Pages

Thursday, June 26, 2008

அதிதி பூஜை

வைச்வதேவத்தின் முடிவில் வருகிறவன் நல்ல அதிதியாம். அவனை குலம், கோத்திரம், ஆசாரம்,வேதம், சாஸ்திரம் முதலியது விசாரிக்காமல் அதிதி பூஜை பண்ணு என்கிறது சாஸ்திரம். அவனை வியாசராகவே பார்க்கிறாங்க பல ரிஷிகள். இவருக்கு அதிதி பூஜை செய்வது யூபம் (யக்ஞங்கள்ல நடுகிற ஒரு கம்பம்) இல்லாத யக்ஞமே என்கிறாங்க. அதிதி பூஜையாவது எதிர் கொண்டு அழைக்கிறது, களைப்பு தீர தண்ணீர் தருகிறது, கால் அலம்பி விடுகிறது, கையில் ஜலம் கொடுக்கிறது, நடந்து வந்தவன் காலுக்கு தைலம் கொடுக்கிறது (வலிக்கா? தெரியலை) ஆசனம் கொடுக்கிறது, உணவிடுகிறது, களைப்பாற படுக்கை இப்படி விவரிக்கிறாங்க. சாங்கமாக அத்தியயனம் செய்த வேத பிராமணன், ஆச்சார்யன், ருத்விக் (யக்ஞம் செய்விப்பவர்) ராஜா, மாமனார், மாதுலன் (மாமா) ஆகியோருக்கு மது பர்க்கம் கொடுக்கணுமாம் (கடந்த ஒரு வருஷதுக்குள்ள வராமல் இருந்தால்.) மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ தயிரோ சேர்த்தது. எதிர் கொண்டு அழைக்கிறதால சூர்யனும், நல்ல வார்த்தைகளால ஸரஸ்வதியும், நல்வரவு சொல்கிறதால் அக்னியும், ஆசனம் கொடுப்பதால இந்திரனும், கால்களை அலம்புவதால பித்ருக்களும், உணவால பிரஜாபதியும், படுக்கை தருவதால ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்களும் ப்ரீதி அடைகிறங்களாம். இதையே உன் வசதிக்கு தகுந்தபடி பண்ணு; பத்னி மக்களுக்கு குறைவானாலும் பரவாயில்லை; அதிதிகளுக்கும், வீட்டு வேலைகாரர்களுக்கும் கொடுக்காம இருக்காதே என்கி றாங்க. உணவிட முடியலையா தண்ணீர் கொடு; படுக்கை இல்லையா, படுக்க இடம் கொடு போதும்; இப்படி வசதி இல்லாதவங்களுக்கும் சொல்லி இருக்கு. யார் அதிதி பூஜை செய்கிறார்களோ அவர்கள் அடையும் லோகங்களை வேதம் படித்தவன், யாகங்கள் செய்பவன், தபஸ் செய்பவன் கூட அடைவதில்லை ன்னு சாதாதபர் சொல்கிறார். மாலை வைச்வதேவம் போது வராவிட்டாலும் அப்புறமும் வந்தால் அவன் அதிதியே. இவன் சூர்யோடன் எனப்படுவான். இவனை நிச்சயமா மறுக்கக்கூடாது. பாவம் அவன் ராத்திரி வேளையில் எங்கே போவான்? அப்படி செய்தால் பகல் அதிதியை மறுப்பவன் அடைகிற பாவத்தை விட 8 மடங்கு பாபம் சேரும். அதே கிராமத்தில் வசிப்பவனாகவோ ஒரே நபர் இரண்டாவது நாள் வந்தாலோ அதிதி ஆக மாட்டார். ஒரே கிராமத்தில் இருந்து கொண்டு அதிதி போல வேஷம் போடுபவனை நிந்திக்கிறது சாஸ்திரம். அதே போல குலம், கோத்திரம் எல்லாம் சொல்லி அதனால சாப்பாடு போடு என்று கேட்பவன் வாந்தாசீ - வாந்தி எடுத்ததை புசிப்பவன்- ஆகிறான் என்கிறது. அடுத்த ஜன்மத்தில் அன்னமிட்டவன் வீட்டில் பசுவாக பிறப்பான். யார் அதிதி பூஜை செய்யாமல் மறுக்கிறார்களோ அவர்கள் புண்ணியம் அத்தனையும் ஆசையுடன் வந்த அதிதி கொண்டு போகிறான். வந்தவன் பாபங்கள் அனைத்தும் மறுத்தவனுக்கு சேருகிறது. அவன் வீட்டில் பித்ருக்கள் பதினைந்து வருஷங்கள் வர மாட்டார்கள். அவன் என்ன யாகங்கள் செய்தாலும் நூறு குடங்கள் நெய்யால் ஹோமங்கள் செய்தாலும் பலன் கிடைக்காது. இப்படியாக மனுஷ யக்ஞம் பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த காலத்தில் இது சிரம சாத்தியமாக இருந்தாலும் அந்த காலத்தில் எந்த மாதிரி வேல்யூஸ் நம் முன்னோர்கள் வைத்து இருந்தார்கள் என்பது சிந்தனை செய்ய வேண்டியது.

8 comments:

ambi said...

//மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ தயிரோ சேர்த்தது.
//

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

ஒளவையின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

இந்த பதிவு ரொம்பவே இன்பர்மேட்டிவா இருக்கு. (அப்ப போன பதிவுகள்?னு கெளரவம் சிவாஜி மாதிரி மடக்க கூடாது) :p

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம் வருகை!!!!!!

ambi said...

கோலம் செய்கரிமுகத்து தூமணியே

இந்த வரி மிஸ்ஸாயிடுச்சு நேத்து நைட்டு 11.30க்கு தூக்க கலக்கத்துல :(

ambi said...

இன்னிக்கு காலைல சன் டிவிலயும் விருந்தாளிகள் உபசரிப்பு பத்தி ஏலாதி என்ன சொல்லி இருக்கு?னு சாலமன் அய்யா சொன்னார். என்ன ஒரு co-incidence? :))

திவாண்ணா said...

//ம்ம்ம்ம்ம் வருகை!!!!!!//

கிர்ர்ர்ர்ர்ர்
அவ்ளோதானா?

திவாண்ணா said...

//கோலம் செய்கரிமுகத்து தூமணியே//
மிஸ் ஆனதுக்கும் இதுல சாப்பாட்டை பத்தி ஒண்ணும் இல்லைன்கிறத்துக்கும் சம்பந்தம் ஒண்ணும் இல்லையே?
:-))

திவாண்ணா said...

// என்ன ஒரு co-incidence? :))//

உலக மனம் ஒண்ணா இருக்கிறதாலே இப்படி அப்பப்ப நடக்கும்.
:-)

Geetha Sambasivam said...

//கோலம் செய்கரிமுகத்து தூமணியே//


//இந்த வரி மிஸ்ஸாயிடுச்சு நேத்து நைட்டு 11.30க்கு தூக்க கலக்கத்துல :(//

இது மட்டும் என்ன சரியாவா வந்திருக்கு??

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும், இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!"
அம்பி, மறுபடியும் அ, ஆ, விலே இருந்து படிச்சாலும் வருமா சந்தேகம் தான்!!

//ம்ம்ம்ம்ம் வருகை!!!!!!//

கிர்ர்ர்ர்ர்ர்
அவ்ளோதானா?

@திவா, கமெண்ட் போட்டிருக்கேன். :P