61
.கே:
எதை விட்டால்
வருந்தாமல் இருக்கலாம்?
ப:
கோபத்தை விட்டால்
வருந்தாமல் இருக்கலாம்.
62.
கே:
எதை விட்டால்
பணக்காரன் ஆகலாம்?
ப:
காமத்தை விட்டால்
பணக்காரன் ஆகலாம்.
63.
கே:
எதை ஒழித்தால்
சுகத்தை அடையலாம்?
ப:
லோபத்தை எதை
ஒழித்தால் சுகத்தை அடையலாம்.
காமம்
என்பது பொருள் இன்னும் வேண்டும்
என்ற ஆசை.
லோபம் என்பது
கிடைத்த பொருளை எக்காரணம்
கொண்டும் செலவு செய்ய மனமில்லாமை.
64.
கே:
ப்ராம்ஹணனுக்கு
தானம் செய்தால் அதனால் உண்டாகும்
பயன் யாது?
ப:
தர்மம்.
65.
கே:
நடிகர்களுக்கு
செய்யப்படும் தானத்துக்கு
பயன் யாது?
ப:
புகழ்.
66.
கே:
சேவகர்களுக்கு
தானம் செய்வது எதற்காக?
ப:
அவர்களை
ரக்ஷிப்பதற்காக.
67.
கே:
அரசர்களுக்கு
தானம் செய்வது (வரி
கொடுப்பது)
எதற்காக?
ப:
பயமில்லாமல்
இருக்க.
வரி கொடுக்காது
போனால் தண்டனை கிடைக்குமே
என்ற பயம் ஏற்படுவதால்.
68.
கே:
ஆத்ம ஸ்வரூபம்
எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது?
ப:
அஞ்ஞானத்தாலும்
அதனால் தோன்றும் பிரபஞ்சத்தாலும்
மறைக்கப்பட்டிருக்கிறது.
69.
கே:சுஷுப்தி
காலத்தில் ஆத்மா ஏன்
பிரகாசிப்பதில்லை?
ப:அப்போது
அஞ்ஞான காரியமான பிரபஞ்சம்
தோன்றாது போனாலும் அஞ்ஞானம்
அழியாமலே இருக்கிற படியால்
ஆத்ம ஸ்வரூபம் பிரகாசிப்பதில்லை.
70.
கே:
சினேகிதர்களை
எதனால் இழக்கிறான்?
ப:
பேராசையால்.
No comments:
Post a Comment