Pages

Monday, May 13, 2013

யக்ஷப்ப்ரச்னம் -7



51.கே: மனிதனால் முக்கியமாக ஆஶ்ரயிக்கப்பட வேண்டியது எது?
: தானம்.
44 – 47 விடா முயற்சி, உண்மை பேசுதல், நல்லொழுக்கம், தானம் இவற்றை அவசியம் பின் பற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. அவற்றுள் தானமே பிள்ளை போல் ஆத்மா என்றும், மனைவி போல் உற்ற துணைவன் என்றும், மழை போல் வாழ்விற்கு சாதனம் என்றும் கருதப்படுகின்ற படியால் அதை அவசியம் செய்ய வேண்டும் என்று 48 – 51 வரை கூறப்பட்டது.

52. கே: தனத்தை சம்பாதிக்க பல சாதனங்களுள் சிறந்தது எது?
: விடா முயற்சி.

53. கே: பொருள்களுள் சிறந்தது யாது?
: அறிஞர்களிடமிருந்து சாஸ்திரங்களின் கருத்தை கேட்டு அறிதல்.

54. கே: லாபங்களுள் உயர்ந்தது எது?
: ஆரோக்கியம்.

55. கே: சுகங்களுக்குள் சிறந்தது யாது?
: திருப்தியுடன் இருத்தல்.

56. கே: சிறந்த தர்மம் எது?
: யாருக்கும் பயத்தை உண்டு பண்ணாமல் அனைவரிடமும் தயையுடனிருத்தல்.

57 .கே: எந்த தர்மம் அழிவற்ற பயனைத் தரக்கூடியது?
: வேதத்தில் உரைக்கப்பட்ட தர்மம்.

58. கே: எதை அடக்கினால் துன்பத்தை அடையாமல் இருக்கலாம்?
:மனதை அடக்கினால் துன்பத்தை அடையாமல் இருக்கலாம்.

59. கே: யாருடைய சினேகம் பயனுள்ளது?
: சாதுக்களுடைய சினேகம் பயனுள்ளது.

60. கே: எதை விட்டால் அனைவருக்கும் வேண்டியவனாக இருக்கலாம்?
:கர்வத்தை விட்டால் அனைவருக்கும் வேண்டியவனாக இருக்கலாம்.
 

No comments: