Pages

Thursday, June 19, 2008

பூஜை தொடர்ச்சி


இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.....

ஆண்கள் பூஜை செய்ய பெண்கள் உதவணும். பூஜை செய்கிற இடத்தை மெழுகி கோலம் போட்டு, பூக்கள் போன்ற தேவையான பொருட்களை கொண்டு வந்து வைத்து நிவேதனம் செய்ய ஏதேனும் தயார் பண்ணி - இப்படி பல வேலைகளை ஒழுங்கா செய்து இருந்தாதான் நிம்மதியா பூஜையை ரங்கமணி செய்யலாம். இல்லாவிட்டால் எங்கே வில்வம் காணோம், நிவேதனம் கொண்டு வர இவ்வளவு நேரமா ன்னு ஆரம்பிச்சு பல பிரச்சினைகள் துவங்கி பூஜை செய்கிற குறிக்கோளே போயிடும். கடேசில கோபம்தான் மிஞ்சும்.
அதனால பூஜைக்கு உதவற தங்கமணிகளுக்கு 50% புண்ணியம்.

மனைவி செய்கிற புண்ணிய காரியத்திலே இந்த மாதிரி பங்கு ஏதும் இல்லாம போகிற வாய்ப்பே அதிகம். அதனால அவங்க புண்ணியம் முழுக்க அவங்களுக்கே.

மனைவி தப்பு பண்ணா சரியா சொல்லிக்கொடுத்து செய்ய வைக்காத தப்பு ரங்கமணிது. அதானால 50% பாபம் ரங்கமணிக்கு.

ரங்கமணி செய்கிற தப்புக்கு தங்கமணி பாவம், என்ன பண்ணுவா? முழு பொறுப்பு ரங்குக்கு. அதனால பாபம் முழுக்க அவனுக்கே!
என்ன தங்கமணிகளே சரிதானே?

பூஜைகள்ல ஆயிரத்து எட்டு விதங்கள் இருக்கிறதால அதுக்குள்ள இப்ப போகலை. அடுத்ததா...

வேத அத்யயனம் செய்தவர்கள் இதற்கு பிறகு வேத பாடங்களை சொல்லணும். அவரவருக்கு கிடைக்கும் அவகாசப்படி ஒரு பாரா முதல் ஒரு அத்தியாயம் வரை சொல்கிறதால ரிஷி கடன் தீரும்.
வேத அத்தியயனம் செய்யாதவர் இறையுணர்வோட பதிகங்கள், பாசுரங்கள், ஸ்லோகங்கள் என்று தெரிஞ்சத சொல்லலாம்.
இதெல்லாமும் எவ்வளவு நேரம்ன்னு வரையரை இல்லை. முடிந்த வரை அதிகமா சொல்ல முயற்சி செய்யனும்.

பிறகு ஜீவனத்துக்கு பொருள் சேக்க போகணும்।

அப்பாடா இதுக்கெல்லாம் நேரமே கொடுக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன்!

9 comments:

Geetha Sambasivam said...

//பிறகு ஜீவனத்துக்கு பொருள் சேக்க போகணும்।//

??????????????????????? you mean unjavruththi?????

ambi said...

//அப்பாடா இதுக்கெல்லாம் நேரமே கொடுக்க மாட்டீங்களோன்னு நினைச்சேன்!
//

:))))

திவாண்ணா said...

ஏன் உஞ்சவ்ருத்தி? அது சில பிராமணர்கள் கைகொண்டு இருக்கிற தர்மம்.
நாம் பொதுவா எல்லாரையப்பத்தியும் சொல்கிறோம்.
அவரவர் குலத்தொழில் என்பது அந்த நாள் பழக்கம்.
இப்ப அவரவரை பகவான் எங்கே கொண்டு வேலை கொடுத்து வெச்சிருக்கானோ அப்படின்னு பொருள்.

இதை கொஞ்சம் சரியாவே புரிஞ்சுக்குங்க. அவரவர் கர்மா படி பகவான் ஒவ்வொத்தருக்குமே ஒரு வேலை பண்ணி வெச்சு இருக்கான். நாம் நம்ம குல தர்மப்படி இல்லையே வழி தப்பி போயிட்டோமோன்னு பச்சாதாபப்பட வேண்டாம். சிலர் - என் மகன் மாதிரி - திருப்பி வழிக்கு வர பகவானே வழி செய்யறான். பலருக்கு அப்படி இல்லை. கல்யாணம் குடும்பம் ன்னு ஆன பிறகு பாதை திரும்பரது சுலபமில்லை. அதனால சுய தர்மத்துக்கு நம்மால ஆனதை செய்து கொண்டு போகலாம்.

வால்பையன் said...

ஓரமா குதிச்சிகிட்டு இருக்கிற யானை என்னை படிக்கவிடாம பண்ணுது,
கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்லுங்க

வால்பையன்

மெளலி (மதுரையம்பதி) said...

//சுய தர்மத்துக்கு நம்மால ஆனதை செய்து கொண்டு போகலாம்.//

இது!! இதுதான் என்வழி திவாண்ணா... :)

திவாண்ணா said...

வாங்க வால் ஸ்ற்றீட் பையன்.
நல்வரவு!
அலோ ஆனை, நீ சமத்து இல்லியா? கொஞ்சம் குதிக்காம இருக்கியா?...என்னது....ஓஹோ!
வால்பையன் அது தேவையானா அனிமேஷனை டிஸேபிள் பண்ணிக்க சொல்லுது!
இதுக்கிட்டே வம்பு வெச்சுக்க முடியாது, என்ன செய்யலாம்!

Kavinaya said...

//என்ன தங்கமணிகளே சரிதானே?//

சரிதானுங்க :)

geethasmbsvm6 said...

//அவரவர் கர்மா படி பகவான் ஒவ்வொத்தருக்குமே ஒரு வேலை பண்ணி வெச்சு இருக்கான். நாம் நம்ம குல தர்மப்படி இல்லையே வழி தப்பி போயிட்டோமோன்னு பச்சாதாபப்பட வேண்டாம். //

ithu pathi Deivathin Kural il padikka nernthathu. purinjathu. Thank You.

திவாண்ணா said...

நன்றி கவிநயா!
கீதா அக்கா என்ன திடீர்ன்னு ஆங்கிலத்துல!!!! சரி சரி.