Pages

Friday, June 4, 2021

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 63





 

862. ஹர்ஷாமர்ஷஸஹாய நமமகிழ்ச்சியும் கோபத்தையும் சகித்துக்கொள்பவர்

863. ஹாஸகு₁ஶலாய நம꞉ (உள்ளிருக்கும் ஆனந்தத்தால்) சிரித்துக்கொண்டு சுகமாய் இருப்பவர்

864. ஹாநிவ்ருʼத்₃தி₄நுதே₃ நமமிகுவது குறைவது (இரண்டையும்) தள்ளிய (பரம்பொருளானவர்)

865. ஸப்₄யாய நமஸபையில் முன்னிற்பவர்

866. ஸபா₄ப₁த₁யே நமஸபைக்கு தலைவர்

867. ஸ்வாமிநே நம꞉ (அனைத்திற்கும்) உரிமையாளர்

868. ஸம்ப்₄ருʼத₁யே நம꞉ (சேவை செய்பவர்களுக்கு அனுக்ரஹமாகிய) நல்ல ஊதியம் அளிப்பவர்

869. ஸம்ப₄வாப₁ஹாய நம꞉ (மீண்டும் மீண்டும்) பிறப்பதன் (அவசியத்தை) தவிர்ப்பவர்

870. ஹ்ரீவேர ஶீத₁ல ஸ்வாந்தா₁ய நமவிளாமிச்சை வேர் போல் குளிர்ச்சியாகவும் (வாசனையாகவும் உள்ள) மனதைக் கொண்டவர்

871. ஹ்ரீமதீ₁ ஹாரிதா₁த்₁ம பா₄ஜே நமலஜ்ஜையுடவளாகிய (அம்பாளால் ஆனால் தைரியமாக) அபஹரிக்கப்பட்ட (பாதி) உடலைக் கொண்டவர்

872. லக்ஷிதா₁ஶேஷமந்த்₁ரார்தா₂ய நமஅனைத்து மந்த்ரங்களின் லக்ஷ்ய அர்த்தங்களையும் (அறிந்தவர்)

873. லக்ஷகோ₁ட்₁யண்ட₃நாயகா₁ய நமலக்ஷம் கோடி ப்ரம்மாண்டங்களுக்கு நாயகன்

874. லலிதா₁ங்கா₃ய நமலளிதமான உடலைக் கொண்டவர்

875. லய ஜ்ஞாத்₁ரே நம꞉ (ப்ரஹ்மத்துடன்) லயத்தை அறிந்தவர்

876. லப்₃த₄ஸ்வாய நமதன்னை அடைந்தவர்

877. லப்₃த₄ஹர்ஷணாய நமகிடைத்த (தன் சொரூபமான ஆனந்தத்தில்) களித்திருப்பவர்

878. க₁ம்பு₃க₁ண்டா₂ய நமசங்கு போன்ற கழுத்துடையவர்

879. க₁லித்₄வம்ʼஸிநே நமகலியை துவம்சம் செய்பவர்

880. க₁ல்யாணாத்₁மநே நமமங்களங்களில் உள்ளுறைபவர்


No comments: