Pages

Tuesday, June 17, 2008

தேவ பூஜை



அடுத்து தேவ பூஜை। இறைவனுக்கு நிவேதனம் செய்யாத உணவை சாப்பிடக்கூடாது ன்னு பெரியவங்க சொல்றாங்க. பூஜை நமக்கு கிடைக்கிற நேரத்தை பொறுத்து சின்னதாவோ விஸ்தாரமாவோ வச்சுக்கலாம். இது கல்பங்கள் ன்னு சொல்கிற வழிமுறை புத்தகங்கள்ல சொன்னபடி இருக்குமானா நல்லது। இல்லை நம் வசதி போல அமைச்சுக்கலாம். பக்தி பத்தி பார்க்கிறப்ப வைதேய பக்தி, கிரம பக்தின்னு பாத்தமில்லை? அது போல.

நேரமே இல்லைங்கிறவங்க கூட சாமி படத்துகிட்ட ஒரு விளக்கு ஏத்தி வெச்சு, ரெண்டு வத்தி ஏத்தி புகை காட்டி, மூணு பூ வெச்சு, நாலு உலர்ந்த திராட்சை, கற்கண்டு நிவேதனம் பண்ணி கீழே விழுந்து வணங்கிட்டு போய்கிட்டே இருக்கலாம். இதுக்கெல்லாம் அஞ்சு நிமிஷம் மேல ஆகுமா? மனசு வரணும். :-))


சீரியஸா பூஜை செய்ய நினக்கிறவங்க எவ்வளவு நேரம் கிடைக்குமோ அப்படி பூஜையை அமைச்சுக்கலாம். பஞ்சாதயனப்பூஜையே 2 மணி செய்யலாம்; 15 நிமிஷத்துலேயும் செய்யலாம். எல்லாம் அவரவர் மனசை பொறுத்தது.

எதானாலும் நல்லா யோசிச்சுட்டே இறங்குங்க. பூஜை இறைவனோட சேர்க்கிறத்துக்கு பதிலா கோபம் வரும் சுமையா மாறிடக்கூடாது. அவசரமா அவசரமா பூஜை செய்கிறதுல அர்த்தமே இல்லை.

இங்க பெண்கள்கிட்ட தாங்க்ஸ் வாங்கிகிட்டு ரங்கமணிகள் வயத்தில கொஞ்சம் புளியை கரைக்க போறேன்.

வீட்டு பூஜைய யார் செய்யணும்?
ஆண்கள்தான்.

ஆண்கள் செய்கிற எல்லா கர்மாக்களோட பலனும் மொத்த குடும்பத்துக்கே போய் சேரும். செய்கிறவருக்கு 50% பலன்தான். கர்மாவுக்கு உதவுகிறதாலேயே மீதி மனைவிக்கு போய் சேரும். இந்த விதி ஆண்கள் செய்கிற புண்ணிய காரியங்கள் அத்தனைக்கும் பொருந்தும். அப்ப பாவ காரியங்கள் பண்ணா அதே மாதிரிதானே? அப்படின்னு கேட்டா அப்படி இல்லே. ஆண்கள் செய்கிற பாவ காரியங்கள் பலன் முழுக்க அவருக்கேதான். இது அக்கிரமமா தோணுதா? கொஞ்சம் இருங்க.

சரி பெண்கள் செய்யற பாவ புண்ணியங்கள் பலன் யாருக்கு? புண்ணியங்கள் பலன் அத்தனையும் அவங்களுக்கேதான். போனா போகுது. பாவமும் அப்படித்தானே? இல்லியே! 50% பாபம் அவங்களோட கணவனுக்குதான். எங்க போறீங்க? கொடி தூக்கவா? இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.

5 comments:

Geetha Sambasivam said...

//சரி பெண்கள் செய்யற பாவ புண்ணியங்கள் பலன் யாருக்கு? புண்ணியங்கள் பலன் அத்தனையும் அவங்களுக்கேதான். போனா போகுது. பாவமும் அப்படித்தானே? இல்லியே! 50% பாபம் அவங்களோட கணவனுக்குதான். எங்க போறீங்க? கொடி தூக்கவா? இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.//

யார் வரப் போறாங்கனு பார்க்கலாம்! :)))))))

Jayasree Saranathan said...

Based on Dharma sastras and the way Destiny works, Varahamihira, in the chapter "Stree Prasamsadhyaya" in his book Brihat Samhita has said that the results of all actions done by the couple are shared equally between them. If any one of the couple goes in a wrong direction, the mistake is equal and the resultant papa is shared equally between them. This is applicable to all actions and poojas too.

In this way, it can be deduced that a corrupt person amassing wealth in corrupt ways - is going to be used by his wife and kids. But the wife will get a 50% share in papa of such corrupts ways.

Another instance of such sharing happens in the episode of Sita desiring the golden deer. Knowing the pros and cons of that desire and expressing them too, Rama however went on to fulfill Sita's wish. Since she has desired, the result would have to be borne by Rama too.

However Varahamihira thinks that men geenrally do not bother about this rule. But women are far better in this aspect.(72-12, Brihat samhita)

திவாண்ணா said...

ஜெயஷ்ரீக்கு நல்வரவு.நீங்க தந்த பின்னூட்டங்களுக்கு நன்றி!
ஆமாம் தமிழ் படிப்பீங்கதானே?

மகரிஷிகளின் அபிப்ராயங்களே பல இடங்கள்ல வித்தியாசமா இருக்கும்.வைத்தியநாத தீக்ஷிதீயம் படித்தால் இந்த வித்தியாசங்கள் தெரியும்.

இந்த இடங்கள்ல என்ன செய்கிறது என்ற குழப்பமே வேண்டாம். அவரவர் சூத்திரக்காரர் சொன்ன படி செய்ய வேண்டும்.
அவரவர் சூத்திரக்காரர் நாம் தேடுகிற சமாசாரம் பத்தி ஒண்ணும் சொல்லைனா?
அப்ப சாதாரணமாக போதாயனர் சொல்கிறபடி எடுத்துக்கிறது வழக்கம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வைத்தியநாத தீக்ஷிதீயம் - உங்களிடம் இருக்கா திவாண்ணா?...காப்பி கிடைக்குமா?

திவாண்ணா said...

மௌலி தீக்ஷிதீயம் ரொம்ப நாளா தேடி இப்பதான் பூர்த்தி ஆச்சு. 7 வால்யூம். ஒவ்வொன்னும் சுமார் 400 பக்கம். ஆஹ்னிக காண்டம் மட்டுமே 2 பகுதிகள்.
மோசமான நிலைலதான் இருக்கு.
மின் பதிப்பு ஆக்க ஆசை. பாக்கலாம். கொண்டு வந்து சேத்தவன் அதையும் நிறைவேத்துவான்.

அதுக்கு முன்னால சம்க்ஷேப தர்ம சாஸ்திரம்ன்னு புக் கிடைக்கிறது. அதை படிச்சா தினசரி வாழ்க்கைக்கு தேவையானது தெரிஞ்சுக்கலாம். அதுவே கூட போதும். விரிவா தெரியத்தான் தீக்ஷிதீயம் வேணும்.