அப்ப நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்! கோபத்தை வென்ற பிறகு செய்ய வேண்டியது அதை கையாள தெரிஞ்சுக்கிறது. உள்ளே கோபம் இல்லாம கோபத்தை காட்டவும் பழகணும். இததான் ரௌத்திரம் பழகு ன்னு பாரதியார் சொன்னது போல இருக்கு!
நம்மோட முயற்சி ஒரு பக்கம் இருக்க, பகவானே, கோபத்தை என்கிட்டேந்து நீக்கு ன்னு வேண்டிக்கலாம். வேதம் பயின்றவர்கள் "காமோ காரிஷீன்" ன்னு துவங்கற வேத மந்திரத்தை ஜபம் செய்யலாம். அதிகாரம் இல்லைன்னா?
எனக்கு கோபமான கோபம் வரும். ஹிஹிஹி! ஆமாம். துர்வாசர் ன்னே பேர் வாங்கி இருந்தேன். மேலே சொன்ன கோத்திரங்களில ஒண்ணுதான். என் வழிகாட்டி ஒத்தர்கிட்டே பிரார்த்தனை செய்து கொண்டேன், கோபத்தை நீக்குங்கன்னு. திருக்களர் போய் ஆராதனை அபிஷேகம் செய்து வான்னு சொன்னார். திருத்துறைப்பூண்டி - ராஜ மன்னார்குடி சாலையில இருக்கற லூப் ரோடில திருக்களர் இருக்கு. லூப் ரோட்? அதாங்க ஒரு மெய்ன் ரோடில ஆரம்பிச்சு உள்ளே கிராமங்கள் எல்லத்தையும் ஒரு சுத்து சுத்தி திருப்பி மெய்ன் ரோடிலேயே முடியும். இந்த ரோடில மன்னார்குடி முனையிலேந்து சுமார் 4 கிலோ மீட்டர். பெரிய சிவன் கோவில். அழகான பெரிய குளம். ஆள் நடமாட்டமே இல்லாம அருமையா இருந்தது.
அர்ச்சகர் சிரத்தையோட ஸம்ருத்தியான அபிஷேகம், பூஜை செய்தார். நானும் ருத்ரம்-சமகம் சொல்ல அவருக்கு ஏக குஷி. புத்தகம் தருவித்துக் கொடுத்து, த்ரிசதி படியுங்க, அர்ச்சனை செய்கிறேன் என்று அர்ச்சனை செய்தார். முதல் சுற்றிலே சிவனுக்கு வலது பக்கமா முருகன் இருக்கார். அவருக்கு நேர் எதிரே துர்வாசர் சிரிச்ச -கவனிங்க - சிரிச்ச முகத்தோட இருக்கார். அபிஷேகம் சிவனுக்குத்தான். பிள்ளையார், அம்மன் உள்பட எல்லோருக்குமே பூஜை. துர்வாசர்? ஆமாம். இந்த தலத்திலேதான் துர்வாசர் முருகனோட அருளால கோபத்தை நீக்கிக்கொண்டாராம். அப்படி ஸ்தல வரலாறு. எனக்கு இந்த இடத்திலே நல்ல பலன் கிடைச்சது. நான் சொல்லி சிலர் போய் அவங்களுக்கும் நல்ல பலன் கிடைச்சது. முயற்சி செய்து பார்க்கலாம்.
- இந்த தொடர் நிறைவுற்றது -
3 comments:
நாகப்பட்டினம் பத்ரிநாராயணப்பெருமாள் திருமணிமாடக்கோயிலிலும் கோபம் குறையப் பிரார்த்தனைகள் செய்யலாம். :)))))))))
ஓஹோ! அதுவும் அப்படியா? சரி, லிஸ்டுல சேத்து வெச்சுக்கலாம்!
நான் போனதில்லை அங்கே! :))) கோபம் வரவங்கதான் போகணும். அதுக்குத்தான் இந்தக் குறிப்பே! :))))))))
Post a Comment