961. ப்₁ரஜ்ஞாநக₄நாய நம꞉ திரண்ட அறிவு வடிவினர் (அறிவு தவிர வேறெதுவுமில்லாதவர்)
962. விஜ்ஞாநாத்₁மநே நம꞉ ஶரீரத்திற்குள் இருந்து் விஷயங்களை அறியும் விஞ்ஞான வடிவினர்
963. விலாஸக்₁ருʼதே₁ நம꞉ (அத்தகைய விஞ்ஞானங்களிலேயே) ஒளிர்பவர்
964. ப்₁ரியாப்₁ரியஸ்ப₁ர்ஶஹீநாய நம꞉ பிடித்தது பிடிக்காதது என்னும் உணர்வுகளால் பாதிக்கப்படாதவர்
965. அம்ருʼதா₁ய நம꞉ அழிவில்லாதவர்
966. ஆகா₁ஶதே₃ஹவதே₁ நம꞉ ஆகாஶத்தையே உடலாகக் (கொண்டு உள்ளுறைபவர்)
967. அபூ₄மயே நம꞉ நிலம் அல்லாதவர்
968. அஜலாய நம꞉ நீர் அல்லாதவர்
969. அநக்₃நயே நம꞉ நெருப்பு அல்லாதவர்
970. அவாயவே நம꞉ வளி (காற்று) அல்லாதவர்
971. அநம்ப₃ராய நம꞉ வெளி (ஆகாயம்) அல்லாதவர்
972. அக்₃ராஹ்யாய நம꞉ (கர்ம இந்த்ரியங்களால்) பிடிக்க இயலாதவர்
973. அத்₃ரேஶ்யகா₁ய நம꞉ (ஞான இந்த்ரியங்களால்) காண முடியாதவர்
974. அஶ்ரோத்₁ரே நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) கேட்காதவர்
975. ஶ்ரோத்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) கேட்பவர்
976. க₁ர்த்₁ரே நம꞉ (உலக நடப்பில் அனைத்தையும்) செய்பவர்
977. அக₁ர்த்₁ருʼகா₁ய நம꞉ (உண்மையில் எது ஒன்றையும்) செய்யாதவர்
978. அக₃ந்தா₄ய நம꞉ (உண்மையில்) மணமற்றவர்
979. அரஸகா₁ய நம꞉ சுவையில்லாதவர்
980. அரூபா₁ய நம꞉ உருவில்லாதவர்
No comments:
Post a Comment