மாஸ்டர்
மக்களுக்கு அடிக்கடி
நினைவூட்டுவார், அவர்களது
வாழ்க்கை இயந்திரத்தனமாக
போய் விட்டது என்று. “
உங்களுடைய
உணர்வுகளும் செயல்களும்
உங்களிடமிருந்து வராமல்
உங்களை மனத்தயாரிப்பு செய்ததன்
மூலம் மட்டுமே வருகிறது என்று
புரிகிறதா?”
சீடர்கள்
கேட்டார்கள்: அந்த
மனத்தயாரிப்பில் இருந்து
மீள்வது எப்படி?
”விழிப்புணர்வால்…”
கொஞ்சம் யோசித்த பின் -
“பேரழிவாலும்!”
என்றார்.
பேரழிவா?
ஆமாம்
ஒரு தூய இங்க்லீஷ்காரார் ஒரு
முறை என்னிடம் சொன்னார்.
அவர் பயணம்
சென்று
கொண்டிருந்த
கப்பல் உடைந்து போய் விட்டது.
இன்னொரு
இங்க்லீஷ்காரருடன் ஒரு மணி
நேரம் நீந்திய பிறகு அவர்
தன் முன் மனத்தயாரிப்பில்
இருந்து விடுபட்டு முன்னால்
அறிமுகப்படுத்தப்படாத அந்த
இங்க்லீஷ்காரரிடம் பேசினார்.
என்ன
பேசினார்?
இப்படி
அறிமுகமில்லாத உங்களுடன்
பேசுவதற்கு மன்னிக்கவும்!
ஆனா இதுதான்
சௌத்தாம்ப்டன் போகும் திசையா?
No comments:
Post a Comment