Pages

Wednesday, August 12, 2009

நாம யார்ன்னு மறந்து போனதுதான் மாயை.




நாம யார்ன்னு மறந்து போனதுதான் மாயை. மறப்பு உள்ளவரை நினைப்பு உண்டு. இந்த மறப்பு நினைப்பு மனசோட தொழிலா இருக்கிறதால மனசே மாயை.
மனமன மெங்குண்டு மாயையு மங்குண்டு
மனமன மெங்கில்லை மாயையு மங்கில்லை
மனமாயை யன்றி மற்றொன்றுமில்லை
பினையாய வேண்டாம் பிதற்றவும் வேண்டாம்
தனையாயந் திருப்பது தத்துவம்தானே
-பாடுதுறை

இந்த மனசோட உருவ நாசம் சீவன் முத்தியிலும், அருவ நாசம் விதேக முத்தியிலும் சித்திக்கும். அதனால மாயை அழியக்கூடியதுதான்.

அதனால மாயை அநாதி, அநித்தியம்; பிரம்மம் அநாதி, ஆனா நித்தியம்.

பிரபஞ்சம் மாயா சொரூபம். பெயர் உருவம் இல்லாம பிரபஞ்சம் இல்லை. இந்த பெயர் உருவத்தில இருக்கிற நாட்டத்தை விட்டு விட்டா மாயையை ஒழிச்சதா ஆகும். (ம்ம்ம்ம்.... சுலபமா சொன்னாலும் இதை விட முடியலையே) மனமும் மாயை ஆனதாலும், மனசுக்கு நாம ரூபத்திலேயே பற்று இருக்கிற படியாலும், மனமும் ஒழிஞ்சதாகும். அப்ப ஆன்ம சொரூபம் தோன்றிடும்.
பிரபஞ்ச தோற்றமான மாயையால நமக்கு ஒரு கெடுதியும் இல்லை. :-)
என்ன, அதை நிஜம்ன்னு நினைக்கக்கூடாது.
:-))
அப்படி நினைக்கிற அஞ்ஞானமே அந்த பந்தத்தை உருவாக்கி இருக்கு.

சினிமாவில ஏதோ காட்சியை பாத்து மோகிக்கிறோம். எப்ப இது உண்மையில்லைன்னு திடமா மனசில உறைக்குமோ அப்ப அந்த மோகம் போயிடும். எப்ப போகும்? உண்மையை பாக்கிறப்ப போகும். அந்த காலத்தில சினிமா பாத்து கதாநாயகி படுகிற கஷ்டத்தைப்பாத்து பிழியப்பிழிய அழுவாங்க பாக்கிறவங்க. "ச்சே! என்ன இப்படி அழறோம்! இது முட்டாள்தனம்!” ன்னு சில சமயம் தோணும். அப்போ திரையை விட்டு பார்வையை விலக்கி வேற எங்கேயாவது பாத்தா, கொஞ்ச நேரத்தில மனசு சமநிலைக்கு வந்துடும்.
கயிறைப்பாத்து பாம்புன்னு நினைச்சு மயங்கிறப்ப, எப்ப அதிஷ்டானமான கயிறு தெரிய ஆரம்பிக்குமோ அப்ப ஆரோபமான பாம்பு காணாம போகும். அது போல எப்ப தன் நிஜ சொரூபத்தை பாக்க ஆரம்பிக்கிறோமோ அப்ப "ஹா! இதுதான் நாம்.” இது மாயை இல்லைன்னு இயல்பாகவே தோன்றிடும். அப்ப இந்த பிரபஞ்சமும் பொய்ன்னு விளங்கிடும்.



13 comments:

yrskbalu said...

gi,

can we able to see our daughter or son - as not our son?

if we see son is my son - you traped in maya.

further we can discuss in lot
readers will not able to digest.

திவாண்ணா said...

பாலு சார், தன் மகனை மகன் என்று பார்க்கிறதுலே ரொம்ப ஒண்ணும் பிரச்சினை இல்லை. சினிமாலே வர டாக்டரை டாக்டர்ன்னு பாக்கிறதில்லையா?
இது என் மகன்ன்னு மட்டுமே நினைக்கிறதிலதான் பிரச்சினை.

everything is something more than what we see with these eyes. problem is in not seeing it fully as it is.

//further we can discuss in lot
readers will not able to digest.//

actually there is not much to discuss. only something to experience. i think this blog crossed the discussion part long back. either you are sailing with the ideas or not!
:-))

and dont assume that ppl can not digest. :-)))

கிருஷ்ண மூர்த்தி S said...

மாயாவாதத்தில் உள்ள பெரிய குறையே இதுதான்! இடம்பொருள் ஏவல் தெரியாமல் பேசினால், நேரே கீழ்ப்பாக்கத்துக்கு ரீடைரக்ட் ஆகி விடுகிற அபாயம் நிறையவே உண்டு.

ராமகிருஷ்ண கதாம்ருதத்தில், இதை ஒரு சுவாரசியமான கதையில் சொல்வார்:

யானை ஒன்று மதம் பிடித்து, வீதியில் தறிகெட்டு ஒபட ஆரம்பித்தது. யானைப் பாகன், முன்னாள் ஓடி, "யானைக்கு மதம் பிடித்திருக்கிறது, விலகுங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள்" என்று எச்சரித்துக் கொண்டே வந்தான்.

எல்லாமே பிரம்மம்.பிரம்மத்தைத் தவிர வேறொன்றும் கிடையாதுன்னு பாடம் படிச்ச ஒருத்தன் தெருவில் வந்து கொண்டிருந்தான். பாகனுடைய எச்சரிக்கையைக் கேட்டு ஆச்சரியத்தோடு, யானையும் பிரம்மம், நானும் பிரம்மம் அப்படியிருக்க ஏன் இவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள் என்று, வாளாவிருந்தான். யானை வந்து இவனைத் தூக்கிக் கடாசி எறிந்து விட்டு,அடுத்த த்வம்சத்திற்குப் போய்க் கொண்டிருந்தது.

பலத்த அடிபட்டு, வலியோடு முனகிக் கொண்டிருந்தவனை, அவனோட குரு வந்து பார்த்து ஆதூரத்தோடு கேட்டாராம்,"யானையும் பிரம்மம், நீயும் பிரம்மம் என்பதெல்லாம் சரிதான்! விலகிப்போ என்று எச்சரித்தானே, யானைப் பாகன், அவனையும் பிரம்மம் என்று அறிந்து அவன் சொன்னபடிக்கு ஒதுங்கிப்போயிருந்தால், இப்படி ஆகியிருக்குமா?"

மகனை, மகனென்றோ, இல்லையென்றோ பார்ப்பது போன்ற கேள்வியெல்லாம், வேறுபக்கம் திசைதிருப்பி விடும்!

திவாண்ணா said...

:-))
உண்மைதான்!

yrskbalu said...

gi

if we want realise our self - we must cross that maya.

maya so powerfull.

maya easily traped anybody with in seconds.

as we are still sadakas- can easily get traped in our every day life.

to cross maya we must do practice.

one of maya is our relations.that is son, wife, mother.

sankarar so clearily explained in his all advitha philosopy.

just i coded one of maya . thats all.

this is very important topic.
just 10 lines not able to describe maya and its effects.


2. discuss means just sharing.
if readers can digest- well and
good. i will share upanised truths.

3. i accept krishnamoorthy words.

if we talk more on maya - that
also maya trap.and we go other way.

4. for these reasons only - upanasid says to do manana ,sravana,nidithyasana IN PRESENCE OF GURU. guru take care of everything.

கிருஷ்ண மூர்த்தி S said...

திரு பாலு சொல்வது:
/3. i accept krishnamoorthy words.

if we talk more on maya - that
also maya trap.and we go other way./

தினசரி சாலைகளில் விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, சரி, அதனால் நான் வீட்டுக்குள்ளேயே இருந்து விடுகிறேன் என்று சொல்கிற மாதிரி இல்லை?

மாயை என்று நினைத்து மயங்குவதும், பிரம்மம் என்று மலைத்து நிற்பதும் ஒன்றே தான்! அத்வைத வாதத்தில், பிரம்மம் ஒன்றே நிலையானது, மற்ற எல்லாம் உடான்சு என்று ஒரேயடியாக இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பை நிராகரித்து விடுகிற தவறைத்தான் நான் சொன்ன கதை சொல்லும் பாடம்.

திவாண்ணா said...

1.//just 10 lines not able to describe maya and its effects.//

no of course not!

2.//i will share upanised truths.//
most welcome!

3.//if we talk more on maya - that also maya trap.and we go other way.//

so true!

4.// guru take care of everything.//

absolutely!

thanks for sharing thoughts.
:-)

Geetha Sambasivam said...

அரியர்ஸ் க்ளியர் பண்ணியாச்சு. திரு கிருஷ்ணமூர்த்தி சொல்லி இருப்பதை மட்டும் ஏத்துக்க முடியலையே?


//அத்வைத வாதத்தில், பிரம்மம் ஒன்றே நிலையானது, மற்ற எல்லாம் உடான்சு என்று ஒரேயடியாக இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பை நிராகரித்து விடுகிற தவறைத்தான் //

யானையைக் கண்டும் எச்சரிக்கைக்குப் பின்னும் ஒதுங்காத ஆளின் அத்வைதம் சரியான புரிதலில் இல்லை அல்லவோ?? புரிதல் சரியா இல்லாமல் அத்வைதத்தைக் குறை கூட முடியுமா தெரியலை! :))))))))

கிருஷ்ண மூர்த்தி S said...

/அரியர்ஸ் க்ளியர் பண்ணியாச்சு. திரு கிருஷ்ணமூர்த்தி சொல்லி இருப்பதை மட்டும் ஏத்துக்க முடியலையே?/

ஏத்துக்க வேண்டாமே:-))

வெறும் அபிமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்ய வந்தால், அது பிடிவாதமாகத் தான் இறுகிப் போகும்! அதுவுமே கூட வேண்டாமே!

திவாண்ணா said...

// ஒதுங்காத ஆளின் அத்வைதம் சரியான புரிதலில் இல்லை அல்லவோ?? //
சரிதான். முன்னே இது தியரிதான். அனுபவம் கொஞ்சம் கூட வராம வீணா பேசி திரிகிறது தப்புன்னு எழுதின நினைவு!

திவாண்ணா said...

//ஏத்துக்க வேண்டாமே:-)) //

agreeing to disagree!

// வெறும் அபிமானத்தை மட்டும் வைத்துக் கொண்டு விவாதம் செய்ய வந்தால், அது பிடிவாதமாகத் தான் இறுகிப் போகும்! அதுவுமே கூட வேண்டாமே!//

அபிமானம்ன்னு இல்லை. நபரின் புரிதல் சரி இல்லாததால் பிலாசபி தப்புன்னு சொல்ல முடியாது என்கிறாங்க. இது சரியாதான் படுது!
த்வைத நிலை அத்வைத நிலையை விட ஏத்துக்கிறது சுலபம்தான்.

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்க யார் சொன்னது சரி, தப்புன்னு பார்த்து, மார்க் போடறதுக்கு நான் வரலை!

அதே மாதிரி நான் த்வைதமும் பேச வரவில்லை. ஸ்ரீ அரவிந்தர்,சங்கரர் பேசுகிற அத்வைதத்தை விட மாத்வர் பேசும் த்வைதம் இன்னும் குழப்பமானது என்று சொல்வார்.

தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நாங்கள்தான் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை. அப்படி ஒரு நிலை வரும் போது, அந்த மாதிரி பேசும் குழுக்கள், தனிநபர் எதுவானாலும் விட்டு விலகியே இருக்கிறேன்.

இதைப் பற்றி, இன்று அல்ல, மே மாதத்திலேயே, உங்களுடைய பதிவு
http://anmikam4dumbme.blogspot.com/2009/05/blog-post_12.html

இதற்குப் பதிலாக இங்கே எழுதியிருக்கிறேன்.
http://consenttobenothing.blogspot.com/2009/05/4.html

திவாண்ணா said...

நாம் யார் தத்துவங்களை தாங்கி பிடிக்க? அவை தன் பலத்திலேயே நிற்கும். நம் புரிதல்களில் குறை இருக்கலாம். அப்படி இருப்பதை மட்டுமே கருத்து பரிமாற்றங்கள் உதவ முடியும். மற்றபடி அனுபவம் மட்டுமே ஒருவரை முன்னேற்றும். அந்த அனுபவத்தை தர குரு மட்டுமே உதவ முடியும்.
அவ்வளவே.
உங்கள் சுட்டிக்கு நன்றி. பல நாட்களாக பல வலைப்பூக்களை படிக்கவும் நேரம் இல்லை. இந்த பதிவுகள் பிடிஎஃப்/ doc ஆக இருப்பின் தர முடியுமா?