Pages

Thursday, June 12, 2008

३ கடன்கள்



மேலே சொன்ன அத்தனையும் பண்பு பதிவுகள் ஏற்பட வாழ்நாள்ல ஒத்தர் செய்ய வேண்டிய கர்மாக்கள். இதெல்லாம் செய்தா என்ன கிடைக்கும்? அந்த அந்த கர்மாக்களுக்கு பலனா சொல்லி இருக்கிறது கிடைக்கும் என்றலும் நாம் முக்கியமா பார்க்க வேண்டியது ஆத்ம குணங்கள் அதாவது பண்புகள் வரும் என்கிறதுதான். அதனாலதான் அதுக்கெல்லாம் சம்ஸ்காரம்ன்னு பேர் வெச்சு இருக்காங்க.

நம்ம எல்லாருமே மூணு கடன்களோட பிறக்கிறோம். தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன். தேவ கடன் எப்படி வந்தது? தேவர்கள் இயற்கை சக்திகள் மேல இருக்கிற ஆளுமையாலே நமக்கு மழை பெய்ய வைச்சு நாம உயிர் வாழ உதவுகிறதால. இதை தேவர்களை ஆராதிப்பதால தீர்க்கணும்.

ரிஷிகள் நமக்கு வேத மந்திரங்களை கண்டு கொடுத்து உதவினதால அவங்களுக்கு கடன் பட்டு இருக்கோம். இத வேதங்களை அழிஞ்சு போகாம காப்பாத்தறதால தீர்க்கலாம். வேதம் கத்துக்க அதிகாரம் /கடமை இருக்கிறவங்க அதை செய்கிறதாலேயும் மற்றவங்களுக்கு சொல்லி கொடுக்கிறதாலேயும் தீர்க்கணும். மற்றவர்கள் இந்த முயற்சிகளுக்கு உடல் உழைப்பு பொருள் உதவி செய்யணும்.

மூன்றாவதா பலரும் சரியா செய்யாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கிற நீத்தார் சடங்குகள்.
இந்த மூணையும் செய்கிற விதங்கள்ல வேறுபாடு இருந்தாலும் எல்லாருமே செய்ய வேண்டியவைதான்.


8 comments:

geethasmbsvm6 said...

ரொம்பவே சுருக்கமா இல்லை???? பேசறப்போ வேணா monosyllable ல் பேசலாம், ஆனால் குறைந்த பட்சம் தெரியாத, அறியாத விஷயங்களைச் சொல்லும்போதாவது கொஞ்சம் விளக்கிச் சொல்லலாமோ?????

திவாண்ணா said...

அதாவது, முதல்லே முடிவு செய்த ஒரே ஒரு பேஜ் டவுன் ல படிக்க முடியனும் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சமா போய் விட்டது. அதனால் திருப்பி கொஞ்சம் முயற்சி செய்து குறைச்சு இருக்கேன். இது ரொம்பவே குறைவுன்னு நினைச்சால் கொஞ்சம் வேண்டுமானால் அதிகம் செய்யலாம். அடுத்த பதிவோட இசையாம போகும்போது இப்படி குறைவு இருக்கவே இருக்கும்.

புரியாத விஷயங்களை அல்லது இன்னும் விளக்கலாம் என்று நினைக்கிற விஷயங்களை குறிப்பிட்டா அது பத்தி விரிவாக எழுதலாம். ஸ்ப்ஜெக்ட் ரொம்ப பெரிசு. அதனால யார் யாருக்கு என்ன தெரியும் அப்படி ஊகிக்க முடியாது.
நன்ஸ்!

ambi said...

இப்ப தான் நேற்றய பதிவும் பார்த்தேன்.

தன்னேஞ்சே தன்னை சுடும்னு சொல்வாங்களே, அதான் இங்கயும்.

என்ன செய்ய?
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை,
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

இங்க பொருளையும் தேட வேண்டி இருக்கு, தேடிய பொருளை வெச்சு அருளையும் தேடலாம்னு நம்பிக்கைல தான் வண்டி ஓடுது.

ஸ்வதர்மத்தை விட கூடாது தான்.

