देशबन्धश्चित्तस्य धारणा ।।1।।
தே³ஶப³ந்த⁴ஶ்சித்தஸ்ய தா⁴ரணா || 1||
தே³ஶ ப³ந்த⁴ = சரீரத்தின் (உள்ளும் வெளியுமான இடத்தில்) கட்டுப்பட்டு (அசைவற்று) நிற்பது; சித்தஸ்ய = சித்தத்தின்; தா⁴ரணா = தாரணை ஆகும்.
மனதுக்கு பந்தம் தராதவை சுப ஆஶ்ரயம் எனப்படும். இது உள்ளே இருக்கலாம்: வெளியே இருக்கலாம் (ஆந்தரம், பாஹ்யம்). சாஸ்திரப்படி தயாரித்த பஞ்ச லோகத்தாலான பகவானின் மூர்த்திகளில் குரு சொல்லிக்கொடுத்தப்படி மந்திரத்தால் தேவதையை ஆவாஹனம் செய்து அதில் மனதை செலுத்துவது வெளி (பாஹ்ய) தாரணை.
இப்படி பயிற்சி செய்வதுடன் சரீரத்திலுள்ள நாபி- சக்கரம், ஹ்ருதய -புண்டரீகம், ஸஹஸ்ராரம், நாசிகையின் (மூக்கின்) நுனி, நாக்கின் நுனி ஆகிய இடங்களில் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்துவது ஆந்தர தாரணை.
4 comments:
பந்தம் இங்கே பிடிப்பு, அல்லது பற்று என்று பொருள் கொள்ளலாமா???
தேவதையை ஆவாஹனம் செய்து மனதைச் செலுத்துவதோடு கூடவே ஆந்தர தாரணையும் வருமா??? அதிலேயே இதுவும் சேர்ந்ததா??எனக்கு என்னமோ இரண்டுமே வெவ்வேறு விதமான பயிற்சியாய்த் தோணுது. ஏன்னா, ஸஹஸ்ராரத்திலே எல்லாம் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்தறது என்பது மிக உயர்ந்த நிலைனு நினைக்கிறேன். ஆழ்ந்த பயிற்சி எடுக்கணும். ஆனால் மூர்த்திகளில் மனசைச் செலுத்தறது என்பது?? இது என் போன்ற சாமானியர்களுக்கே பொருந்தும்னு வச்சுக்கலாமா?? இல்லைனா இதிலேயும் ஆழ்ந்த பயிற்சி செய்யணுமா?? ராமகிருஷ்ணர் மாதிரி???
உண்மையாய்ச் சொன்னால் எனக்கு இது புரியலை. கொஞ்சம் குழப்பமாய்த் தான் இருக்கு! :(((((
உலக விஷயங்களில் பிடிப்பை தராதவை என்று கொள்ளலாம்.
தேவதையை ஆவாஹனம் செய்து மனதைச் செலுத்துவதோடு கூடவே ஆந்தர தாரணையும் வருமா??? அதிலேயே இதுவும் சேர்ந்ததா??//
இல்லை. அது பாஹ்ய தாரணை.
// ஏன்னா, ஸஹஸ்ராரத்திலே எல்லாம் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்தறது என்பது மிக உயர்ந்த நிலைனு நினைக்கிறேன். ஆழ்ந்த பயிற்சி எடுக்கணும்.//
ஆமாம். இது ஆந்தர தாரணை.
// ஆனால் மூர்த்திகளில் மனசைச் செலுத்தறது என்பது?? இது என் போன்ற சாமானியர்களுக்கே பொருந்தும்னு வச்சுக்கலாமா?? இல்லைனா இதிலேயும் ஆழ்ந்த பயிற்சி செய்யணுமா?? ராமகிருஷ்ணர் மாதிரி???//
சாமானியம்ன்னு இல்லை. இதுவே கூட பலருக்கு கஷ்டமா இருக்கலாம். இது பயிற்சியிலே ஒரு நிலைன்னு பாருங்க! அவ்வளோதான்.
இந்த பின்னூட்டம் ஏனோ மெய்ல் இல் வராம போச்சு இப்பதான் டாஷ்போர்டிலே பாத்தேன்! மன்னிக்க.
Post a Comment