31.
கே:
வேகத்தால் விருத்தி
அடைவது எது?
ப:
நதீ.
32.
கே:
வேறு தேசத்துக்குச்
செல்லுகிறவனுக்கு துணைவர்
யார்?
ப:
தன்னுடன் கூட
வரும் கூட்டத்தினரே துணைவர்களாம்.
33.
கே:வீட்டில்
இருக்கின்றவனுக்கு உதவி
புரிகின்றவர் யார்?
ப:
மனைவி.
34.கே:
வியாதியால்
பீடிக்கப்பட்டவனுக்கு துணைவன்
யார்?
ப:
வைத்தியன்.
35.
கே:
இறக்கின்றவனுக்கு
எது துணை புரிகின்றது?
ப:
தானம்.
36.
கே:
அனைவருக்கும்
அதிதி யார்?
ப:
ஆஹவனீயம் முதலிய
அக்னி.
(அனைவரும் அக்னி
உபாசனம் செய்ய வேண்டும் என்பது
கருத்து.)
37.
கே:
எந்த தர்மம் வெகு
நாளாக உள்ளது?
ப:
மோக்ஷத்திற்கு
சாதகமான யாகம் முதலியவை வெகு
நாட்களாக உள்ளன.
38.கே:
அமிருதம் என்பது
எது?
ப:
மோக்ஷத்திற்கு
சாதகமான ஹோமத்திற்கு
உபயோகப்படுவதால் பசுவின்
பாலே அம்ருதம் எனப்படும்.
39.
கே:
உலகம் முழுதும்
வியாபித்து இருப்பது எது?
ப:
வாயு.
மேற்கண்ட
4
கேள்வி-பதில்களால்
கோக்ஷீரத்தால் ஹோமம் முதலியவற்றை
செய்து வாயு ஸ்வரூபமாகி பிறகு
மோக்ஷத்தை அடையலாம் என்று
கூறப்பட்டதாகிறது.
40.
கே:
ஒருவனாக எப்போதும்
சஞ்சரிப்பான்,
யார்?
ப:
சூரியன்.
ஆ.கே:
உலகம் முழுதும்
வியாபித்து இருக்கும் வாயு
அழியும் காலத்திலும் எஞ்சி
நிற்பவன் யார்?
ஆ.ப:
சூரியன் போல ஒளி
மயமான ஆத்மாதான் எஞ்சி நிற்பவன்.
.
No comments:
Post a Comment