ரமண
பகவான் இந்த த்வைத-
விசிஷ்டாத்வைத,
அத்வைத
சர்ச்சையை வெகு எளிதா தீர்த்து
வெச்சுட்டார்.
அதையேதான்
நானும் சொல்ல விரும்பறேன்.
அது
என்னவா இருந்தா என்ன?
ஆன்மான்னு
ஒண்ணு இருக்கறதையும் அதை உணர
முடியணும் என்கறதையும் மூன்று
பாதையிலும் இருக்கறவங்க
ஒத்துக்கறாங்க.
முதல்ல
அந்த ஸ்டேஜுக்கு போவோம்.
அப்புறமா
த்வைதமா,
விசிஷ்டாத்வைதமா
இல்லை அத்வைதமா என்கிறது
தானா தெரிஞ்சுடும்.
இப்போ
பிடிச்சு அதுக்கு சர்ச்சை
செய்வானேன்?
அது
தெளிவானாதான் ஆன்ம சாதனை
பண்ண முடியுமா?
ப்ரம்ம
நிலை ஒரு உணர்வு.
அத
சொல்லாலே விவரிக்க முடியாது.
தேன்
எப்படி இருக்கும்?
தித்திப்பா
இருக்கும்னு சொல்லல்லாம்.
தித்திப்பு
எப்படி இருக்கும்ன்னா என்ன
சொல்லறது?
கேக்கறவர்
நாக்கில கொஞ்சம் தேனை தடவி
’இதான் தெரிஞ்சுக்கோ’ ந்னுதான்
சொல்ல முடியும்.
சரி
சரி,
இதெல்லாம்
வியவகாரத்துக்கு ஒண்ணும்
லாயக்கு படாது.
இவ்வளோ
கஷ்டப்பட்டு ஏன் இதை
தெரிஞ்சுக்கணும்?
இந்த
வழியில முன்னேற முன்னேற
இன்னும் சந்தோஷமா இருக்கலாம்.
வேற
என்ன வேணும்?
எல்லாரும்
விரும்பறது சந்தோஷமா
இருக்கணும்ன்னுதானே?
இந்த
வழியில் இறங்க உலகத்தைப்பத்திய
நம் பார்வையே மாறிப்போகிறது.
நேரடியாக
அனுபவிக்காவிட்டாலும் இது
அத்தனையும் நானேதான்னு புத்தில
பட்டாலும் போதும்;
ஒரு
பெரிய மாற்றம் வரும்.
நம்மை
நாமே கோபித்துக்கொள்வதில்லை;
பகைமை
பாராட்டுவதில்லை;
இகழ்வதில்லை.
ஆகவே
இது எல்லாம் நானேன்னு தோணும்
போது சக மனிதர்களிடம் இந்த
எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவதில்லை.
அதுவே
மற்ற உயிரினங்கள் பாலும்
ஏற்படுகிறது.
உண்மையில்
மனிதனை விட மற்ற உயிரினங்களிடம்
-
தாவரங்களோ,
புழு
பூச்சி முதலான ஏனைய மிருகங்களோ-
அப்படி
ஒரு அன்பு பாராட்டுவது சுலபமாக
இருக்கிறது.
அன்பு
பாராட்டுவது நம்மை மகிழ்ச்சியில்
ஆழ்த்துகிறது!
எதிர்
காலத்தைப்பற்றி ஒரு பயம்
இருப்பதில்லை.
கடந்த
காலத்தைப்பற்றி ஒரு வருத்தமோ
கோபமோ இருப்பதில்லை.
சாந்தி
மட்டுமே வாழ்வில் நிலவுகிறது.
இப்படி
புத்திக்குப்பட்டாலும்
பலரும் இதை விரும்புவதில்லை.
நான்
என்கிற அடையாளம் தொலைந்து
போவது என்பது பலருக்கும்
உகப்பா இல்லை.
உண்மையில்
பலர் இந்த கான்சப்ட் ஐ கேட்டாலே
பயப்படுகிறார்கள்!
நமக்கு
இது புத்தி பூர்வமா கொஞ்சம்
இப்போதைக்கு தெரிஞ்சாலே
போதும்.
பின்னால்
தகுந்த காலம் வரும்போது
திருவருளும் குருவருளும்
கூடும்போது மேலே கொண்டு போய்
அனுபவத்துக்கு கொண்டு
விட்டுவிடுவாங்க என்பது
திண்ணம்.
-
நிறைந்தது-
No comments:
Post a Comment