகு கந்தர்ப்ப நகரிலே சுத்திகை யிரசதம் விலை பேசிக்
கலக மாயினா ரிடையினிற் கயிற்றராக் கடித்திரு வருமாண்டார்
அலகை யாயினா ரெனும்விவ காரத்தை யறிந்தவன் மயங்கானே

மலடியின் மைந்தனும், தாணுவின் (கைம்பெண்ணின்) புருடனும் வான்மலர் (ஆகாயத்தாமரை) முடி[யில்] சூடி இலகு கந்தர்ப்ப நகரிலே, சுத்திகை (கிளிஞ்சல்) [இல் தோன்றும்] இரசதம் (வெள்ளி) ஐ விலை பேசிக் கலகமாயினார். (சண்டை இட்டு கொண்டனர்) இடையினில் கயிற்று அரா (பாம்பு) கடித்து இருவரும் மாண்டார்; அலகை (பேய்) ஆயினார் எனும் விவகாரத்தை (கதையில் நியாயத்தை) அறிந்தவன் மயங்கானே.
--
யாரேனும் குழந்தை பெறாதவளின் குழந்தையும், கணவனை இழந்தவளின் கணவனும் ஆகாயத்தாமரை [எனும் இல்லாத மலரை] சூடிக்கொண்டு கந்தர்ப்ப நகரிலே, கிளிஞ்சலில் தோன்றும் வெள்ளியை விலை பேசி சண்டையிட்டு இடையில் கயிற்று பாம்பு கடித்து இறந்தனர், பேய் ஆகினர் என்றால் எப்படி இது அத்தனையும் நிகழ முடியாதது என்று அறிவார்களோ, அது போல சகச நிஷ்டையில் இருப்பவர் அனைத்தையும் பொய் என்று அறிவார்.


4 comments:

yrskbalu said...

gi.

why you keeping reaction column.?

nobody reacting also.

in my view - there is no need.

you are explaining very understanding way.

who are not able to understand, let them ask in comments column

திவாண்ணா said...

dear balu, ppl have a lot of inhibition in writing comments. it can not be helped. so a reaction column where just clicking a circle is enough. that is just as a feedback.
it is also presumptuous to think all are in our wave length and can understand whatever we say.actually you or dev or krishnamurthi may not need this blog at all. but such ppl are not my target audience. they should be adding to the understanding in stead. it is those who can be given a push in the direction of gnana marga tha i am targetting.
thanks for sharing your thought.

கிருஷ்ண மூர்த்தி S said...

அன்புள்ள பாலு,

கருத்துச் சொல்வது, புரிந்துகொண்டதாக, அல்லது புரியவில்லை என்பதாகச் சொல்லும் செயல்கள் யாவையும் அந்த நேரத்து அவஸ்தைகளே என்பதைக் கொஞ்சம் கருணையோடு பார்க்கப் பழகி விட்டால், இந்தக் கேள்விக்கே இடமிராது. ஆனால், உப்புத் தண்ணீரோடு [கடல்]சங்கமிக்கும் நன்னீர் [நதி] சலித்து சலித்துத் தான் ஒன்றாக வேண்டியிருக்கிறது, இல்லையா?

சலித்துக் கொள்வதும் கூட, புரிந்துகொள்வதன் ஒரு ஆரம்பம் தான்!

R.DEVARAJAN said...

Dear Sir,

I very much NEED this blog

Dev