அப்புறம் மதியம் வீட்டுக்கு வந்து குளிக்க வேண்டும். அந்தணர்களுக்கு மதியம் சூர்ய உபாசனை உண்டு. (மாத்யான்ஹிகம்).
காலை பிரம்ம யக்ஞம் செய்யவில்லையானால் இப்போது செய்யணும்.
பிறகு தேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் செய்யனும். அதாவது தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முன்னோர்களுக்கும் நீரால் அஞ்சலி கொடுத்தல். நீரை பூமியில்தான் வார்க்கணும். அப்படி ஒரு வேளை சந்தர்ப்பம் இல்லையானால் ஒரு பாத்திரத்தில் கொடுத்துவிட்டு பின்னால் பூமியில் கொட்டிவிடலாம்.
இதுவரை பூஜை செய்ய விட்டுபோனால் இப்போது செய்யலாம்.
அடுத்து பஞ்ச மஹா யக்ஞம் என்கிற கர்மாக்களை செய்யணும்.
பித்ருக்களுக்கு, தேவர்களுக்கு, மனிதர்களுக்கு, புழுக்களுக்கு என்று பலவற்றுக்கும் அன்னமிடுதல். அந்தணர்களுக்கு வைச்வதேவம் என்கிற கர்மாவும் உண்டு. (இதை செய்தாலே பஞ்ச மஹா யக்ஞம் ஆகிவிடும் என்று ஒரு கருத்தும், இல்லை அது வேறு என்று ஒரு கருத்தும் இருக்கிறது.)
அக்னியில் ஒரு சமித்தாவது ஹோமம் செய்வது தேவ யக்ஞம்; பித்ருக்களுக்கு உணவளிப்பது பித்ரு யக்ஞம்; பூதங்களுக்கு பலி தருதல் பூத யக்ஞம். மனிதர்களுக்கு உண்விடல் மனுஷ யக்ஞம் என்று சுருக்கமாக சொல்லலாம்.
வைச்வதேவம்: அடுப்பு, உலக்கை/உரல், குழவி/அம்மிக்கல், நீர் பாத்திரம், முறம் மாதிரி சில இடங்கள்ல ஜீவ ஹிம்சை ஏற்படும். (இந்த காலத்துல காஸ்/ எலக்ட்ரிகல் ஸ்டவ், கிரைண்டர், மிக்ஸி, வாட்டர் ப்யூரிபையர் ன்னு சொல்லனுமோ?) இதெல்லாம் பயன்படுத்தாம இருக்கவும் முடியாது. இதுக்கெல்லாம் பிராயச்சித்தமா இந்த கர்மா. சில தேவதைகளை உத்தேசிச்சு அன்னம் இடுவாங்க.
அடுத்து பூத யக்ஞம். பலி இடுதல். நம்ம வீட்டை சுத்தி சில பூதங்கள் இருக்கும். பயப்பட வேண்டாம். அவை அனேகமா நல்லவைதான். மனித உடம்பு அல்லாத உடம்பில இருக்கிறதால பூதம்ன்னு சொல்றோம்.
இந்த கர்மா அவரவர் குல ஆசாரப்படியோ அல்லது அவரவர் சாகையில் எப்படி சொல்லி இருக்கோ அப்படி செய்யணும். என்னா அதுல நிறையவே வகைகள் இருக்கு. நீர் தேவதைகள், ஔஷதி தேவதைகள், வீடு, வீட்டு தேவதைகள், வாஸ்து தேவதைகள், இந்திரன், இந்திர புருஷர்கள், யமன், யம புருஷர்கள், வருணன், வருண புருஷர்கள், ஸோமன், ஸோம புருஷர்கள், ப்ரம்மா, ப்ரம்ம புருஷர்கள், விச்வே தேவதைகள், எல்லா பூத கணங்களும், திவா (நான் இல்லைங்க!) அதாவது பகலில் சஞ்சரிக்கிறவர்கள், நக்தம் - இரவு சஞ்சரிக்கிறவர்கள், வடக்கே ராக்ஷஸர்கள் தெற்கே பித்ருக்கள்- அவ்ளோதாங்க ஆராதிக்கிற பூதங்கள். இப்படி சௌனகர் சொல்லி இருக்கார் . சும்மா ஒரு சாம்பிளுக்கு எழுதினேன்!
:-))
காக்கைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடறதும் இதுலே சேத்துக்கலாம்.
அடுத்து மனுஷ்யயக்ஞம்.
4 comments:
//நம்ம வீட்டை சுத்தி சில பூதங்கள் இருக்கும். பயப்பட வேண்டாம். அவை அனேகமா நல்லவைதான்.//
புதிய தகவலுக்கு நன்னி. இப்ப பல பேர் உணவு கட்டுபாடு இல்லாம உருவத்துல பூதங்கள் மாதிரி தான் இருகாங்க. :))
பல விஷயங்களை படித்து விட்டு பெருமூச்சு வருகிறது. தன்னெஞ்சே தன்னை சுடுகிறது.
deep breathing நல்லதுதான் அம்பி! தினசரி 4-5 தடவையாவது செய்யணும்! நெஞ்சுல ஐஸ் பேக் வெச்சுக்குங்க!
:-))
எதானாலே செய்யறோம்ன்னே தெரியாம யக்னங்களை செய்யறதிலே ஏதேனும் பயனுண்டா?
ஜீவா,எதனாலேயா? எதுக்காகவா?
எப்படி இருந்தாலும் பலன் உண்டுதான்.
எந்த கர்மாவுமே சங்கல்பம் செய்து கொண்டுதானே செய்கிறேம்? சங்கல்பத்துக்கு பொருள் தெரியாம போகலாம்தான். அப்ப கேட்டு தெரிஞ்சு கொள்ளணும். அப்படி தெரியும்போது அதில ஈடுபாடு அதிகமாகி பலன் அதிகமாக இருக்கும்.
இப்படி செய்வது தர்மம், பெரியவர்கள் செய்ய சொல்லி இருக்கிறார்கள், அதுக்காகவே செய்யணும்ன்னு நினைச்சு செய்தாலும் பலன் சரியாக இருக்கும்.
Post a Comment