जात्यन्तरपरिणामः प्रकृत्यापूरात।।2।।
ஜாத்யந்தரபரிணாம: ப்ரக்ரு«த்யாபூராத|| 2||
ஜாத்யந்தர = (மனித சரீரத்துக்கு) வேறு விதமாக மாறுதல் (தேவர் முதலான சரீரத்துக்கு) ; பரிணாம: ப்ரக்ரு«த்யா பூராத = ப்ரக்ருதியின் (அனு)ப்ரவேசத்தால் உண்டாகிறது.
பிரதானம் முதல் ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்கள் வரை உள்ள தத்துவங்களை ப்ரக்ருதி என்ற பதத்தால் கிரஹித்துக் (எடுத்துக்) கொள்ள வேண்டும்.
இந்த தத்துவங்கள்தானே மானுட சரீரத்துக்கு காரணம்? தேவ சரீரத்துக்கும் அவையே காரணம். அவை எங்குமிருக்கின்றன. ஆகவே ப்ரக்ருதியின் தேவையான பகுதிகள் மனித உடலில் புகுமானால் அது மறைந்து தேவ சரீரம் உண்டாகக்கூடும். அதர்மம் முதலிய தடைகளின் நீக்கம், யோகியின் ஸங்கல்பம், யோகத்தால் உண்டான தர்மம் இவை அதற்கு நிமித்த காரணமாகும். இவை சாதாரணமாக உண்டாகாது ஆகையால் இவற்றை நாம் காண்பதில்லை.
இப்படி ப்ரக்ருதி பிரவேசம் செய்வது தர்மம் முதலியவற்றை ஒட்டியா இல்லையா? இல்லை எனில் ஏன் எங்கும் எப்போதும் அப்படி நடப்பதில்லை? அப்படி இருப்பின் அது தர்மம் முதலான புருஷார்த்தங்களை ஒட்டி என்றாகி தர்மம் முதலானவை ப்ரக்ருதியை கட்டுப்படுத்தும் என்றாகிவிடுமே?
3 comments:
பிரதானம் முதல் ப்ருத்வீ முதலான பஞ்ச பூதங்கள் வரை உள்ள தத்துவங்களை ப்ரக்ருதி என்ற பதத்தால் கிரஹித்துக் (எடுத்துக்) கொள்ள வேண்டும்//
மானுட சரீரத்திற்கும், தேவ சரீரத்திற்கு ப்ரக்ருதி தான் காரணம், அது வரை சரி, நன்னாவே புரியறது. ஆனால் ப்ரக்ருதி ஏற்கெனவே இருக்கிறச்சே இன்னும் எதுக்குத் தேவையான பகுதிகள் மனித உடலில் புகுந்துக்கணும்?? அதான் இருக்கே முன்னாடியே?? இல்லைனா ஒவ்வொரு தடையாக உடைப்பதைச் சொல்றீங்களா?
ம்ம்ம் பதில் வரலை! :(
ப்ரக்ருதி ஒரு விகிதாசாரத்தில் மனித உடலில் இருக்கு. அது வேறு மாதிரி உள் புகுந்தால் விளைவு ஏற்படும். தடைகளின் நீக்கம், யோகியின் சங்கல்பம், இவ்வளவு நாள் யோகம் பயின்றதன் விளை எல்லாம் சேர்ந்து இதை சாதிக்கக்கூடும்.
Post a Comment