போக்தா சாப்பிடும் முன் அதிலிருந்து எவரும் எடுத்து சாப்பிட்டு விட்டால் அது சிரார்த்தத்துக்கு உதவாது. உப்பை பிரத்யட்சமாக வைக்கக்கூடாது. ஆன்ஹிக காண்டத்தில் தினசரி உணவில் எது தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறதோ அதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். சமையலுக்காக அரிசியை பாயி போடுவது முதல் போஜனம் பூர்த்தி ஆகும் வரை உணவை மது அருந்துபவன், வியபசாரி,ஆகியவர்கள் பார்க்கக்கூடாது. பன்றி, கோழி, நாய், பூனை, வீட்டு விலக்கான பெண்கள், பிரசவம் ஆகி தீட்டு கழியாதவர்கள், தீட்டு உடையவர்கள் பெண்ணின் சம்பாத்தியத்தில் ஜீவனம் நடத்துபவர்கள், பணத்தை வட்டிக்கு விட்டு ஜீவனம் நடத்துபவர்கள், அங்கஹீனம் உள்ளவர்கள், காரணமில்லாமல் சடை உள்ளவர்கள், மொட்டை அடித்துக் கொண்டவர்கள், மகாபாதகம் செய்தவர்கள், அலி - இவர்கள் சாப்பிடும் பிராமணர்களை பார்க்கக்கூடாது. கஷாயம் அணிந்தவர்கள் குஷ்டரோகம் உடையவர்கள் பதிதன் கர்ப்பத்தை கொன்றவர்கள் கலப்பு திருமணம் செய்த பிராமணர்கள் இவர்களும் விலக்கத் தக்கவர்கள்.
அப்படி பார்த்துவிட்டால் அன்னத்துக்கு சுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஹோமம்,ப்ராம்ஹண போனம், பிண்டப்ரதானம் ஆகிய உக்கிய காரியங்களுக்கு வேறு அன்னம் தயார் செய்ய வேண்டும். பக்குவமான ஹவிஸுகளை தள்ள சக்தி இல்லை என்றால் மண்ணுடன் கூடிய தண்ணீரால் ப்ரோக்ஷணம் செய்யவும். வெண்கடுகு கருப்பு எள் ஆகியவற்றையும் இறைக்க வேண்டும் குரு சூரியன் அக்னி ஆடு இவற்றை அவசியம் தரிசனம் செய்யவேண்டும். சுத்தவதிகள் கூஶ்மாண்டிகள் பாவமானிகள் தரத்ஸமங்கள் என்ற மந்திரங்களால் அபிமந்த்ரணம் செய்த ஜலத்தை தர்ப்பைகளால் தெளித்தும் சுத்திகரிக்கச் செய்யலாம் ரோமம் முதலியவற்றால் அசுத்தம் ஆனால் எவ்வளவு எடுத்து எறிய முடியுமோ அதை விலக்கி விட்டு மீதியை காயத்ரியால் ப்ரோக்ஷித்து அல்லது நெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment