तस्य भूमिषु विनियोगः ।।6।।
தஸ்ய பூ⁴மிஷு விநியோக³: || 6||
தஸ்ய = அதன் (ஸம்யமத்தின்); பூ⁴மிஷு = மேலுள்ள நிலைகளில்; விநியோக³: = பயன் உண்டாகிறது.
ஒரு மட்ட ஸம்யமம் கைவரப்பெற்றால் அடுத்த கட்டம் எதுவோ அதில் ஸம்யமம் செய்ய வேண்டும். கீழ் மட்ட ஸம்யமம் கைவராமல் அடுத்த மட்ட ஸம்யமம் முயற்சி செய்தல் வீணாகும்.
ஸ்தூலமான விஷயமுள்ள ஸவிதர்க ஸமாதியை சாதித்துவிட்டதும் சாதகன் அதற்கு மேலுள்ள ஸூக்ஷ்ம விஷயமான நிர் விதர்க்க ஸமாதியை விரும்புகிறான். அதில் ஸம்யமம் செய்து அதில் ஸித்தி பெறுகிறான். இதே போல சவிசார வெற்றியை அடைந்த சாதகன் நிர்விசார வெற்றியை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வர பிரசாதத்தால் மேல் நிலை அடைந்தவன் கீழ் நிலையில் ஸம்யமம் செய்தல் அவசியமில்லை. ஆனால் அவரவர் யோக அனுபவத்தால் மேல், கீழ் நிலைகளை உணர வேண்டுமே அல்லாது எந்த சாஸ்திரமும் அதை சொல்ல இயலாது.
No comments:
Post a Comment