91.
கே:
ஸாது எனக்குறிப்பிடக்கூடியவன்
யார்?
ப:
எல்லாப்பிராணிகளுக்கும்
நன்மை செய்பவன்.
92.
கே:
அஸாது
எனக்குறிப்பிடக்கூடியவன்
யார்?
ப:தயை
என்ற குணமற்றவன்.
93.
கே:
மோஹம் என்றாலென்ன?
ப:
தர்மத்தில்
அறிவில்லாமை.
94.
கே:மானம்
என்றால் எது?
ப:
தானே பெரியவன்
என்ற அஹங்காரத்துடன் இருத்தல்.
95.
கே:
“ஆலஸ்யம்"
(சோம்பல்)
என்று எதை கருத
வேண்டும்?
ப:
தர்மத்தை
அனுஷ்டிக்காமல் இருத்தலே
சோம்பலாம்.
96.
கே:
சோகம் என்பதென்ன?
ப:
அறியாமையே சோகம்.
97.
கே:
“ஸ்தைர்யம்"
(உறுதி)
என்பதென்ன?
ப:
சொந்த தர்ம
அனுஷ்டானத்தில் இருப்பதே
ஸ்தைர்யம்.
98.
கே:
“தைர்யம்"
என்றாலென்ன?
ப:
இந்திரியங்களை
அதனதன் விஷ்யங்களில் இருந்து
திருப்புதலே தைர்யம்.
99.
கே:
“ஸ்நாநம்"
என்றாலென்ன?
ப:
மனதில் உள்ள
அழுக்குகளை -காமம்
குரோதம் ம்தலியவற்றை த்யாகம்
செய்தலே ஸ்நாநம் ஆகும்.
100.
கே:
தானம் என்றாலென்ன?
ப:
பூதங்களை ரக்ஷித்தலே
தானம்.
No comments:
Post a Comment