Pages

Monday, June 12, 2017

கிறுக்கல்கள் -128






நீங்கள் உன்னிப்பாக கேட்பது, எதையும் கற்றுக்கொள்ள இல்லை; உங்கள் எண்ணங்களை சரி என்று சொல்கிறார்களா என்று கவனிக்கவே. நீங்கள் விவாதம் செய்வது தெளிவு பிறக்க இல்லை. நம் சிந்தனையை யாரும் ஆமோதிக்க மாட்டார்களா என்பதற்கே!

ஒரு ராஜா ஒரு க்ராமத்தின் வழியே போய்க்கொண்டு இருந்தான். க்ராமத்தை சுற்றி இருந்த ஒவ்வொரு மரத்திலும் ஒரு அம்பு தைத்து இருந்தது. அது சரியாக ஒரு வட்டத்தின் மையத்தில் தைத்திருந்தது. ஆச்சரியப்பட்ட ராஜா யார் இதை செய்தது என்று விசாரித்ததில் எல்லாரும் ஒரு 4 வயது பையனை காட்டினார்கள்.

அவனை பிடித்த ராஜா கட்டித்தழுவி "எப்படி அப்பா நீ விடும் அம்புகள் எல்லாம் சரியாக வட்டத்தின் மையத்தில் இருக்கு?” என்று ஆச்சரியத்தை தெரிவித்தான்.
அதற்கு அந்த சிறுவன் " அது ரொம்ப சுலபம் ராஜா! முதலில் அம்பை எய்துவிட்டு பின்னால் அதைச்சுற்றி வட்டத்தை வரைந்துவிடுவேன்!” என்றான்

இப்படித்தான் நீங்களாக எதையோ முடிவு செய்து விடுகிறீர்கள். அது ஏன் எப்படி என்பதற்கு ஆதாரத்தை அதைச்சுற்றி கட்டுமானம் செய்கிறீர்கள்! உங்கள் கருத்தியல்களும் மதங்களும் இப்படித்தானே இருக்கின்றன?

No comments: