Pages

Thursday, December 8, 2011

அன்பு...


கணவன்: ஏன் நான் செய்த தப்பை எல்லாம் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய்? எல்லாம் மன்னிச்சு மறந்தாச்சுன்னு நினைச்சேனே?
மனைவி: மன்னிச்சு மறந்தாச்சுதான். ஆனா நான் அப்படி மன்னிச்சு மறந்தாச்சுன்னு நீ மறக்கக்கூடாது. அதான்...


பிரார்த்தனை செய்பவன்: கடவுளே, நான் செய்த பாபங்களை எல்லாம் மறந்துடு!
கடவுள்: எந்த பாபம்? அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன். நினைவு படுத்து பார்க்கலாம்.....

10 comments:

திவாண்ணா said...

அன்பு தவறுகளை பதிவேட்டில் குறிப்பதில்லை.....

திவாண்ணா said...

இது நமக்கு நாமே திட்டம் இல்லை.
பதிவின் ரசத்தை குறைக்காமலும் அதே சமயம் கொஞ்சம் புரிதலுக்காகவும்.... கமென்ட் இறுதி வரி இல்லை. யோசித்தால் மேலும் பல கோணங்கள், சிந்தனைகள் வரலாம்.....

Geetha Sambasivam said...

கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் தவறுகளைச் சொல்லிக் காட்டறது சரியில்லை தான்; மன்னிச்சுட்டேன்; மறந்துட்டேன் என்ற வார்த்தைகளும் தேவையில்லை. சண்டை தனி; சமரசம் தனி! இந்த வித்தியாசம் புரியணும். ஈகோ என்னும் முகமூடி(சரியா இருக்குமா) இருக்கக்கூடாது.

Geetha Sambasivam said...

அன்பு தவறுகளை பதிவேட்டில் குறிப்பதில்லை.....//

உண்மைதான். அது யார் மேல் வைத்த அன்பானாலும்...............அன்பின் முன்னே அடிபட்டுப் போயிடும்.

Geetha Sambasivam said...

கடவுளே, நான் செய்த பாபங்களை எல்லாம் மறந்துடு!
கடவுள்: எந்த பாபம்? அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன். நினைவு படுத்து பார்க்கலாம்.....//

நாம என்ன செய்தாலும் நமக்கு வேண்டியது குறைவதில்லை; கடவுள் கொடுக்கத்தான செய்கிறார். அவருக்கு அதுதான் தெரியும். ஏனெனில் அன்பு! நம் தவறுகளைப் பதிவேட்டில் குறிக்காமல் நம்மிடம் சுட்டிக்காட்டாமல்............இப்போதைக்கு இவ்வளவு தான். அப்புறமா வரேன்.

Geetha Sambasivam said...

கொடுத்துப்பார் பார் பார் உண்மை அன்பை!

நினைத்துப் பார் பார் பார் அதன் தென்பை!

இப்படி ஒரு பாட்டு இருக்கிற நினைப்பு. அன்பு உண்மையிலேயே தென்பைத் தரும். ஊக்கத்தைத் தரும். மகிழ்ச்சியைத் தரும். ஆற்றலைத் தரும். காதலொருத்தியின் கடைக்கண் பார்வையிலேயே சாகசங்களை எல்லாம் செய்யவும் சொல்லும். இது ஒரு கோணம்.

இன்னொரு கோணத்தில் மன அமைதியைத் தரும். நிம்மதியைத்தரும். எல்லாரும் நம் மக்களே என்ற பரந்த எண்ணத்தைத் தரும். அன்புக்குரியவர் என்ன சொன்னாலும்,செய்தாலும் துச்சமாய்க் கருதும். அன்பு செலுத்த முடிந்தமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும். எடுக்க எடுக்கக் குறையாத அக்ஷய பாத்திரம் போல் அன்பு அள்ள அள்ளக் குறையாமல் வாரி வழங்கச் சொல்லும். அன்பு செலுத்தவே நம்மைப் படைத்த இறைவனைக் குறித்து ஆனந்திக்கும்.

Geetha Sambasivam said...

வட்டி இல்லாமல் எடுக்க எடுக்கக் குறையாதது அன்பு ஒன்றே. உலகில் நீர் நிலைகள் வற்றலாம். கடல் வற்றலாம்,ஏரிகள், குளங்கள், நதிகள் வற்றலாம். வானமும் பொய்க்கலாம். அன்பு ஒருநாளும் பொய்க்காது. வற்றாது. நிரம்பித்தளும்பும். உச்சந்தலையிலிருந்து கால்வரை ஆனந்தம் பொங்கித் ததும்பும்.

Jayashree said...

anbu ethaiyum kutramaakavae parpathillaiye!. anbukku athu oru nikazhvu . present mattum thaan . Antha kshanaththil vazhvathu mattumae !!! Anbukku undo adaikkum thaal? Kuzhanthai thappu seythavan seyyathavannu paaththa sirikkarathu? ilamaiyil innocence ; muth(ir)umayil magnanimity :)))forbearance / thithiksha...

priya.r said...

அன்பு என்று சொல்லும் போதோ கேட்கும் போதோ இந்த திருக்குறள் தான் நினைவுக்கு வருகிறது

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

மு.வ உரை:

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:

இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.
Translation:
They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.
Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
Thanks for sharing Tiva sir.

Karthik Raju said...

to tiva sir:-

http://www.swamij.com/swami-rama-citizen-two-worlds.htm

intensive lines, hope u not already read it!!