Pages

Wednesday, December 15, 2010

ஸமாதியின் சொரூபம்:




  तदेवार्थमात्रनिर्भासं स्वरूपशून्यमेव समाधिः ।।3।।
ததே³வார்த²மாத்ரநிர்பா⁴ஸம்° ஸ்வரூபஶூந்யமேவ ஸமாதி⁴​: || 3||

ததே³வ = அதுவே (முன் சொன்ன த்யானமே); அர்த²மாத்ர நிர்பா⁴ஸம்°=த்யானிக்கப்பட்ட வஸ்துவின் வடிவுடன் கூடிய; ஸ்வரூப ஶூந்யம் ஏவ = (சித்த விருத்தியின்) ஸ்வரூபம் இல்லாத சூன்யம் போன்றதே; ஸமாதி⁴​: = ஸமாதியாகும்.

த்யானிக்கப்படும் பொருளிலேயே (வஸ்துவிலேயே) சாதகனால் சித்தத்தை நிலை நிறுத்த முடியும்; ஆனாலும் சித்த விருத்தி கொஞ்சம் ஏற்பட்டாலும் பொருளின் (வஸ்துவின்) முழு சொரூபம் கிடைக்காமல் போய்விடும். ஸமாதி நிலையில் த்யானம் பொருளின் (வஸ்துவின்) சொரூபத்தில் முழுமையாக கலந்து விடுவதால் அதன் சொரூபம் மட்டுமே கிடைக்கும்; சித்த விருத்தியின் சொரூபம் கொஞ்சம் கூட இல்லாமல் போகும்.

வஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...
வஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.
வஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.

2 comments:

Geetha Sambasivam said...

வஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...
வஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.
வஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.//

அப்போ சாதகன்??? இங்கே புரியலையே?? வஸ்துவும், செயலும்மட்டும் இருப்பது த்யானம், ஓகே. ஆனால் வஸ்து மட்டும் இருந்தால் சமாதின்ன்னா?? சாதகன் என்ன ஆனான்?? அசட்டுத் தனமாய்க் கேட்கிறேனோ?? ஆனாலும் தவிர்க்க முடியலை. புரிஞ்சுக்கற ஆசைதான். :(((((

திவாண்ணா said...

சாதகன் இருக்கவே இருக்கான்; ஆனால் அதைப்பத்திய உணர்வு இருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம். அதைப் பொருத்து சமாதி வகை மாறுபடும். இப்ப முதல் பாதத்திலே சமாதி பத்தி சொல்லி இருக்கிறதை பார்த்தா புரியலாம்.

இந்த சூத்திரத்தை பொருத்த வரை சமாதியில் செயல் இல்லைன்னு புரிஞ்சால் போதும்.