நண்பர்
நெ.த
ஜபம் பத்தி கேட்டிருந்தார்.
காயத்ரீ
ஜபம் செய்யும்போது மனது
ஒன்றுவதில்லை. இதற்கு
உள்ள கிரமம் (அதாவது
இன்ன DEITY படம்
வச்சு, விளக்கேத்தி....
மாதிரி)
என்ன.
என்ன
செய்யலாம்? ம்ம்ம்ம்?
காயத்ரி
தேவியையே கேட்கலாம்.
அம்மா,
மனசு உன்
ஜபத்தில பதிய வையேன்னு!
நமக்கு
அவ்ளோ பக்தி போறாதேன்னு
சொல்றீங்களா? அதுவும்
சரிதான். அப்ப
சில நம்ம யத்னத்தில (??!!)
செய்யக்கூடியதை
செஞ்சு பார்க்கலாம்.
கர்மா
க்ரமம் எப்படி போட்டு இருக்கு?
ஜபத்துக்கு
முன்னே விதிச்சு இருக்கறது
ப்ராணாயாமம். இது
மத்த சில பயன்களோட மனசு ஒன்றவும்
செய்ய வைக்கும். அதுக்கு
சரியான விகிதத்தில செய்யணும்.
இதோட விவரங்களை
இங்கே பாருங்க.
செஞ்சாச்சு,
அப்புறம்?
புதுசா
கத்துக்கற எதையும் செய்ய
நாம் மனசை குவிச்சே செய்வோம்.
உதாரணமா
பூஜை செய்ய ஆரம்பிக்கிறோம்.
என்ன ஸ்லோகங்கள்
/ மந்திரங்கள்
சொல்லணும்? எல்லாமே
புதுசா இருக்கும். பாத்து
பாத்து சொல்லிவிடுவோம்.
தப்பில்லாம
சொல்லணுமேன்னு ஒரு சின்ன
கன்சர்ன் இருந்தா முழு ஈடுபாடு
இருக்கும். இதுவே
பழகின பிறகு இன்னைக்கு காப்பி
சுத்த மோசம். டிபன்
என்ன செய்வா அதுவாவது சரியா
இருக்குமான்னு இந்த ரீதியில்
எதையாவது நினைச்சுண்டே பூஜை
செஞ்சுண்டு இருப்போம்!
நான்
பஞ்சாயதன பூஜை செய்ய ஆரம்பிச்சப்ப
என் அத்தை மகன் ரா.கணபதிகிட்ட
ரொம்ப நேரம் ஆகறது அண்ணான்னு
புகார் பண்ணேன். அவர்
சிரிச்சுண்டே "பரவால்லை.
பாத்து
செய்யறப்ப கான்சண்ட்ரேஷன்
இருக்கும்"ன்னார்!
புதுசா
ஒரு மொழியை கத்துக்கறப்ப
முதல்ல பார்த்து,
உரக்கப்படிப்போம்.
கொஞ்சம்
பழகின பிறகு உதடு அசைய படிப்போம்.
அப்புறம்
மௌனமாவே படிக்கலாம்.
அதே போல…
ஆரம்ப
காலங்களில உரத்து சொல்லும்
ஸ்லோகத்தை நாளாவட்டத்தில
முணமுணத்துண்டே சொல்லுவோம்.
இதுக்கு
உபாம்சு ன்னு பேர். உரக்க
சொல்லறதைவிட இது நல்லதாம்.
பத்து மடங்கு
பலன். இன்னும்
நாளாச்சுன்னா அந்த முணமுணப்பு
கூட இராது. மனசில
சொல்லிண்டு போவோம்.
இதுதான்
மானசீகம். இது
இன்னும் சிலாக்கியம்ன்னு
சொன்னாக்கூட இங்கதான் பிரச்சினை
ஆரம்பிக்கறது! மந்திரத்தை
கோட்டை விட்டுட்டு வேற எங்கேயோ
புல் மேய மனசுக்குதிரை போயிடும்!
சற்றும்
மனம் தளராத விக்ரமாதித்யன்
மாதிரி திருப்பி அதை இழுத்துண்டு
வரணும். வேற
எங்கேயோ போயிடுத்துன்னா
இழுத்துண்டு வரலாம்.
அது தெரியாமலேன்னா
ஓடிப்போறது?
ரைட்
இப்ப புரிஞ்சாச்சு.
இரண்டு
ட்ரிக்ஸ்!
ஒண்ணு
புதுசா செய்யறதை கவனத்தோட
செய்வோம். ஸோ
ஒவ்வொரு முறை ஜபத்துக்கு
உக்காரும்போதும் புதுசா
எதையாவது புகுத்தலாமே?
எப்படின்னா….
ஸ்வரத்தை
சரியா சொல்லறோமான்னு கவனிக்கலாம்.
உச்சரிப்பு
சரியா இருக்கான்னு கவனிக்கலாம்.
இதுக்கு
நிறையவே ஸ்கோப் இருக்கு.
சரியாக
ஸ்பீட்ல சொல்றோமான்னு
கவனிக்கலாம்.
மந்திரம்
சொல்லறப்ப ஒரு கோட்டோவியத்தை
கற்பனை செய்து வரைந்து கொண்டே
சொல்லலாம். இதை
பத்தி இங்கே சொல்லி இருக்கேன்.
ரைட்
அடுத்து, தெரியாம
மனசு குதிரை ஓடிப்போறது
இல்லையா? இதுக்கு
ஏதாவது செய்யலாம்? லாம்!
குதிரைய
பாத்துண்டே இருந்தா அது ஓடாது.
உண்மையில்
அசையாமலே நின்னுடும்.
a watched mind is a quiet mindன்னு
தயானந்த ஸ்வாமிகள் எங்களுக்கு
பாடம் எடுத்தார். இதுக்கும்
பயிற்சி தேவைதான்.
ராம க்ருஷ்ணர் சொல்றார் நீ சொல்லற மந்திரம் உன் காதிலேயே கேட்கணும்ன்னு.சொல்கிற மந்திரத்தை மூணாவது மனுஷன் மாதிரி வேடிக்கை பார்க்க கத்துக்கணும். எடுத்த எடுப்பில இது முடியவே முடியாதுன்னு தோணினாலும் நிச்சயமா முடியும்.
ராம க்ருஷ்ணர் சொல்றார் நீ சொல்லற மந்திரம் உன் காதிலேயே கேட்கணும்ன்னு.சொல்கிற மந்திரத்தை மூணாவது மனுஷன் மாதிரி வேடிக்கை பார்க்க கத்துக்கணும். எடுத்த எடுப்பில இது முடியவே முடியாதுன்னு தோணினாலும் நிச்சயமா முடியும்.
இப்படி
பார்க்கிறது உரக்க சொல்கிற
மாந்திரதுக்கு சுலபம்.
ஒலி காதுல
கேட்கிறது இல்லை? அதனால.
உபாம்சுவா
சொன்னா உதடுகளோட அசைவில கவனம்
வைக்கலாம். மானசீகதுக்கு
மேலே சொன்ன ஸ்வரத்தை கவனிக்கறது
போன்ற உத்திகள் வேணும்.
மந்திரம்
சொல்கிற விதம் செட்டில்
ஆயாச்சுன்னா அதுக்குள்ள
வேடிக்கை பார்க்கவும்
தெரிஞ்சுடும்.
என்ன
செஞ்சாலும் ஆரம்ப காலங்கள்
கஷ்டம்தான். அப்போ
ச்சேன்னு விட்டுடாம விடாப்பிடியா
செய்யணும். குதிரை
ஓடிப்போயிடறதேன்னு கவலைப்படாம
திருப்பி திருப்பி இழுத்துண்டு
வரணும்.
No comments:
Post a Comment