व्युत्थाननिरोधसंस्कारयोरभिभवप्रादुर्भावौ निरोधक्षणचित्तान्वयो निरोधपरिणामः ।।9।।
வ்யுத்தா²நநிரோத⁴ஸம்°ஸ்காரயோரபி⁴ப⁴வப்ராது³ர்பா⁴வௌ நிரோத⁴க்ஷணசித்தாந்வயோ நிரோத⁴பரிணாம: || 9||
(யதா= எப்போது) வ்யுத்தா²ந நிரோத⁴ ஸம்°ஸ்காரயோ: = (க்ஷிப்தம், விக்ஷிப்தம், மூடம் ஆகிய மூன்று அவஸ்தைகளில் எந்த மாறுதலும் இல்லாமல்) சுத்த ஸத்வமாக ஆக உரிய நிரோத நிலையினுடைய; அபி⁴ ப⁴வ ப்ராது³ர் பா⁴வௌ = வ்யுத்தானத்தின் குறைவும், நிரோதத்தின் விருத்தியும் ஏற்படுமோ; நிரோத⁴ க்ஷண சித்தாந்வயோ = நிரோதம் ஏற்படும் கணத்தில் சித்தத்துக்கு ஏற்படும் சேர்க்கையே: நிரோத⁴பரிணாம: =நிரோத பரிணாமம் ஆகும்.
சித்தத்தின் தர்மம் வளர்ச்சி அல்லது ஒடுங்குதல். சித்தம் வளர்ச்சிமுகமாக (வ்யுத்தானத்துடன்) இருக்கும்; அல்லது தேய் முகமாக (நிரோதத்தில்) இருக்கும். ஒன்று வளர ஒன்று குறையும். சித்தத்திற்கு வெகு காலமாக வெளிக்கிளம்பியே பழக்கம். பயிற்சியால் சித்தம் நிரோதம் அடைய, ஒடுங்குதல் என்ற தர்மம் அதிகமாகி மேலும் மேலும் அது வலுப்பட்டு தேய்முகமாகும். இதுவே நிரோத பரிணாமம்.
No comments:
Post a Comment