81.
கே:
தவத்தின் இலக்ஷணம்
என்ன?
ப:அவரவருக்கு
விதிக்கப்பட்ட தர்மத்தை
விடாமல் அனுஷ்டிப்பதே தவமாம்.
82.
கே:
தமம் என்பதென்ன?
ப:
மனம் போன படியெல்லாம்
விடாது அடக்குவதே தமமாம்.
83.
கே:
க்ஷமா என்றால்
என்ன?
ப:
" த்வந்தவம்"
[இருமை]
எனக்கூறப்படும்
பசி,
தாகம்,
ராகம்,
த்வேஷம் முதலியவற்றை
பொறுத்துக்கொள்ளுதலே க்ஷமா
எனப்படும்.
84.
கே:ஹ்ரீ:
என்றால் என்ன?
ப:
கெட்டக்காரியங்களை
செய்ய வெட்கப்பட்டு அவற்றை
செய்யாமல் இருத்தலே ஹ்ரீ:
எனப்படும்.
85.
கே:
ஞானம் என்றாலென்ன?
ப:உண்மையான
பொருளை அறிந்து கொள்ளுதலே
ஞானம்.
86.
கே:
சமம் என்றாலென்ன?
ப:
மனம் அடங்கி
இருத்தலே சமமாம்.
87.
கே:
தயை என்றாலென்ன?
ப:
அனைவரும் சுகமாக
வாழவேண்டும் என விரும்புதல்.
88.
கே:
ஆர்ஜவம் என்றாலென்ன?
ப:
அனைவரிடமும்
சமமான எண்ணத்துடன் கூடியிருத்தல்.
89.
கே:
ஜெயிக்க முடியாத
விரோதி யார்?
ப:
கோபம்.
90.
கே:
தீராத வியாதி
எது?
ப:
பேராசை.
No comments:
Post a Comment