குளித்த பின்னே சூரிய உபாசனை। இந்த உலகத்துக்கே சக்தி தரது சூரியன்தான்। அதன் ஒளிலதான் தாவரங்கள் உணவு தயாரிக்குது। இதை சாப்பிட்டு உயிர் வாழ்கிற ஜீவன்கள் அவற்றை உணவா கொள்கிற ஜீவன்கள் இப்படின்னு பாக்கப்போனா எல்லாருமே உயிர் வாழ்கிறது சூரியனாலதான். அந்தணர்கள் ஒரு சந்தியாவந்தனம் என்கிற கடனாகவே செய்தாலும் எல்லாருமே தண்ணீரை சூரியனை நோக்கி வீசி எறிந்து வணங்கி வழிபடலாம்.
பெண்களுக்காக சூரிய உபாசனை திடீர்னு சமீபத்தில கிடச்சது। பொதுவா இருக்கிற அதை இதோ பிடிங்க.
ஒரு முறை ஹிருதயம் வரை செல்லும்படி உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்து விட்டு..
கிழக்கு நோக்கி நிற்கவும்.
பின் வரும் ஸ்லோகங்களை சொல்லி இதமர்க்யம் என்று வரும்பொழுது அர்க்கியம் கொடுப்பது. அதாவது தண்ணீரை இரண்டு கைகளாலும் தாங்கி ஸ்லோகம் சொல்லி முடித்தபின்:
1) நதி முதலிய நீர்நிலை எதிரே இருந்தால் அதில் எறிய வேண்டும்.
2) அல்லது அதற்கு வசதிப்படாவிட்டால், ஒரு சுத்தமான இடத்திலோ பாத்திரத்திலோ விரல்கள் நுனி வழியாக கீழே விட வேண்டும்.
க3ணாதி4ப ஸுராத்4யக்ஷ சிந்தாமணி க3ணேச்'வர
ஸித்3தி4தா3யக விக்4னேச' க்3ரு'ஹாணார்க்4யம் நமோஸ்துதே.
க3ணபதயே நம: இத3மர்க்4யம்.
க3ணபதயே நம: இத3மர்க்4யம்.
க3ணபதயே நம: இத3மர்க்4யம்.
ரஜ்ஜு-வேத்ர-கசா'பாணே காச்'யபே க3ருடா3க்3ரஜ
அர்க்க-ஸூதாருண-ஸ்வாமின் க்3ரு'ஹாணார்க்4யம் நமோஸ்துதே.
அருணாய நம: இத3மர்க்4யம்.
அருணாய நம: இத3மர்க்4யம்.
அருணாய நம: இத3மர்க்4யம்.
ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ' தேஜோராசே' ஜகத்பதே
அனுகம்பய மாம் ப4க்த்யா க்3ரு'ஹாணார்க்4யம் நமோஸ்துதே.
ஸூர்யாய நம: இத3மர்க்4யம்.
ஸூர்யாய நம: இத3மர்க்4யம்.
ஸூர்யாய நம: இத3மர்க்4யம்.
இதன் பிறகு பின் வரும் மந்திரங்களால் பஞ்சாங்க நமஸ்காரம், அதாவது ஸாஷ்டாங்க நமஸ்காரம் போல் உடல் முழுதையும் நிலத்திலிடாமல் மண்டியிட்டு நமஸ்காரம் செய்வது. (பெண்கள் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாகாது, அது உசிதமாயிராது.)
1) மித்ராய நம: , 2) ரவயே நம:, 3) ஸூர்யாய நம:
4) பா4னவே நம:, 5) க2கா3ய நம:, 6) பூஷ்ணே நம:
7) ஹிரண்யக3ர்பா4ய நம:, 8) மரீசயே நம:, 9) ஆதி3த்யாய நம:
10) ஸவித்ரே நம:, 11) அர்க்காய நம:, 12) பா4ஸ்கராய நம:
பின் பிரார்த்தனை:
காம-க்ரோதா4தி3பி4ர்-மூடா4 பாதகம் நு கரோம்யஹம்
ஸர்வ-பாப-க்ஷயம்' க்ரு'த்வா ரக்ஷ மாம் த்3யுமணே ப்ரபோ4
ஆயுர்-ஆரோக்3யம் ஐச்'வர்யம்' ஜ்ஞானம் வித்தம் ப்ரயச்ச2 மே
ஸ்வர்க3ம் அப்யபவர்க3ஞ்ச ஜக3தீச்'வர பா4ஸ்கர
பின் ஒரு முறை உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும்.
சாராம்சம்: ஹே ஸூர்யனே, என் பாபங்களை விலக்கி ஆயுள், ஆரோக்கியம், நோய் நிவர்த்தி, ஐஸ்வர்யம், அறிவு, மோக்ஷம் இவற்றை அருளுவாயாக.
முக்கிய குறிப்பு: இதை வீட்டுக்கு விலக்காக இருக்கும் 4 நாட்கள் செய்யலாகாது.
7 comments:
பெண்களுக்கானது புதியதாக இருக்கிறது...இன்று மொத்தமாக வழக்கொழிந்தவற்றில் ஒன்றோ?..
//பெண்களுக்காக சூரிய உபாசனை திடீர்னு சமீபத்தில கிடச்சது। பொதுவா இருக்கிற அதை இதோ பிடிங்க.//
சின்ன வயசிலே பாட்டி, அப்புறம் மாமியார் எல்லாம் இந்த நமஸ்காரமும், வழிபாடும் செய்து பார்த்திருக்கேன், என்னைப் பொறுத்தவரையில் ஆதித்ய ஹ்ருதயம் மட்டுமே, சூரிய நமஸ்காரம் தினமும் யோகாவில் வர முறைப்படி, அவ்வளவு தான் முடியுது! :(((((
மௌலி, அர்க்யம் கொடுப்பது தெரிந்ததுதான். மந்திரங்கள் இப்ப கிடைத்தவை. வழக்கு விட்டு போனது போலதான் இருக்கு. கீ அக்கா சொல்லறதை பாருங்க. அவங்க பாட்டி மாமியார் செய்தது அவங்க நினைவில் இருக்கு.
ஆதித்ய ஹ்ருதயமும் நல்லதே. அது போதுமே!
குறிப்பா ராமாயணம் எழுதறவங்களுக்கு.
:-))
//முதலிய நீர்நிலை எதிரே இருந்தால் அதில் எறிய வேண்டும்//
அதென்ன "எறிய வேண்டும்" என்கிற வார்த்தை திவாண்ணா?...ஏதும் காரணமில்லாம அப்படி சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்..
நீர் நிலைகளிலும் இடுப்பளவு நீரில் ஒரு மாதிரி, ஆற்றில் கரையில் (நீருக்கு வெளியே) ஒரு மாதிரி என்று எத்தனை விதங்கள்...:))
வேதத்தில் சந்தியாவந்தனம் குறித்து சொல்கையில் அப்படித்தான்"எறிய" வேண்டும் என்று சொல்கிறது. ஆயுதமாக ஆகப் போகிறதல்லவா?
இப்ப தான் கேள்விபடறேன். நன்னி.
ஜகன் மாதா அர்த்தாங்கினி ஆன கதை
இது ரமண மகரிஷி சொன்ன கதை
என் பதிவில் போட்டிருக்கிறேன். பாருங்கள்
Post a Comment