Tuesday, June 10, 2008
கர்ம வழி -சம்ஸ்காரங்கள்
பக்தி பற்றிய பதிவுகளை இப்ப நிறுத்திக்கறோம். தற்காலிகமாதான். இன்னும் நிறைய விஷயங்கள் பார்க்கலை. அது எல்லாம் அடுத்த சுற்றில பிழைத்திருந்தால் பார்க்கலாம்.
அடுத்த வழியான கர்ம வழியை இப்ப பார்க்கலாம்.
இதில் கொஞ்சம் சரியான புரிதல் வேண்டி இருக்கு.
பக்தியோ எல்லாருக்கும் பொதுவானது. அரசனுக்கு ஒரு பக்தி ஆண்டிக்கு ஒரு பக்தி இல்லை. ஏன்னா பக்திக்கு முக்கியமா வேண்டிய மனசை பகவான் எல்லாருக்குமே கொடுத்து இருக்கான்.
கர்மா அப்படி இல்லை. செயல்கள் முக்கியமானதாலே அதற்கு தேவையான அறிவு, சக்தி, பணம் எல்லாம் பொருத்து, யார் யாருக்கு என்ன என்ன செய்கைகள் ன்னு வரையறுத்து வச்சிட்டாங்க. பெரிய பெரிய வேலைகளா போனபோது இன்னின்னாருக்கு இன்னின்ன வேலைன்னும் வரையறுக்க வேண்டி இருந்தது. இது ஊர் கூடி தேர் இழுக்கிறதுதான். தேர் ஓடி நிலைக்கு வரதுதான் முக்கியம். யார் இழுக்கிறாங்க என்பது இல்லை. அவரவர் உடல், புத்தி, பண பலத்துக்கு ஏற்ப அவரவர் பங்கு நிர்ணயம் செய்தாங்க. இதுவே வர்ணாஸ்ரம தர்மமாக இருக்கு. அந்த அந்த இடங்கள்ல தேவையானதை சுட்டிக்காட்டறேன்.
பாரம்பரியமா கர்மா என்பதை அந்த அந்த வர்ணத்துக்கு உரிய தர்மங்கள் பின்னணிலேயே எடுத்துக்கணும்.
ஹிந்துக்களுக்கு நாற்பது சம்ஸ்காரங்கள்னே விதிச்சாங்க.
(அதென்னப்பா சம்ஸ்காரம்? பண்புப்பதிவு.)
இந்த சம்ஸ்காரத்தோட நிலைமை இப்ப எப்படியிருக்குன்னு பாக்கலாமா?
முதல்ல ஒரு பட்டியல் போடலாம்
கர்பாதானம் - சந்ததி பெற உடல் உறவு.
பும்ஸவனம்
சீமந்தோன்நயனம் என்கிற பிறக்கப்போகிற குழந்தைக்கான கர்மா
ஜாதகர்மா என்கிற குழந்தைக்கான கர்மா
நாமகரணம் - பெயர் வைக்கிறது
அன்ன ப்ராசனம் - முதல் முதல் அன்னம் ஊட்டுகிறது
சௌளம் என்கிற குடுமி வைக்கிற கர்மா
உபநயனம் என்கிற வேத அத்தியயனம் செய்ய தகுதி பெறும் கர்மா
ப்ராஜாபத்ய விரதம்
ஸௌம்ய விரதம்
ஆக்னேய விரதம்
வைச்வதேவ விரதம்
அவை எல்லாம் அந்த அந்த வேத காண்டங்களை அத்தியயனம் செய்ய தகுதி வளத்துக்கிற கர்மாக்கள்.
ஸமாவர்தனம் பிரம்சர்ய ஆசிரமத்தை விடுகிற கர்மா
விவாஹம் அதாங்க "கல்யாணம்"
தேவ யக்ஞம்
பித்ரு யக்ஞம்
மனுஷ்ய யக்ஞம்
பூத யக்ஞம்
ப்ரம்ஹ யக்ஞம்.