@மதுரையம்பதி அண்ணா, சும்மா இதுக்கு ரீப்பீட்டு போடாம ஒழுங்கா உங்க கருத்தை தெரிவிக்கவும்!னு பணிவோடு கேட்டுக்கறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஜூப்பரு..... :))

திவாண்ணா said...

மௌலி, அம்பி எழுதி இருக்கிறதை பாத்து எழுதுங்க. அப்புறமா நான் எழுதறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//@மதுரையம்பதி அண்ணா, சும்மா இதுக்கு ரீப்பீட்டு போடாம ஒழுங்கா உங்க கருத்தை தெரிவிக்கவும்!னு பணிவோடு கேட்டுக்கறேன்.//

ஏதேது ஒரு கும்பலா கிளம்பியிருக்கற மாதிரி தெரியுது...:))
இதுல என்ன அதிசயமுன்னா டாம்-ஜெர்ரி ரெண்டும் கூட்டு சேர்ந்துட்டாங்க. ஹாஹாஹா

அம்பி பணிவா குனிஞ்சுட்டு அப்படியே வாரப் பாக்குறீங்க பாத்தீங்களா?...

//ஸ்வதர்மத்தை விட கூடாது தான்//

வியாக்யானம் சூப்பர் அம்பி :))

உங்களுக்கும் எனக்கும் தான் திவாண்ணா ஒரு வரி சொல்லியிருக்காரு..

எல்லாம் இருந்தாலும் எவ்வளவு தூரம் ஸ்வதர்மத்தை கடைபிடிக்கிறோம்?...ஸ்வதர்ம கடைபிடிக்கறதுல ஏன் அடுத்த லெவலுக்கு போகக் கூடாது....10 காயத்ரி பண்ற எடத்துல 100 ஆக்க நம் முயற்சி என்ன?...

//இங்க பொருளையும் தேட வேண்டி இருக்கு, தேடிய பொருளை வெச்சு அருளையும் தேடலாம்னு நம்பிக்கைல தான் வண்டி ஓடுது. //

பொருளை எந்த அளவுக்கு நேசிக்கிறோம், அதில் எம்புட்டு காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு ஸ்வதர்மத்துக்கு ரெடியாகிறோம்...இதெல்லாந்தான் நாம் யோசிக்கணும்... :))

மெளலி (மதுரையம்பதி) said...

//புரியாத விஷயங்களை அல்லது இன்னும் விளக்கலாம் என்று நினைக்கிற விஷயங்களை குறிப்பிட்டா அது பத்தி விரிவாக எழுதலாம். //

இது சரிதான் திவாண்ணா...விளக்க வேண்டிய கேள்விகள் பின்னூட்டத்துல கேட்டு, அதுக்கு பதில் சொன்னால் போதும்....பெரிய பதிவுகள் என் போன்றவர்களுக்கு படிக்க கடினமாகும்... :))

(கீதாம்மா, என்னோட இந்த மாதிரி பின்னூட்டத்துக்கு பதிலா 'ரீப்பிட்டேஏஎ' பின்னூட்டமே பெட்டர்ன்னு நினைக்கிறேன்..நீங்க என்ன சொல்றீங்க?) :))

திவாண்ணா said...

//ஏதேது ஒரு கும்பலா கிளம்பியிருக்கற மாதிரி தெரியுது...:))//
பின்னூட்டம் போடுகிறது 4 பேர். இதுல கும்பலா? ஹாஹ்ஹஹஹஹ்ஹஹாஆ!

//இதுல என்ன அதிசயமுன்னா டாம்-ஜெர்ரி ரெண்டும் கூட்டு சேர்ந்துட்டாங்க. ஹாஹாஹா//

எப்பவுமே அவங்க குட்டாதான் இருக்காங்க. அடேடே, கூட்டான்னு எழுதப்போய் இப்படி வந்துருச்சி. பரவாயில்லை good டாதான்னு வெச்சிகலாம்.

மௌலி மத்தபடி நீங்க சொல்கிறதை முழுக்க ஆமோதிக்கிறேன்.
அம்பி, பொருள் அருள் ரெண்டுமேதான் வேணும். அதுக்காக பொருள் சேத்து வெச்சிட்டு அப்புறமா அருளுக்கு வரேன்னு நினச்சா அது மாயை. துர்லபம். அனேகமா நடக்கவே நடக்காது.