74.
கே:
எந்த சிராத்தம்
நஷ்டமானதாக கருதப்படும்
ப:
அத்யயனம் செய்த
ப்ராம்ஹணன் இல்லாத சிராத்தம்
நஷ்டமானதாக கருதப்படும்.
[எந்த சிராத்தத்தில்
அத்யயனம் செய்த ப்ராம்ஹணன்
வரிக்கப்படவில்லையோ அந்த
சிராத்தம் நஷ்டமாம்.]
75.
கே:
எந்த யாகம்
பயனற்றது?
ப:
எதில் வேதத்தில்
கூறியபடி தக்ஷிணை கொடுக்கப்படவில்லையோ
அந்த யாகம் பயனற்றது'
லோபத்தை
ஒழிக்காத மனிதன் இறந்தவனுக்கு
சமம் என்று 72
ஆம் கேள்விக்கு
சொல்லப்பட்டது.
73-75 வது கேள்விகளும்
பதில்களும் அதை ஒட்டியவையே.
76.
கே:
திக் என்றால்
எது?
[அதாவது உபதேசம்
செய்யக்கூடியவர் யாவர்?]
ப:
வேதங்களை நன்கு
கற்று அறிந்தவர்.
77.
கே:
ஜீவனுடைய ஸ்வரூபம்
எது?
ப:
ப்ருஹ்ம ஸ்வரூபமே
ஜீவனின் ஸ்வரூபம்.
78.
கே:
எது அன்னம்?
ஆ.கே:
எது அன்னத்தை
உண்டு கரைப்பதைப்போல கரைக்கப்பட
வேண்டியது?
ப:
இந்திரியங்களும்
அவற்றால் அறியப்படும்
இப்பிரபஞ்சமும்.
ஆ.ப:
இவை மித்யை என்று
அறிந்து இவற்றை தள்ளிவிட
வேண்டும்.
79.
கே:
எது விஷம்?
ப:
காமமே விஷம்.
ஆ.ப:
ஜனனம் மரணம் ஆகிய
சம்சாரத்தை தருவதால் காமமே
விஷம்.
76-79
காமத்தை ஒழித்து
குரு உபதேசத்தால் பிரபஞ்சம்
மித்யை என உணர்ந்து அதைத்தள்ளிவிட்டு
ஜீவ பிரும்ஹ ஐக்கியத்தை அறிய
வேண்டும் என்பது கருத்து.
80.
கே:
சிராத்தத்துக்கு
காலம் எது?
ப:
நல்ல பிராம்ஹணன்
கிடைக்கும் காலமே சிராத்தத்துக்கு
காலம்.
ஆ.ப:
ஸத் பாத்திரம்
கிடைக்கும் பொழுதே தானம்
முதலியவற்றை செய்துவிட
வேண்டும்.
நல்ல ஆசார்யன்
கிடைக்கும் பொழுதே தத்துவத்தை
அவரிடமிருந்து அறிந்து கொள்ள
வேண்டும்.
No comments:
Post a Comment