மாஸ்டரிடம்
"ஏன்
நீங்க யாருடனும் வாதம்
செய்வதில்லை?” என்று
கேட்டார்கள்.
பதிலுக்கு
ஒரு கதை சொன்னார்,
ஒரு
வயதான கருமாரன் தன் நண்பரிடம்
பேசிக்கொண்டு இருந்தார்.
“உனக்குத்தெரியுமா?
நான் சின்ன
பையனாக இருந்தப்ப என் அம்மாவும்
அப்பாவும் நான் என்ன படிக்க
வேண்டும்ன்னு சண்டையே போட்டாங்க.
அப்பா அவர்
செஞ்சு வந்த இந்த கருமாரத்தொழிலையே
நானும் செய்யணும்ன்னு சொன்னார்.
அம்மாவோ
நான் பல் டாக்டர் ஆகணும்ன்னு
சொன்னாங்க.”
“அப்பறம்?”
"அப்பாதான்
ஜெயிச்சார். அவர்
சொன்னதுதான் சரின்னு அப்பறமா
நிரூபணம் ஆயிடுத்து!”
"நிரூபணமா?
அதெப்படி?”
“பின்ன?
நான் இங்கே
முப்பது வருஷமா உக்காந்து
தொழில் செய்யறேன். இது
வரைக்கும் யாரும் வந்து
'கொஞ்சம்
என் பல்லை பிடுங்கறயா?'ன்னு
கேக்கவே இல்லே!”
மாஸ்டர்
சொன்னார்: “இந்த
மாதிரி வாதங்களைத்தான் பலரும்
முன் வைக்கறாங்க! சத்தியம்
நிதர்சனமா தெரியறப்ப லாஜிக்
எதுவுமே வேண்டாம்!”
No comments:
Post a Comment