Pages

Friday, June 2, 2017

ஆன்மீக விசாரம் -16




என்ன செய்யலாம்?
முதல்ல கொஞ்சம் ரீசனிங் முயற்சி செய்யலாம். உண்மையில் இருக்கிறது ஒரே கடவுள்தான். நமக்கு வசதிக்காக ஏதோ ஒரு பேர் உருவம் அதை ஒட்டின கதைன்னு வெச்சிருக்கோம். அப்பதானே அதில ஒரு ஈடுபாடு இருக்கும்? இந்த தெய்வம் பெரிசு; இது அதைவிட இன்னும் பவர்புல்ன்னு எல்லாம் சொல்லறது ஈடுபாட்டை அதிகரிக்கவே. அதனால நாம வழக்கமா கும்பிடற தெய்வத்தையே கும்பிடலாம்; வேண்டியதை அதுகிட்டயே கேட்கலாம். கொடுக்கலைன்னா இது இப்ப நமக்கு ப்ராப்தம் இல்லைன்னு சும்மா இருக்கலாம்.
சுலபமா சொன்னாலும் இதுல பலருக்கும் நாட்டம் வராது. புத்திக்கு சரின்னு தோணினாலும் மனசு ஒத்துக்காது.
ரைட்
குறிப்பிட்ட உபாசனை குறிப்பிட்ட விஷயத்துக்கு வேலை செய்யும்ன்னு யாரோ வகைப்படுத்தி இருக்காங்க.
எந்த சிவன் கோவிலுக்கு போனாலும் அங்க இருக்கறது சிவலிங்கம்தானே? எப்படி இடத்துக்கு இடம் பலன் வித்தியாசமாகும்? எப்படி ஒண்ணை விட இன்னொண்ணு சக்தி வாய்ந்ததா ஆகும்?
சிவன் கோவில் ஆனாலும் அங்க அவரை வழிபட்ட சித்தர் ஒத்தரோட ஜீவ சமாதி இருக்கும். சில கோவில்களில் இது நல்லாவே தெரிஞ்சிருக்கும். பல கோவில்களிலேயும் தெரியாம இருக்கும். இந்த சித்தர் உலகத்தோட ஒட்டி வாழ்ந்தவர் ஆதலால அவரோட பார்வை ஏதோ ஒரு குறிப்பிட்ட வழில இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு வழில லோகத்துக்கு நல்லது செஞ்சிருப்பாங்க. சிலர் வறுமை நீங்க, சிலர் பாவங்கள் நீங்க, படிப்பு நல்லா வரன்னு … இந்த வழியே இப்ப சிவன் கோவிலில் இருக்கற சிவனுக்கும் இருக்கறதா மக்கள் அபிப்ராயம் இருக்கும். நடைமுறையிலும் இது தெரியும்.
எப்படி ஒண்ணை விட இன்னொண்ணு சக்தி வாய்ந்ததா ஆகும்ன்னா …
ஆரம்ப காலத்தில எல்லாம் ஒரே சக்தியோட இருந்திருக்கலாம். ஆனா இதை அப்படியே தக்க வெச்சுக்க அந்த கோவில் நடைமுறைகள் சரியா இருந்திருக்கணும். ஆகம விதிகளை சரியா கடைபிடிச்சு இருக்கணும். சரியான இடைவெளியில கும்பாபிஷேகம் நடந்து இருக்கணும், தினசரி பூஜைகள் நியமமா நடந்து இருக்கணும். இதுல குறை வந்தா உள்ளே இருக்கற சிவன் என்னதான் சக்தி வாய்ந்தவர்னாலும் அதை வெளியே விடமாட்டார். காலப்போக்கிலே எல்லாம் பாழாப்போகும்.
தமிழ்நாட்டில பலதும் இந்த நிலைமைலதான் இருக்கறதா சொல்றாங்க.
கோளாறா யோசிச்சு பாத்ததுல இந்த ரெண்டு காரணங்களால இடத்துக்கு இடம் பலன் மாறுபடறதா தோணறது.

- தொடரும்

No comments: