981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர்
982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர்
983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர்
984. மந்த்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) நினைப்பவர்
985. அமந்த்₁ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) நினைக்காதவர்
986. அநுமந்த்₁ரே நம꞉ (மனம் விஷயங்களை நினைக்கையில் அதற்குள் இருப்பதால்) அதனை ஒட்டி பார்ப்பவர்
987. போ₃த்₃த்₄ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) தீர்மானிப்பவர்
988. அபோ₃த்₃த்₄ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) தீர்மானிக்காதவர்
989. ப்₁ரபோ₃த₄க்₁ருʼதே₁ நம꞉ (ஆத்மாவை அறிய வேண்டும் என்ற) விழிப்பூட்டுபவர்
990. ஏகா₁ய நம꞉ (உண்மையில்) ஒன்றாக உள்ளவர்
991. அநேகா₁ய நம꞉ (உலக நடப்பில்) பலதாக உள்ளவர்
992. கே₁வலாத்₁மநே நம꞉ (வெளி தொடர்பற்ற) தனி ஆத்மாவானவர்
993. ஸர்வஸ்மை நம꞉ எல்லாமும் ஆனவர்
994. ஸம்ʼஸாரமோச₁நாய நம꞉ ஸம்ஸாரத்தில் இருந்து விடுவிப்பவர்
995. நித்₁யஶுத்₃தா₄ய நம꞉ எப்போதும் சுத்தர்
996. நித்₁யபு₃த்₃தா₄ய நம꞉ எப்போதும் நல்லறிவானவர்
997. நித்₁யமுக்₁தா₁ய நம꞉ எப்போதும் முக்தர் ஆனவர்
998. நிராஶ்ரயாய நம꞉ (தனக்கு) புகலிடம் (தேவை) இல்லாதவர்
999. ஹார்தா₃வித்₃யாத₁மஶ்சே₂த்₁த்₁ரே நம꞉ ஹ்ருதயத்தில் உள்ள அவித்யை என்னும் இருளை வெட்டுபவர்
1000. ப₄க்₁த₁ஹ்ருʼத்₁ப₁த்₃மபா₄ஸ்க₁ராய நம꞉ பக்தர்களின் இதயத் தாமரையில் சூரியனானவர்.
-பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்ட