Pages

Monday, May 9, 2016

அத்வைதம் - 1


அத்வைதத்தைப்பற்றி எளிய முறையில் சொல்ல விழைகிறேன். எல்லாம் வல்ல பரம்பொருள் துணை இருக்கட்டும்.
அத்வைதம் என்பதோட பொருள் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். இரண்டில்லை. எது இரண்டில்லை? எல்லாமேதான். எல்லாமே ஒண்ணுதான் இரண்டில்லை.
எடுத்த எடுப்பிலே இது முட்டாள்தனம்ன்னுதான் தோணும். கொஞ்சம் பொறுமையா முழுக்கப்படிச்சா இதுல இருக்கிற உண்மை என்னன்னு புரியும்.
அத்வைதத்தைப்பத்தி கொஞ்சம் படிச்சவங்களை அத்வைதத்தோட சாரம் என்னன்னு கேட்டா உடனே சொல்லுவாங்க: “ப்ரம்மம் சத்யம்; ஜகன் மித்யா” . இதுக்கு சாதாரணமா அர்த்தம் செய்துக்கறப்ப ப்ரம்மம் மட்டுமே சத்யம். இந்த உலகம் முதலானவை மாயை - இல்லாத ஒண்ணு என்கிறது. இதை கேட்ட உடனே “இது அடி முட்டாள்தனம். இதோ அனுபவிச்சுக்கொண்டு இருக்கேனே? அதெல்லாம் மாயைன்னா வேற என்ன சொல்லறது? இதோ சுடுகிற வெய்யில் பொய்யா? அப்பப்ப சில்லு வீசற பீச் காத்து பொய்யா? மூக்கை துளைக்கிற சமையல் வாசனை பொய்யா? பொழுது சாயும் நேரத்து சூரியன் வாரி இறைக்கிற வண்ணங்கள் பொய்யா? தூரத்திலேந்து மிதந்து வர இனிமையான சினிமாப்பாட்டு பொய்யா? போங்கய்யா நீங்களும் உங்க அத்வைதமும்”- இப்படி சொன்னா உடனடியா நாம் கொடுக்கக்கூடிய பதில் ஏதுமில்லை.
அப்ப இதுல சாரம் ஒண்ணுமில்லை ந்னு நினைக்க வேண்டாம்.
அத்வைதத்தை சரியா புரிஞ்சு கொண்டா அது சரிதான்னே தோணும்.


முதல்ல சில விஷயங்களை உள்வாங்கிப்போம். அப்புறம் இதெல்லாம் புரியறது கொஞ்சம் சுலபமா இருக்கலாம்.

No comments: