Friday, June 13, 2008
கர்மாக்கள் வகை
கர்மாக்கள் சிலது தினசரி செய்ய வேண்டியவை. இத நித்திய கர்மாங்கிறாங்க. சிலது அப்பப்ப செய்ய வேண்டியவை. இவை நைமித்திய கர்மாக்கள்। பிறந்த நாள் மண நாள்- ஆமாங்க! மாரியேஜ் அனிவர்சரி வைதிக விசேஷமானது- அப்படி பலதும்। சிலது சில விஷயங்களுக்கு ஆசை பட்டுகிட்டு அதுக்குன்னு செய்கிறது। உதாரணமா நோய் தீரணும் கல்யாணமாகணும் குழந்தை பிறக்கணும் இப்படின்னு சிலது. இதெல்லாம் காம்ய கர்மா.
சொல்லப்போற பல விஷயங்கள் பழக்கம் போயிட்டாலும் ஓரளவு எல்லாத்தையும் சொல்லத்தான் போறேன். செய்யறோமோ இல்லையோ முதல்ல தெரிஞ்சுப்போமே. அப்புறமா தேவையா இல்லையா முடியுமா முடியாதான்னு பாத்துக்கலாம்.
நம்ம பெரியவங்களும் நம்மோட ஒவ்வொரு செயலையுமே இறையுணர்வோட இணைச்சு இருக்காங்க।காலை ஏர்லி மார்ணிங் எய்ட் ஓ க்ளாக் எழுந்துக்கிறதுலிருந்து ஒவ்வொண்ணுமே.
வழக்கம் போல இத படிக்கிறப்ப இதெல்லாம் நம்மால முடியாதுப்பா ன்னு தோணும். நானும் வழக்கமான பதிலை சொல்றேன். முடியாதுன்னு நினைக்காம எவ்வளவு முடியும் னு பாப்போம்.
காலை சூரியன் உதயமாகும் முன்னே வானம் சிவப்பா இருக்கில்லையா. அதுக்கு அருணோதய காலம்னு பேர். அந்த நேரத்துலேயே குளிக்கிறது சிறப்பானது. ஆமாம் குளிக்கிறது கூட ஒரு கர்மாதான். புனிதமான நதிகளிலே தீர்த்தங்களில சில விசேஷமான காலங்களில குளிக்க சங்கல்பமே உண்டு.
புறத்தூய்மை நீரான் அமையும்ன்னு சொல்லி இருக்காங்களே.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//காலை ஏர்லி மார்ணிங் எய்ட் ஓ க்ளாக் எழுந்துக்கிறதுலிருந்து ஒவ்வொண்ணுமே.//
sari than, May be in Cuddalore, early morning, means 8-00 A.M., ????????????????
நித்திய கர்மா,
நைமித்திய கர்மா
காம்ய கர்மா,
தனித் தனியா எடுத்துச் சொன்னால் நல்லா இருக்கும்.
நித்ய/நைமித்ய/காம்ய கர்ம விளக்கங்கள் மிக எளிதா புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் இருக்கு...நன்றி..
ஸ்வயம்வரா பார்வதி ஹோமம் பண்ணினா அது காம்யம் :))
//சொல்லப்போற பல விஷயங்கள் பழக்கம் போயிட்டாலும் ஓரளவு எல்லாத்தையும் சொல்லத்தான் போறேன். செய்யறோமோ இல்லையோ முதல்ல தெரிஞ்சுப்போமே. அப்புறமா தேவையா இல்லையா முடியுமா முடியாதான்னு பாத்துக்கலாம்.//
மிகச் சரி....ஒரு அறிமுகம் என்ற அளவிலாவது இருக்கட்டும்...
//நம்ம பெரியவங்களும் நம்மோட ஒவ்வொரு செயலையுமே இறையுணர்வோட இணைச்சு இருக்காங்க//
உண்மைதான்.
//காலை ஏர்லி மார்ணிங் எய்ட் ஓ க்ளாக் எழுந்துக்கிறதுலிருந்து ஒவ்வொண்ணுமே.//
அம்பி/கீதாம்மாவையெல்லாம் ஏன் இப்படி வாருகிறீர்களோ தெரியல்ல :))
//வழக்கம் போல இத படிக்கிறப்ப இதெல்லாம் நம்மால முடியாதுப்பா ன்னு தோணும். நானும் வழக்கமான பதிலை சொல்றேன். முடியாதுன்னு நினைக்காம எவ்வளவு முடியும் னு பாப்போம்.//
இது தான் என் குறிக்கோளும்...என் முயற்சியை நானும் அதிகப் படுத்திக் கொண்டேதான் இருக்கேன். உங்களுக்கும் அது தெரியும். :))
//காலை சூரியன் உதயமாகும் முன்னே வானம் சிவப்பா இருக்கில்லையா. அதுக்கு அருணோதய காலம்னு பேர். //
இதனால் தான் "அருணகிரண ஜாலை...", "அருணம் கருணாகர" எல்லாம் :))
//அந்த நேரத்துலேயே குளிக்கிறது சிறப்பானது. ஆமாம் குளிக்கிறது கூட ஒரு கர்மாதான். புனிதமான நதிகளிலே தீர்த்தங்களில சில விசேஷமான காலங்களில குளிக்க சங்கல்பமே உண்டு.//
சங்கல்பம் மட்டுமா?, சூக்தமே இருக்கு இல்லையா திவாண்ணா?..அதென்ன அகமர்ஷணமா? :))
//தனித் தனியா எடுத்துச் சொன்னால் நல்லா இருக்கும்.//
சொல்கிறேன்.
முதல்ல நித்திய கர்மாக்கள். அப்புறமா தொடர்ந்து வரும்.
//சங்கல்பம் மட்டுமா?, சூக்தமே இருக்கு இல்லையா திவாண்ணா?..அதென்ன அகமர்ஷணமா? :))//
சங்கல்பம், அங்கமாக தர்பணம் சிகோதகம்,[சிகையிலிருந்து பிருக்களுக்கு நீர் பிழிந்து விடுவது. சிகையே இல்லாதப்ப என்ன செய்யறது?] ;-)) வாஸோதகம் = இடுப்பில் கட்டிய துணி, மேல் துணிகளை மந்திரம் சொல்லி பித்ருக்களுக்கு பிழிந்து விடுவது, பொது நீர் நிலைகளில் குளித்தால் யக்ஷ்ம தர்பணம் அத்தனையுமே உண்டு!
Post a Comment