Pages

Monday, June 30, 2008

உண்ணல் (தொடர்ச்சி)



வாய் கொள்கிற அளவு எடுத்துக்கணும். அதை அப்படியே வாயில் இடணும். வாய்ல போட்டது திருப்பி இலைக்கு வரக்கூடாது. அதிகமாக எடுத்து வாயில போட்டு மீந்ததும், கடித்து மீந்ததும் இலைக்கு வரக்கூடாது.
சத்தம் போட்டு உறிஞ்சி கடித்து சாப்பிடக்கூடாது. இது போல சிலதை எடிகெட்ஸ் னு இப்ப கடைபிடிக்கிறாங்க.
தண்ணீரை தூக்கியே குடிக்கணும். குடித்து மீந்ததும், எச்சில் பட்டதும் திருப்பி குடிக்க உகந்தது இல்லை.

பலரும் பந்தியில சாப்பிடும் போது நடுல யாரும் எழுந்து போகக்கூடாது. அப்படி எழுந்தால் பந்தி முழுதும் எச்சிலாகும். ஒரு வேளை அவசியம் எழுந்துக்க வேண்டினால் பந்தியை பிரித்துவிட்டு எழுந்துக்கணும்.
சாப்பிடும் போது ஒத்தரை ஒத்தர் தொடக்கூடாது. இடது கையால் தானே பறிமாறிக்கொள்ளக்கூடாது. அப்படி செய்தா அந்த பாத்திரமும் எச்சிலாகும்.

சாதாரணமா இடது கையால எதுவும் குடிக்கக்கூடாது. சாப்பிடும் போது விதி விலக்கு. வலது கையால இலையை தொட்டுக்கொண்டு இடது கையால தண்ணீர் குடிக்கலாம்.

உப்பு, ஊறுகாய், காய்கறி, நெய், எண்ணை, பாயஸம் (நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப போட்டது, போடாதது எல்லாமே-) அன்னம் இதெல்லாம் கரண்டி இல்லாம பறிமாறக்கூடாது.

எண்ணையில் பக்குவம் செய்தவற்றை கையால போடலாம். பழம், பட்சணங்களை சிறுவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் போட்டு விட்டே, தான் போட்டுக்கொள்ளலாம்.

பாயஸம், நெய், தேன், தயிர், பழம் எல்லாம் மிச்சமில்லாமல் சாப்பிடலாம். மற்றதில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் வைக்கணும்.

6 comments:

geethasmbsvm6 said...

//(நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மு.ப போட்டது, போடாதது எல்லாமே-) அன்னம் இதெல்லாம் கரண்டியால பறிமாறக்கூடாது.//

கரண்டி இல்லைனா, அண்டாவாலே??????? :P

திவாண்ணா said...

sorry, corrected!
:P

ambi said...

ரெண்டு நாள் ஊர்ல இல்லைனா இவ்ளோ மேட்டரா? என் தம்பியும் சாப்பிடும் போது பேச மாட்டான். அவனுக்கு நான் தான் டிரான்ஸ்லேட்டர், அந்த சமயங்களில்.

- அம்பி 29 :)

என்ன கீதா மேடம், தைரியமா கீதா பாட்டி 75னு போட வேண்டியது தானே? :p

//பாயஸம், நெய், தேன், தயிர், பழம் எல்லாம் மிச்சமில்லாமல் சாப்பிடலாம். //

இந்த லிஸ்ட்டில் கேசரியை சேர்க்காததை நான் பணிவோடு கண்டிக்கிறேன். :p

//கரண்டி இல்லைனா, அண்டாவாலே??????? //

குண்டோதரன் காலத்து அண்டா பழக்கம் இன்னும் மதுரைகாரங்களுக்கு அப்படியே இருக்கு. :p

geethasmbsvm6 said...

//அன்னம் இதெல்லாம் கரண்டி இல்லாம பறிமாறக்கூடாது.//

இது!!!! கண்ணிலே வி.எ. ஊத்திக்கிட்டு இல்லை பார்க்கிறோம்??? நினைப்பிருக்கட்டும்!!!

geethasmbsvm6 said...

// அம்பி 29 :)//

அம்பி 92ன்னு போட்டிருக்கணும், மாத்திப் போட்டிருக்கீங்க, போகட்டும், அண்டாவிலே தான் பாயாசம் வைக்கிறது வழக்கம் மதுரையிலே எல்லாம், உங்க அம்மா சொல்லலை??? :P :P :P

//இந்த லிஸ்ட்டில் கேசரியை சேர்க்காததை நான் பணிவோடு கண்டிக்கிறேன். :p//

நல்லவேளை சேர்க்கலை!! :P

மெளலி (மதுரையம்பதி) said...

ஆம் திவாண்ணா, நமக்காக இல்லைன்னாலும், அதிதிகளுக்கு, வயசானவர்க்களுக்கு என்று சிலவற்றை மீறத்தான் வேண்டியிருக்கு, அது போலவே சாப்பிடும் போது பேசறது தவிர்க்க முடியல்ல.... :)

//குண்டோதரன் காலத்து அண்டா பழக்கம் இன்னும் மதுரைகாரங்களுக்கு அப்படியே இருக்கு.//

ஹல்லோ அம்பி, நான் இந்தபக்கம் வந்து ரொம்பநாள் ஆச்சுங்கற தைரியமா?... மதுரைக்காரங்க அப்படின்னு ஜெனரலைஸ் பண்ணினதை வன்மையா கண்டிக்கிறேன்.. :)

அதுசரி, ஜெரியம்மா எப்படி மதுரைக்காரங்க ஆவாங்க?.....சாம்பு மாமா தஞ்சாவூர்/மைலாடுதுறை பக்கமில்லியோ?...ஓ ஆட்சிமுறையை வச்சு சொல்றீங்களோ? :)