शान्तोदितौ तुल्यप्रत्ययौ चित्तस्यैकाग्रतापरिणामः ।।12।।
ஶாந்தோதி³தௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யைகாக்³ரதாபரிணாம: || 12||
சித்தஸ்ய = சித்தத்தின்; ஶாந்த உதி³தௌ = விக்ஷேபம் போவதும் சாந்தம் உதிப்பதும்; துல்ய ப்ரத்யயௌ = இரு ஸமானமான விருத்திகளும்; ஏகாக்³ரதா பரிணாம: = ஏகாக்ரதையின் பரிணாமங்களாகும்.
விக்ஷேபம் முற்றிலும் போவதற்கும் ஏகாக்ரதை வருவதற்கும் இடையில் எந்த நிலையும் இல்லை. (ஸூர்யன் உதிக்க இருட்டு அகலுவது போல.) நிரோத வழியில் பெருக்கு ஏற்படும்போது முன்னிருந்த நிலை போய் இன்னும் மேலான நிலை வர வர மேலும் மேலும் மேலான நிலைக்கு கொண்டு போகும் புதிய மாற்றம் (விருத்தி) ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது இரண்டும் தனித்தனியே ஏற்படாமல் ஒன்றாகவே ஏற்படுகின்றன. இதுவே நிரோத பரிணாமம் ஆகும்.
No comments:
Post a Comment