Pages

Sunday, May 12, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 6



41. கே: எவன் அடிக்கடி பிறக்கின்றான்?
: சந்திரன்.
.கே: ஒன்றாக உள்ள ஆத்ம ஸ்வரூபத்தில் ப்ரபஞ்சம் எவ்வாறு பிறக்கிறது?
.: மனதினால். மனதுக்கு அதிஷ்டான தேவதை சந்திரன். ஆதலால் சந்திரன் அடிக்கடி பிறக்கின்றான் என்ற பதிலிலிருந்து பிரபஞ்சம் மனதினால் கற்பிக்கப்பட்டு தோன்றுகிறது அல்லாமல் உண்மையில் இல்லை என்று கொள்ள வேண்டும்.

42. கே: பனிக்கு மருந்து எது?
:நெருப்பு.
.கே: பனி போல் ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு இருக்கும் அவித்தையை நிவிருத்தி செய்யக்கூடியது எது?
.: தத்வமஸி முதலிய வாக்கியத்திலிருந்து உண்டாகும் ஞானம். இங்கு பனி என்பது அவித்தை என்றும், அக்னி என்பது அக்னியை அதிஷ்டான தேவதையாக கொண்ட வாக் என்றும் கொள்ள வேண்டும்.

43. கே: மிகப்பெரிய ஆதாரமான வஸ்து எது?
: பூமி
.: அஞ்ஞானம், அதனால் விளையும் பலவித சுகதுக்கங்கள், ஞானம் அத்னால் உண்டாகும் மோக்ஷம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பது இந்த உடல். நமது உடலில் பூமியின் அம்சமே அதிகமானதால் பூமி என்றே அது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

44. கே: தர்மத்தை அனுஷ்டிக்க சிறந்த ஸாதனம் யாது?
: விடா முயற்சி.

45.கே: புகழைப்பெற சிறந்த ஸாதனம் யாது?
: கொடை

46. கே: ஸுவர்க்கத்தை அடைய சிறந்த ஸாதனம் யாது?
: உண்மை பேசுதல்

47.கே: சுகத்தை அடைய சிறந்த ஸாதனம் யாது?
: நல்லொழுக்கம்.

48. கே: மனிதனுடைய ஆத்மா எனக்கூறக்கூடியவன் எவன்?
: மகன்.

49. கே: தெய்வத்தால் அளிக்கப்பட்ட துணை யார்?
: மனைவி.

50. கே: மனித வாழ்வுக்கு ஸாதனம் எது?

: மழை
 

No comments: