ரைட்!
இப்ப வழக்கமான
உபாசனையும் கெடக்கூடாது.
அதே சமயம்
ஏதோ ஒரு ஆசையால உந்தப்பட்டு
புதுசா ஒரு உபாசனையும்
குறிப்பிட்ட நோக்கத்துக்காக
செய்யணும்.
செய்யலாம்.
முக்கியமான
விஷயம் நெடுங்காலமா செஞ்சுக்கொண்டு
வர உபாசனையை விட்டுடக்கூடாது.
உபாசனை
வெறும் தியானம் - ஜபமா
இருந்தா எங்கிருந்து வேணுமானாலும்
செய்யலாம். பிரச்சினை
இல்லை.
வீட்டில்
செய்கிற பூஜையானால்?
வழக்கமான
பூஜையை பண்ணிக்கொண்டு புதுசா
வந்திருக்கிற மூர்த்தியையோ
படத்தையோ அதே பூஜையில்
வெச்சுக்கொள்ளலாம்.
சாதாரணமா
எல்லாத்துக்கும் ஒரே பொது
ப்ரொசீஜர்தானே? அர்ச்சனை
கூடுதலா சேரும். நிவேதனம்
வேணுமானால் கூடுதலா சேத்துக்கலாம்.
இன்ன இன்ன
தெய்வத்துக்கு இது இது
ப்ரீதின்னு விதவிதமா சொல்கிறதாலே
இது வேண்டி இருக்கும்.
பஞ்சாயதன
பூஜை செஞ்சு கொண்டு வரவங்களுக்கு
இது சுலபமே. ஏற்கெனவே
5 மூர்த்திகள்
இருக்கும். என்
பூஜையில் ஆரம்பத்திலேயே
தங்கவேலரும், பின்னால
மன்ஸரோவர் ஶிலா
ஶிவனாகவும்
இன்னும் பின்னால் குரு
பாதுகைகளும் சேர்ந்து போச்சு.
கூடுதலா 5
நிமிஷம்
ஆறது; அவ்ளோதான்.
வேற
மாதிரி ஏதாவது கோவிலுக்கு
போறது விசேஷமா ஆராதனை செய்யறது
என்கிறது கொஞ்சம் சிரமம்.
உள்ளூர் ஆனா
பரவாயில்லை. வெளியூர்
போய் செய்யணும்ன்னா வழக்கமா
செய்கிற உபாசனைகள் பாதிக்கப்பட
வாய்ப்பிருக்கு. நமக்கு
சில தேர்வுகள் இருக்கு.
வீட்டு
உபாசனையை வேற ஒத்தரை விட்டு
செய்யச்சொல்லலாம்.
அப்படி
ஆள் இல்லைன்னா போகும் இடத்துக்கு
பூஜையையும் கொண்டு போகலாம்.
ஆனா இப்பல்லாம்
இது கொஞ்சம் உசிதமில்லை.
சுத்தம்
போதாமை நிறையவே இருக்கு.
வீட்டிலேயை
வைத்துவிட்டு மானசீகமா பூஜை
செய்யறதே நல்லது.
இப்படி
செய்கிற காம்ய உபாசனைகளுக்கு
ஒரு வரையறை வெச்சுக்கறது
நல்லது. பொதுவா
அப்படி இருக்கவும் இருக்கும்.
இத்தனை
வாரங்கள் ஞாயிறு தவறாமல்
இன்ன கோவிலுக்கு போகிறது
என்பது போல. அப்படி
சங்கல்பமே செய்யணும்;
நிறைவேத்தணும்.
நடுவில செய்ய
முடியாம போச்சுன்னா திருப்பி
ஆரம்பித்து செய்யணும்.
கொஞ்சம்
விளக்கலாம்.
காஞ்சிபுரத்தில
வழக்கறுத்தீஸ்வரர் கோவில்ன்னு
ஒண்ணு உண்டு. யாரானா
அநியாயமா நம்ம மேல கேஸ்
போட்டுட்டாங்கன்னா 16
வாரங்கள்
திங்கட்கிழமை தோறும் அங்கே
போய் விளக்கேத்தி வழிபட
நியாயம் கிடைக்கும்ன்னு ஒரு
பரிகாரம் சொல்லறாங்க.
நமக்கு அப்படி
ஒரு பிரச்சினை வந்துடுத்து.
நாமும்
சரின்னு இப்படி தொடர்ந்து
16 வாரம்
போகிறதா சங்கல்பம் செஞ்சு
கொண்டு போகிறோம். நடுவில
ஒரு அசந்தர்ப்பம்; போக
முடியலை.10 வாரம்
போனேனே 14 வாரம்
போனேனே எனக்கு நினைச்சது
கிடைக்கணும்ன்னா அப்படி
கிடைக்காம போகும் வாய்ப்பே
அதிகம். திருப்பி
ஒண்ணுன்னு ஆரம்பிச்சு தொடர்ந்து
16 வார
வழிபாட்டை முடிக்கணும்.
பின்னே பலன்
கிடைக்கணும்ன்னா சட்ட
திட்டங்களுக்கு உட்பட்டுத்தானே
ஆகணும்?
இதுக்குத்தான்
பல சமயங்களில் பூஜைகளிலே
சங்கல்பத்தில 'யாவச்சக்தி'
ன்னு
சொல்லிடுவாங்க. என்னால
முடிஞ்ச வரை சக்தி இருக்கற
வரை ன்னு அர்த்தம்! பலனும்
அதுக்குத்தகுந்தாப்போலத்தான்
இருக்கும்.
No comments:
Post a Comment