இப்படி ஒரு மொக்கை போடணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். இன்னிக்கி நேரம் இன்மையால் பதிவு எழுத முடியலை. அதனால இந்த மொக்கை.
அதாவது ஆன்மீகம் என்கிறது ரொம்பவே பெரிய சப்ஜெக்ட் . இதுல அடிப்படையான விஷயங்கள் மட்டுமே பாத்துகிட்டு போறோம். பல விஷயங்களை எவ்வளவு தூரம் சொல்கிறது என்பதுல அடிக்கடி தயக்கம் வருது.
அதனால என்ன யோசனை செஞ்சேன்னா இதை பத்தி கவலை படாம எழுதறது. யாருக்கானா ஒரு விஷயம் பத்தி அதிகம் தெரிஞ்சா நல்லா இருக்கும்ன்னு நினைச்சா இந்த பதிவுல ஒரு பின்னூட்டம் போடலாம். அத அப்புறமா பட்டியல்ல சேத்துடுவேன். அந்த விஷயம் பத்தி எப்ப நேரம் இருக்கோ அல்லது அவசியம்ன்னு தோணுகிறதோ அப்ப அதைப்பத்தி பதிவு போடுவேன்.
இதுக்கு லிங்க் அப்புறமா பொதுவாகவே போட்டுடலாம்.
பட்டியல்ல முதல்ல அம்பி முன்னாலேயே கேட்ட ...
௧. நாதோபாசனை
௨. அதிதிகளுக்கு எப்படி உணவு பறிமாற வேணும்?
அப்புறம் மௌலி ஏதோ கேட்ட நினைவு. நீங்களே சொல்லறீங்களா, இல்லை தேடிப்பாக்கணுமா, மௌலி?
3 comments:
நேயர் விருப்பமா??? நடத்துங்க, நடத்துங்க!!!!
சூப்பர். ஒரு பக்கத்துல எழுதி மங்களம் பாடிட வேண்டாம். முதலில் ராக ஆலாபனை பண்ணி, பல்லவி பாடி, சரணங்கள் கடந்து, ஸ்வர சஞ்சாரம் செஞ்சு, முடிஞ்சா தனியாவர்த்தனத்துக்கு இடம் குடுத்து மீண்டும் பல்லவி வந்து முடிக்கவும்.
(கிழிஞ்சது கிருஷ்ணகிரி) :))
//நேயர் விருப்பமா??? நடத்துங்க, நடத்துங்க!!!!//
என்ன எங்கயோ தீயற வாடை வருதே.
//என்ன எங்கயோ தீயற வாடை வருதே.//
சாரி, திவா, இதுக்குப் பதில் சொல்லாம இருக்க முடியலை!! :P
@அம்பி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எங்கே தீயறதுனு எனக்குத் தெரியும்!!!!
Post a Comment