{இதெல்லாம் என்னன்னு அப்புறம் பாக்கலாம்।}
உணவு சமைத்து செய்கிற பாக யக்ஞங்கள் ஏழு
ஹவிஸ் என்கிற அவி கொடுத்து செய்கிற யாகங்கள் மொத்தமாக ஏழு
சோம ரஸத்தை கொடுத்து செய்கிற ஸோம யாகங்கள் ஏழு.
இறந்த பின் பண்ணுகிற அந்த்யேஷ்டி என்கிற இறுதிக்கடன்
ஆக மொத்தம் 40।
யப்பாடா! பட்டியல் போடவே இந்த பதிவு சரியா போச்சு!
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
காத்திருக்கோம். ஒவ்வொண்ணுக்கும் விரிவான விளக்கம் தேவைப்படும்.
விரிவாகவா?
போச்சுடா! விவாஹம் பண்ணி வைக்கிறதுக்குள்ள.....
ம்ம்ம்ம்ம்...பாக்கலாம்.
ம்ம், நானும் போன வாரம் கொஞ்சம் பிசியாகி விட்டேன். எல்லாம் கர்ம பலன் தான். :))
அதென்ன பூத சம்ஸ்காரம்?
//நாமகரணம் - பெயர் வைக்கிறது
//
இது வருகிற ஞாயிறன்று. :))
உங்கள் இமெயில் ஐடி தெரியலை. கீதா மேடம்/மெளலி அண்ணாவிடம் வாங்கிருக்கனும். தவறு தான்.
@geetha madam, என்ன கீதா மேடம், சித்திரம் எல்லாம் பேசி இருக்கு போல? இன்னோரு கடையா? சரி தான். :))
அதென்ன டிஸ்ப்ளே பெயர் இங்க்லீஷ்ல with spelling mistake in sambu mama name? அதனால பின்னூட்டம் கிடையாது. :p
Diva anna, இங்க வந்து மொக்கை போட்டதுக்கு மன்னிப்பு.
அம்பி, பாராட்டுக்கள். குழந்தைக்கு ஆசீர்வாதங்கள்.
இப்பதானே கல்லிடை குறிச்சி போனீங்க? கொஞ்சம் முன்னாலேயே ஆயிடுத்தோ?
பூத யக்ஞம் பொறுத்து இருந்து பாருங்க.
உங்க ஐடி வாங்கிட்டேன். மெயிலறேன்.
அம்பி இங்க மொக்கை போட்டதை கூட மன்னிக்கலாம். திவா (TV) ஐ diva ஆக்கினதைதான் மன்னிக்க முடியாது!
:-))
சூப்பர்..தொடருங்க...எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு... இதுல...:))
/*ஹிந்துக்களுக்கு நாற்பது சம்ஸ்காரங்கள்னே விதிச்சாங்க*/
Is it for all varnaas?
I think its only for brahmins.
Now a days the problem is people of different varnas dont know what exactly their practices in the spritual community. For example brahmins know what they need to do as per sharstra.But for other varnas they dont know. can you please summarize the practices to be followed as per varnas instead of a generic one?
- kanda mani kandan
//Is it for all varnaas?
I think its only for brahmins.//
no, it is for all hindus.
// Now a days the problem is people of different varnas dont know what exactly their practices in the spritual community.//
it is a real problem. most practices are followed- in many cases more that "brahmins" as far as i know. only they dont know that it is as per shastra. they follow tradition and therefore usually right.
// For example brahmins know what they need to do as per sharstra.//
do they?
of course the sastras are available. vaidyanatha dikshitiiyam compiles all dharma sastras. if you read it you will realise it is common to all. while it is a must for brahmins it not not so strict for others. but what is and what is not a must- that is not easily understood.
// But for other varnas they dont know. can you please summarize the practices to be followed as per varnas instead of a generic one? //
i did make an effort in this direction. most practitioners are wary of me (i guess it is because they are not very confident of their knowledge.) i am yet to find someone who is confident to answer my questions.
so as of now the way is: follow traditions of the family. catch hold of an elder in the family and ask about the practices. //
thanks for sharing views. most welcome to comment on my pages.
please also note that it is only in karma yoga that such differentiation is prescribed.
no such differentiation for bhakti, raja gnana yogas.
Post a Comment