Pages

Thursday, June 8, 2017

அந்தணர் ஆசாரம் - 17 ஹோமங்கள்





ஔபாசனம் செய்வோர் ஒவ்வொரு ப்ரதமை திதிக்கும் ஸ்தாலிபாகம் செய்ய வேண்டும். ஔபாசனாக்கியில் அரிசி களைந்து வைத்து பாகம் செய்து (சமைத்து) அன்னத்தை ஹோமம் செய்ய வேண்டும். இதற்கு சொல்லப்பட்டுள்ள நடைமுறையே எல்லா ஹோமங்களுக்கும் பொதுவான நடைமுறை. வெவ்வேறு ஹோமங்களில் தேவதையும் ஹவிஸூம் மந்திரமும் மாறக்கூடும். சில கூடுதல் நடைமுறைகளும் இருக்கலாம். ஆனால் அடிப்படை இதுவே. இதை கற்றவர் மற்ற ஹோமங்களை எளிதில் செய்ய இயலும்.
ஸூர்யோதய ஸூர்யாஸ்தமனம் ஒட்டிய காலமே ஹோமத்துக்கான காலமாகும். ஸ்தாலீபாகத்திற்கு ஸங்கவ காலம் முக்கிய காலமாகும்.
காலை ஔபாசம் தாமதமானால் மாலை ஔபாசன நேரம் வரை கௌண காலமாகும். அதே போல ஸாயம் ஔபாசனதுக்கு காலை ஔபாசன நேரம் வரை கௌண காலமாகும். ஆனால் அக்னிக்கு உணவளிக்காமல் நாம் உண்ணுவது தோஷமாகும்.
ஸ்தாலீபாகத்துக்கு முக்கிய காலம் ப்ரதமை. அன்று இயலாவிட்டால் அடுத்து வரும் பௌர்ணமி/ அமாவாசை வரை கௌண காலமாகும்.
ஹோமத்துக்கு அர்ஹமான ஸமித்துகள் இவை:
புரசு , கருங்காலி, அரசு, வன்னி, அத்தி, நாயுருவி, எருக்கு, அருகம்புல், தர்ப்பம்.
இக்காலத்தில் ஸமித் கிடைப்பது சிரமமாதலால் ப்ரம்ஹசாரிகள் கட்டை தர்ப்பத்தை வைத்துக்கொண்டே ஸமிதாதானம் செய்யலாம்.
ஸமித்துகளில் லக்ஷணம் சொல்லப்படுகிறது. நல்ல தோல் உள்ளவையாக இருக்க வேண்டும். கோணலில்லாமல் நேராகவும்; 10-12 விரற்கடை நீளமும்; காய்ந்ததும் ஆனால் கொஞ்சமாவது ஈரத்துடனும்; சரியா வெட்டப்பட்டவையாகவும்; ஆள்காட்டி விரல் பருமனாகவும்; பிளக்கப்படாமலும்; கிளைக்காமலும்; புழுவெட்டு இல்லாமலும் இருக்க வேண்டும். கடையில் வாங்கும் ஸமித்துகளில் 30% தேறினால் அதிசயம்!
பொதுவாக பால் உள்ள மரங்களை அக்னிக்கு பயன்படுத்தலாம். அக்னிக்கு விறகாக பயன்படுத்தக்கூடாத மரங்கள் சொல்லப்படுகின்றன. மலையகத்தி, தானி, விளா, நெல்லி, கொன்னை, பாலை, கடம்பு, வேம்பு, பின்னை, திலகம், முள்ளிலவு, நறுவினி ஆகியவற்றின் ஸமித்தோ விரகோ பயன்படுத்தக்கூடாது.
காய்ந்த துளசி சுள்ளியால் செய்யும் ஹோமம் அக்ஷ்ய பலத்தை தரும்.
எந்த ஸமித், கட்டையையும் அக்னியில் போடும் முன் ப்ரோக்ஷித்தே போட வேண்டும்.

No comments: