101.
கே:
பண்டிதன் என்பவன்
யார்?
ப:
தர்மத்தை அறிந்தவனே
பண்டிதன்.
102.
கே:
“நாஸ்திகன் "
என்பவன் யார்?
ப:
'பர லோகமில்லை'
என்று கூறும்
மூடனே நாஸ்திகன்.
103.
கே:
"மூர்க்கன்"
எனப்படுபவன்
யார்?
ப:
நாஸ்திகனே
மூர்க்கன் எனப்படுபவன்.
104.
கே:
காமம் என்றாலென்ன?
ப:
ஸம்சாரத்துக்கு
காரணமான வாசனைகளே காமம்
எனப்படும்.
105.
கே:
“மத்ஸரம்"
என்றால் எது?
ப:
மனதில் ஏற்படும்
தாபங்களே மத்ஸரம் எனப்படும்.
106.
கே:
“அஹங்காரம்"
என்றாலென்ன?
ப:
கொடிய அஞ்ஞானமே
அஹங்காரம் எனப்படும்.
107.
கே:
“தம்பம்"
என்பது யாது?
ப:
தர்மத்தை
அனுஷ்டிப்பதாக உலகத்தாரிடம்
விளம்பரம் செய்தல்.
108.
கே:
"தெய்வம்"
என்பது யாது?
ப:
ஒருவன் செய்த
தானத்தின் பலனே 'தெய்வம்'
என வழங்கப்படுகிறது.
109.
கே:
"பைசூன்யம்"
என்றாலென்ன?
ப:
பிறரை தூஷித்தல்.
110.
கே:
தர்மம்,
அர்த்தம்,
காமம் இம்மூன்றும்
பரஸ்பரம் முரண்பட்டவை அல்லவா?
இவை மூன்றும்
ஓரிடத்தில் எவ்வாறு சேர்ந்திருத்தல்
கூடும்?
ப:
தர்மமும் பார்யையும்
பரஸ்பரம் விரோதமில்லாது
இருக்க வேண்டும்.
அதாவது பார்யை
தர்மத்துக்கு அனுகூலமாக
இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால்
தர்மத்தில் இருந்து அர்த்தமும்
பார்யையிடமிருந்து காமமும்
உண்டாகும்.
ஆக அனுகூலமான
பார்யையை அடைந்து தர்மத்தை
அனுஷ்டித்து வந்தால்
"த்ரிவர்க்கம்"
எனப்படும் தர்மம்,
அர்த்தம்,
காமம் இம்மூன்றும்
சித்திக்கும்.
அதன் மூலம்
க்ருஹஸ்தனுக்கும் மோக்ஷத்தில்
அதிகாரம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment