Pages

Monday, May 3, 2010

36. வழியில் ஆபத்து வராமல் தடுக்க:



36. வழியில் ஆபத்து வராமல் தடுக்க:

ஶம்போ4 மஹாதே3வ தே3வ- ஸி2வ ஶம்போ4 மஹா தேவ3 தே3வேஶ ஶம்போ4

பா2லாநம்ரத்ந கிரீடம் பா2ல நேத்ரார்சிஷா த3க்த4 பஞ்சேஷுகீடம்

சூலாஹதா ராதி கூடம் ஸு2த்3த4ம் அர்தே4ந்து3-சூட3ம் ப4ஜே மார்க்க3ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

அங்கே3 விராஜத்3 பு4ஜங்க3ம் அப்4ர க3ங்கா3 தரங்கா3பி ராமோத்தமாங்க3ம்

ஓங்கார-வாடீ-குரங்க3ம் ஸித்3த4-ஸம்2ஸேவிதாங்க்4ரிம் ப4ஜே மார்க்க3-ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

நித்யம் சிதா2நந்த3 ரூபம்- நிஹ்நுதாஸே2ஷ-லோகேஶ-வைரி-ப்ரதாபம்

கார்த்தஸ்வரா-கே3ந்த்2ர-சாபம்2 க்ரு2த்திவாஸம்2 ப4ஜே தி3வ்ய-ஸன்மார்க்க3-ப3ந்தும்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

கந்த3ர்ப-தர்ப-க்4னம் ஈஶம்2 காலகண்ட2ம் மஹேஶம் மஹா-வ்யோம-கேஶம்

குந்தா3ப4-த3ந்தம் ஸுரேஶம் கோடி-ஸூர்ய-ப்ரகாஶம் ப4ஜே மார்க்க3 ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...

மந்தா3ர பூ4தேருதா3ரம் மந்த3ராகே3ந்த்3ர ஸாரம்2 மஹா-கௌ3ர்யதூ3ரம்

ஸிந்தூ4ர தூ3ர ப்ரசாரம் ஸிந்து4 ராஜாதி தீ4ரம் ப4ஜே மார்க்க3 ப3ந்து4ம்

ஶம்போ4 மஹாதே3வ தே3வ...
-----------
ஸ2 என்பது ஶ

6 comments:

sury siva said...

இந்த மார்க பந்து ஸ்லோகத்தைப் படித்தபோது எனக்கு ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி
ஒன்று நினைவுக்கு வருகிறது.

அப்பொழுது நான் தஞ்சை டிவிஷனில் ( எல்.ஐ.சி) ஹெச்.ஆர். மானேஜராகப்பணி புரிந்துகொண்டிருந்த காலம்.
ஒரு நாள் மார் வலி கொஞ்சம் அதிகமாய் இருந்த மாதிரி தெரிந்தது. கேஸ் ட்ரபிள் என்று இக்னோர் செய்ய‌
வேண்டாம் என்று என் சக தர்மிணி சொன்ன அட்வைஸை ஏற்றுக்கொண்டு, எனது நண்பரும், தஞ்சையில் பிரபல
இதய நோய் நிபுணர் ( தஞ்சை மெடிகல் காலேஜ் புரொஃபசர் , மற்றும் டீன் ) ஆன டாக்டர் எம்.கிருஷணசாமி
அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். ஒரு க்விக் இ.ஸி.ஜி. எடுத்துவிடலாமே என்று சொல்லி, அதையும்
எடுத்தார்.
கொஞ்சம் இருங்கள், வருகிறேன், என்று சொல்லி போனவர் வெகு நேரமாகியும் வரவில்லை. ஏதோ ரொம்ப
ஆபத்தான நிலைமை போல் இருக்கிறது. ஏதேனும் ஹாஸ்பிடல்லே அட்மிஷனுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாரோ என்று கூட நினைத்த நேரத்தில் அவர் திரும்பி வந்தார்.
அவர் கையிலே ஒரு சிறிய புத்தகம். அதைக்
ஒரு சிறிய புத்தகத்தை கொடுத்து, அதில் ஒரு பக்கத்தை காண்பித்தார்:
" மார்க்க பந்து ஸ்தோத்திரம் " என்று இருந்தது.

என்ன டாக்டர் !! இ. ஸி. ஜி. எடுத்தீர்களே !! மருந்து எதுவும் வேண்டாமா ? எனறு கேட்டேன்.
" ஒரு மருந்தும் வேண்டாம். இ. ஸி.ஜி லே எந்த பிராப்ளமும் இல்ல. ப்ராப்ளம் மனசுலே தான்."
இத படிச்சுண்டு இருங்கோ, தினமும். சரியாய் போயிடும் " என்றார்.


சுப்பு ரத்தினம்.
தோஹா ( தற்சமயம் )

திவாண்ணா said...

ஆமாம் சார். அந்த காலத்திலே பிரச்சினை தீரணும் என்கிறதே குறியா இருந்தது. லாப் பார்மசிலே பணம் வரணும்ன்னு இல்லை. நல்ல நினைவு பகிர்ந்து கொண்டீர்கள்!

Jayashree said...

""மண்ணிலும் மரத்தின் மீதும், மலையிலும் நெருப்பின் மீதும் தண்நிறை ஜலத்தின் மீதும் சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தினுள்ளும் வேறு எந்த இடத்தும்
என்னை நண்ணி வந்து அருளார் ஷஷ்டி நாதன் வேல் காக்க காக்க ""

இது சின்ன வயதில் என் தந்தையுடன் வேலை பார்த்தவர் சொல்லிக்கொடுத்தது. .இன்னிக்கும் நாங்கள் கிளம்பினாலும் சரி, குழந்தைகள் வெளியே போனாலும் சரி, முருகனுக்கு 3 தடவை எழுதி எடுத்துண்டு போகும் பையில் போடுவது வழக்கம். பலதடவை ஷண்முக கவசமும், மார்க பந்து ஸ்லோகம், விஷ்ணு சஹஸ்ர நாமமும் துணை வந்து காப்பாத்தியிருக்கு :)

திவாண்ணா said...

நல்ல பின்னூட்டம் ஜெயஸ்ரீ அக்கா! இப்படிப்பட்ட அனுபவங்களை கடவுள் நம்பிக்கை குறைந்து வரும் இந்த காலத்திலே வலைப்பூ மூலமா பகிர்ந்து கொள்ளணும்.

sury siva said...

//""மண்ணிலும் மரத்தின் மீதும், மலையிலும் நெருப்பின் மீதும் தண்நிறை ஜலத்தின் மீதும் சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தினுள்ளும் வேறு எந்த இடத்தும்
என்னை நண்ணி வந்து அருளார் ஷஷ்டி நாதன் வேல் காக்க காக்க ""//
ஜெயஸ்ரீ சொல்லும் பதிகம் தான் ஒரு 60 வருடம் முன்னாடியே என் அம்மா எங்களுக்கு கற்றுக்கொடுத்து,இதை
வெளியூருக்குப்போகும்பொழுதெல்லாம் சொல்லவேண்டும் என்று சொன்னது ஞாபகம் வருகிறது.

நன்றி. நீங்கள் வரவேண்டும்.
http://pureaanmeekam.blogspot.com

சுப்பு தாத்தா.

திவாண்ணா said...

சுப்பு சார் அப்பப்ப உங்க வலைப்பூவை பாத்துகிட்டுதான் இருக்கேன்!