ततः परमा वश्यतेन्द्रियाणाम् ।।55।।
தத: பரமா வஶ்யதேந்த்³ரியாணாம் || 55||
தத: = அதனால்; பரமா =மேலான; வஶ்யதா = வசப்பட்டு இருக்கும் தன்மை; இந்த்³ரியாணாம் = இந்திரியங்களுக்கு உண்டாகின்றது.
இந்திரியங்கள் சித்தத்துக்கு வசப்பட்டபின் அதை விட்டு விலகாமல் இருப்பதே மேலான தன்மை ஆகும். இது ப்ரயாஹாரத்தினால் அடையப்படுகிறது.
இது வரை யோகத்துக்கு பகிரங்க சாதனங்களான யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமங்களைப் பற்றி சொல்லப்பட்டது. வரும் மூன்றாம் பாதத்தில் யோகத்துக்கு அந்தரங்க சாதனங்களான தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சொல்லப்படும்.
இரண்டாம் பாதம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment