முதல்ல
சில விஷயங்களை உள்வாங்கிப்போம்.
அப்புறம்
இதெல்லாம் புரியறது கொஞ்சம்
சுலபமா இருக்கலாம்.
முதல்ல
புரிய வேண்டியது இறைத்தன்மையை
புரிஞ்சுக்கறதுல பல மட்டங்கள்
-
லெவல்ஸ்-
இருக்கு
என்கிறது.
அடி
மட்டத்தில பலரும் புரிஞ்சு
கொண்டு இருக்கறது -
கடவுள்ன்னு
ஒத்தர் இருக்கார்;
நாம
வேண்டிக்கிட்டா அவர் நமக்கு
பலதும் செஞ்சுத்தருவார்.
இதை
பய பக்தி,
மூட
பக்தின்னு சொல்றாங்க.
இது
சரியா தப்பா?
அவங்க
லெவல்ல சரிதான்.
வித்தியாசமா
”தேவர்கள் இருக்காங்க;
அவங்களுக்கு
இயற்கைச்சக்திகள் மேல ஆளுமை
இருக்கு.
அவங்களை
திருப்தி செஞ்சா அவங்க நமக்கு
வேண்டியதை செய்வாங்க”ன்னு
ஒரு கண்ணோட்டம் இருக்கு.
இதுவும்
அந்த லெவல்ல சரியே.
இதுக்கெல்லாம்
என்ன ஆதாரம் ஐயா?
நீர்
பாட்டுக்கு சொல்லிண்டே போறீரே?
ந்னு
கேட்டா,,,,
அனுபவமே
ஆதாரம்.
வேண்டுகோள்
நிறைவேறாம இத்தனை வருஷங்களா
இறை நம்பிக்கை பிழைச்சு இருக்க
இயலாது.
உலவிகிட்டு
இருக்கிற எக்கச்சக்க அனெக்டோட்
களுக்குள்ள நாம் போக வேண்டாம்.
இதுக்கும்
மேல ஒரு புரிதல் சிவன் சக்தி
விஷ்ணு -
சில
பேர் ப்ரம்மா,
விஷ்ணு,
சக்தின்னு
பிரிக்கிறாங்க-
ந்னு
ஒரு ட்ரினிடி.
அவங்க
எல்லாத்தையும் நடத்தறாங்க.
தேவர்கள்ன்னு
சொல்லுகிறது எல்லாம் இவங்களோட
ஒரு அம்சமாகவோ அல்லது எவால்வ்
ஆன மனிதனாகவே இருப்பார்கள்.
இதுவும்
அந்த லெவல்ல சரிதான்.
பேரும்
வடிவமும் எப்படி வேணா
இருக்கட்டும்.
இர்க்கிற
ஒரே வஸ்துதான் என்று ஒரு
கருத்து.
இதுவும்
அந்த லெவல்….
சரி
சரி!
சரிதான்,
சரிதான்
ந்னு சொல்லிண்டே போனா எப்படி?
ஏதோ
ஒண்ணுதானே சரியா இருக்க
முடியும்?
சின்ன
க்ளாஸ் படிக்கிறப்ப ஆட்டம்
-அணு-
பத்தி
பாடம் எடுத்தாங்க.
ஆட்டம்ன்னாலே
பிளக்க முடியாததுன்னு
சொல்லித்தந்தாங்க.
அடுத்த
க்ளாஸ் போன பிறகு ஒரு காலத்துல
அணுவை பிளக்க முடியாததுன்னு
நினைச்சாங்க.
அப்பறமா
அதை பிளக்க முடிஞ்சது;
அதுல
ந்யூட்ரான்,
ப்ரோட்டான்,
எலக்ட்ரான்
ந்னு மூணு வகை துகள் இருக்குன்னு
சொன்னாங்க.
அது
நான் காலேஜ் போற வரை இருந்தது.
அப்புறமா
ஹிஹிஹி புரோட்டான்,
ந்யூட்ரான்
ரெண்டு வேற வேறதான்.
இருந்தாலும்
அதை கட்டுமானம் பண்ணி இருக்கறது
க்வார்க் என்கிற ஒரே
வஸ்துவாலன்னாங்க.
ஒவ்வொரு
கால கட்டத்திலேயும் அந்த
அந்த ஸ்டேஜுக்கு இருக்கிற
புரிதலை வெச்சுக்கொண்டுதான்
சரி தப்புன்னு சொல்லறது.
உண்மையில
சரி எதுன்னு யாருக்குத்தெரியும்?
ரைட்!
அடுத்து
பார்க்க வேண்டியது எப்படி
எல்லாம் ஒண்ணு என்கிறது.
ஆனாலும்
இப்போதைக்கு அதை கொஞ்சம்
தள்ளி வெச்சுட்டு இந்த ஜகன்
மித்யாவை பார்த்து நகர்த்திடலாம்.
No comments:
Post a Comment