சத்தியத்தை
ஒரு கருத்தாகவோ பெயரிலோ அடைக்க
முற்படுவது குறித்து மாஸ்டர்
எச்சரித்துக்கொண்டே இருப்பார்.
ஒரு
தத்துவவாதி கேட்டார்:
“நீங்கள்
சொல்லும் வஸ்து எங்கும்
பரவியுள்ள நிரந்தர வஸ்துவா
அல்லது தற்காலிகமான வஸ்துவா?”
மாஸ்டர்
கண்களை மூடி யோசனையில்
ஆழ்ந்தார். பின்
அப்பாவியாக சொன்னார் “ஆமாம்!”
பிறகு
ஒரு முறை சொன்னார்: நாம்
சத்தியத்துக்கு ஒரு பெயர்
கொடுக்க முற்பட்டால் அது
சத்தியமில்லாமல் ஆகிவிடுகிறது!
குறும்புக்கார
சீடன் ஒருவன் கேட்டான் “ அது
சத்தியம் என்றால் கூடவா?”
“சரியாகச்சொல்லப்போனால்
’அது’ என்று சொல்லும் போதே!”
No comments:
Post a Comment